இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வியாழன், 20 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்குப் பற்றிய கருத்துக்கள்

எஸ்.எல். அப்துல் ஹலீம். தலைவர், கணினி விஞ்ஞான சங்கம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம். -- S.L. Abdul Haleem Special Degree In Computer Science Faculty Of Applied Sciences South Eastern University of Sri Lanka உமது தமிழ் புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றிய Blog இனப்பார்த்தேன். மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. உமது சேவைகள் தொடர வாழ்த்துகிறேன்.

  முனைவர் தி. நெடுஞ்செழியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.,(இதழியல்),எம்ஃபில்.,பிஎச்.டி.,பிஜிடி.இதழியல் இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம் ஏவிசி கல்லூரி (தன்னாட்சி) மன்னம்பந்தல் - 609 305. மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு - இந்தியா. அலைபேசி: 94432 14142
 நான் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவிலான மாநாடு அளவில் திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சிப் பட்டறையை சிறப்பாக அமைத்து தந்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  இரா.அ.அரசெழிலன் ஆசிரியர்-நாளை விடியும் தனக்குத் தெரிந்த செய்திகளை யாருக்கும் சொல்லாமல், அவற்றால் தான் மட்டுமே பயன் அடையும் ஒரு பிற்போக்குத் தனம் நம்மிடையே மிகப்பெரும்பாலோருக்கு உண்டு. இந்தத் தன்மையிலிருந்து மிகவும் மாறுபட்டு புதுச்சேரியில் சில தோழர்கள் இணைந்து புதுச்சேரி வலைப்பதிவர் சிரகம் என்ற அமைப்பினைத் தொடங்கி, கடந்த 09.12.2007 அன்று வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை ஒன்றினைப் புதுச்சேரி சற்குரு உணவகக் கூட்ட அரங்கில் மிகமிகச் சிறப்பாக நடத்தினர். தோழர்கள் கோ. சுகுமாறன், இரா.சுகுமாறன், முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு. இளங்கோ ஆகியோரின் முன் முயற்சியிலும் பெரு முயற்சியிலும் இக்கருத்தரங்கமும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.

  திரு தாமரைக்கோ, ஆசிரியர். திசம்பர் 9, 2007 அன்று புதுச்சேரி - சற்குரு விடுதியில் தமிழ்க் கணிப்பொறி (கணினி) வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப் பயற்சிப் பட்டறை தமிழக அளவிலேயே கொடுக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ் மொழி எல்லாத் தளங்களிலும், எல்லாக் களங்களிலும், எல்லா வெளிப்பாட்டு ஊடகங்களிலும் தங்கு தடையின்றி வரவேண்டுமெனில், இப் பயிற்சி எல்லாருக்கும் தரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆங்கிலத்தைத் தெரிந்தவன்தான் அறிவுடையவன்; ஆங்கிலத்தைப் படித்தால் மட்டுமே அறிவு பெறமுடியும் என்ற கோணல் கருத்துகளை யெல்லாம் மாற்றவேண்டுமெனில் கணிப்பொறி மற்றும் அதைச்சார்ந்த ஊடகங்களின் வழியாக ஒரு போரையே நடத்த வேண்டியுள்ளது. இப் பயிற்சி ஒரு தொடக்க நிலையாக இருந்தாலும் தெடர்ந்து செய்யப்படவேண்டியது இன்றையச்சூழலில் மிகவும் ஏற்புடையதாகும்.

  இரா.அழகிரி, தமிழர் தேசிய இயக்கம். இந்த கணினி பயிற்சி பயிலரங்கு மிகச்சிறப்பான முறையில் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. ஓரளவு கணினி பயிற்சி உடையவர்கள் தங்களை மேலும் ஒரு இணைய தளம் தொடங்கி கருத்துக்களை உலகறியச் செய்ய இந்த பயிற்சிப் பயிலரங்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பயிலரங்குகள் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் புரிகிற வகையில் வரும் காலங்களில் எளிமையாக்கி நடத்தப்படவேண்டும்

. மா.தமிழ்ப்பரிதி ஆசிரியர் தமிழகம் இணையம்http://www.thamizhagam.net/ இது போன்ற பயிற்சிகள் கிராமப்புற மக்களும் பயனுறும் வகையில் கிராமங்களில் சென்று பயிற்சி அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி நாளன்று அறிவிக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டும். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை தமிழ்க்கணினி உலகிற்கு நல்லதொரு தொடக்கமாகும். தமிழ்க்கணினி ஆய்வுககளுக்கும் கல்விக்கும் இப்பயிற்சிப்பயிலரங்கு வித்திட்டுள்ளது. தமிழ் இணையத்தினை ஊரக மக்களுக்கு கொண்டு சேர்க்க இச்சிறகம் பாடுபட வாழ்த்துகள்.

  தமிழநம்பி, விழுப்புரம் ஐயா, வணக்கம். 9-12-2007-இல் புதுவையில் நடந்த 'வலைப்பதிவர் பயிலரங்'கில் பயிற்சி பெற்றோரில் நானும் ஒருவன். அமைப்புக்குழுவினர் அனைவரும் மேம்பட்ட - உயர்ந்த - மனவுணர்வுடன் ஈடுபட்டுப் பயிலரங்கைச் சிறப்பாக நடத்தியமை மிகமகிழ்ச்சியாகவும் ஒருவகையில் வியப்பாகவும் இருந்தது! புதுவையிலுள்ள அறிவார்ந்த தமிழிளைஞரை எண்ணி அன்று முழுவதும் இறுமாந்து பெருமித உணர்வுடன் இருந்தேன். பயிலரங்கம் பற்றி 'நற்றமிழ்' இதழில் எழுதுவேன். பயிலரங்கின் பயனாக, நானும் வலைப்பதிவர்களுடன் சேர்ந்துள்ளேன். என் வலை: http://www.thamizhanambi.blogspot.com ஆகும். இரண்டுமுறை நான் சிக்கல் தீர்த்துக்கொள்ள அணுகியபோதும் தயக்கமின்றி ஆர்வத்துடன் உதவினீர்கள். மிகவும் நன்றி. மீண்டும் தேவைப்படின் உங்களை அணுகுவேன். பொறுத்தாற்றுக!-அன்பன், தமிழநம்பி, விழுப்புரம் 9443440401

வெள்ளி, 14 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய மென்பொருட்கள்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக பல்வேறு வகையான மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மென்பொருட்களை வலைப்பதிவர் சிறகத்தின் செயல் இளைஞரான நண்பர் க. அருணபாரதி தயாரித்துள்ளார். வலைப்பதிவர் சிறகத்தில் இரவு பகலாக பணியாற்றி இந்த மென்பொருட்களை அவர் தயாரித்துள்ளார். 
 
அவருக்கு வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மென்பொருள்கள் முதல் வெளியீடாக வெளிவந்துள்ளதால் பயனாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்த பின் சரி செய்து இரண்டாவது வெளியீடாக வெளியிட உள்ளோம். திருவள்ளுவர் தமிழ் எழுதி முதலில் இருப்பது திருவள்ளுவர் தமிழ் எழுதி இதில் தமிழ் 99, பாமினி எழுத்துருக்களின் விசைப்பலகையை தேர்வு செய்து நேரடியாக தட்டச்சு செய்யலாம். 
 
 
 
இணணய இணைப்பி இரண்டாவது படத்தில் இருப்பது தமிழ்த் தளங்களின் இணைப்புகளை வழங்கும் இணணய இணைப்பி மென்பொருள் இதனை கணினியில் நிறுவினால் தமிழ் இணையப் பக்கங்களை எளிதில் இணைப்பு வழங்குகிறது.
 
 
 
எழுத்துருக்கள் நிறுவி மூன்றாவது படத்தில் உள்ளது எழுத்துருக்கள் நிறுவி இதனை பயன்படுத்தி எழுத்துருக்களை நிறுவ முடியும். 
 
 
 
நமது கணினி நான்காவது உள்ளது நமது கணினியை பற்றி அறிந்து கொள்வதற்கான மென்பொருளாகும். இதைப் பயன்படுத்தி தங்கள் கணினியைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 
 
 
 
தமிழ் ஓசை அய்ந்தாவதாக உள்ள மென்பொருள் தமிழ் ஓசை இந்த மென்பொருளை பயன்படுத்தி இசை கேட்கலாம். படங்களைப் பார்க்கலாம். 
 
 
 
 
முகவரி குறிப்பேடு ஆறாவதாக உள்ளது முகவரி குறிப்பேடு இதனைப் பயன் படுத்தி முகவரிகளை சேமிக்கலாம். 
 
 
 
 
இந்த மென்பொருட்கள் அனைத்தும் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக அளித்துள்ளோம். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தளத்தில் இலவசமாக விரைவில் வெளியிடப்படும். இந்த மென் பொருட்களில் ஒருங்குறி எழுத்துறுவை பயன்படுத்தி தயாரித்துள்ளமையால் இதற்கு WINDOWS XP யின் வரிவடிவ எழுத்துக்களுக்கான ஆதரவை நிறுவினால மட்டுமே இயங்கும். மேலதிக விவரம் தேவை எனில் arunabharthi@gmail.com அல்லது rajasugmaran@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பார்வையாளர்கள் கருத்து -1

    புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பட்டறை நிகழ்ச்சிகள் பற்றி வலைப்பதிவர்களின் கருத்துக்களின் முதல் தொகுப்பின் இணைப்பு :
  1. புதுச்சேரி ( பாண்டி) வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு
  2. - தமிழ்வெளி செய்திகள்
  3. புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது - வினையூக்கி
  4. நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து - ஓசை செல்லா
  5. புதுவைப் பட்டறை ஒரு மைல்கல் - வினையூக்கி
  6. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை தமிழ்வெளி செய்திகள்
  7. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை 2007 - அன்பே சிவம்
  8. புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்! - ஓசை செல்லா
  9. தமிழ் இனி மெல்ல வளரும். புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிலரங்கு குறித்து என் பார்வை - தூரிகா வெங்கடேஷ்
  10. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செய்தி ! - ஆயுத எழுத்து
  11. புதுச்சேரி வலைபதிவர் பயிற்சிப் பயிலரங்கம் - புகைபடங்கள்! - ஆயுத எழுத்து
  12. புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1 - ஓசை செல்லா
  13. தமிழகம் ஊடக நிறுவனம் - அறிவிப்புகள்
  14. கூகுல் குழும நண்பர்கள்
  15. கூட்டாஞ்சோறு! - வலையுலக ஸ்பெஷல்! - லக்கிலுக்
  16. புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள் - மா.சிவகுமார்
  17. பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு - ஓசை செல்லா
  18. புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ! - க.அருணபாரதி
பதிவர் கருத்துக்கள் - பகுதி-2. தொடரும்...

வியாழன், 13 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையின் வெற்றிக்கு பின்னால்...

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிவெற்றி பெற்றதாக கருதினால் அந்த வெற்றியின் பங்காளர்கள் நீங்கள் தான். ஏனெனில் இந்த வெற்றியை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தனிப்பட்ட முயற்சியின் வெற்றி என்று கருத இயலாது.
 


ஏனெனில், நாங்கள் தமிழில் ஏற்கனவே பலரின் உழைப்பின் விளைவாக இலவசமாக வழங்கப்பட்ட மென்பொருள்களின் தொகுப்பைத் தான் வழங்கி இருக்கிறோம். எனவே, இந்தப் பட்டறையின் வெற்றி என்பது, தங்கள் மென்பொருட்களை இலவசமாக வழங்கினால் பலர் அதனைப் பயன்படுத்துவார்கள். இதனால் கணினியில் தமிழின் பயன்பாடு அதிகப்படும் என்று கருதி இலவசமாக மென்பொருள்களை அளித்துவரும் தமிழா முகுந்த், குறள், முரசு அஞ்சல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகத் தான் கருத முடியும்.

 அதே போல தமிழில் செய்திகளைத் திரட்டித்தரும் பணிகளைப் பல்வேறு திரட்டிகள் செய்து வருகின்றன. இந்த திரட்டிகள் இலவசமாக செய்திகளைத் திரட்டி அளிக்கும் நிலையில், புதுச்சேரி பயிற்சிப் பட்டறையின் மூலம் மேலும் பலர் தளங்களில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் மேலும் பல செய்திகளை திரட்டித் தரும் வாய்ப்புகளை பெறுகின்றன. எனவே, இந்த வெற்றியானது தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்ப்பதிவுகள், திரட்டி, தமிழ்.கணிமை உள்ளிட்ட திரட்டிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றியுமாகும். நண்பர்கள் ஓசை செல்லா, மா.சிவக்குமார், லக்கிலுக், பாலபாரதி, நந்தக்குமார், மற்றும் வினையூக்கி அகியோர் ஏற்கனவே இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தி, பயிற்சிப் பட்டறையில் கிடைத்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் இல்லாமல் இந்தப் பயிற்சி பட்டறையின் வெற்றி இல்லை.

  உபுண்டு இராமதாஸ் அவர்களின் லினக்ஸ் பற்றிய தகவல் மிகவும் பேசப்பட்டதாக சிலர் தெரிவித்தனர். எனவே அவரின் வருகையும் இந்த பட்டறையின் வெற்றிக்கு முக்கியத்துவம் பெறுகிறது. 


 இவை இல்லாமல் தொலைபேசியில் எங்களுக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி எங்கள் பட்டறை செவ்வனே செயல்பட தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஆலோசனை வழங்கிய தமிழ்மணத்தின் முன்னாள் நிர்வாகியும் இன்னாள் ஆலோசகருமான திரு.காசி ஆறுமுகம் அவர்களின் உதவி, ஆலோசனை இல்லாமல் இந்தப் பட்டறையின் வெற்றி இல்லை.

 இவை மட்டுமல்லாது தங்கள் தளங்களில் பல நண்பர்கள் பல செய்திகளை அளித்து தமிழ்ப் பதிவர்களைச் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இது போன்று பல்வேறு உதவிகளை மறைமுகமாகவும் பங்களிப்பாக அளித்த தமிழ் வலைப்பதிவர்கள் இல்லாமல் இந்தப் பட்டறையின் வெற்றி இல்லை.


 இப்பட்டறை சிறப்பாக நடக்கவேண்டும் என்று பொருளுதவி அளித்த "புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள், "தமிழ்மணம், தமிழ்வெளி, ஹோப் , தமிழா" நிறுவனங்கள் மற்றும் ஒரிசாவிலிருந்து நண்பர் இராமசெயம், கடலூரிலிருந்து நண்பர் முகு (முகுந்தன்) மற்றும் வலைப்பதிவர் சிறகத்தின் பல நண்பர்கள் அளித்த நிதி இல்லாமல் இந்த பட்டறையின் வெற்றி இல்லை.

  புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் நண்பர்களின் பங்களிப்புகள் இரா. சுகுமாரன், கோ.சுகுமாரன் மற்றும் நா. இளங்கோ, மு.இளங்கோவன் ஆகியோர் மட்டுமே அங்கு வந்திருந்த சிலருக்கு தெரிந்திருந்தது. //இரண்டு சுகுமாரன்களும் இரண்டு இளங்கோக்களும் பம்பரமாகச் சுழன்று பட்டறையை மெருகேற்றினர்.// என்று ஓசை செல்லா கூட தனது பதிவிலே எழுதியிருந்தார். ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் தம்மை அதிகம் வெளிபடுத்திக் கொள்ளாமல் சிறப்பானப் பணிகளைச் செய்து முடித்துள்ளவர்கள்.

அரங்கத்தின் முன் நாங்கள் தோன்றியதால் நாங்கள் தான் எல்லாவற்றையும் செய்தோம் என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாகி இருந்தது என்பதை சில பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்த கொண்டோம். ஆனால், மென்பொருட்கள் தயாரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி டிசம்பர் 2, 2007 காலை 10.00 முதல் மறுநாள் காலை 6.00 மணிவரை இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து சில மென்பொருட்களை சிறகத்தின் வெளியீடாக வெளிவர உழைத்த நண்பர் க.அருணபாரதி இல்லாமல் இந்த வெற்றி கிடைக்கவில்லை.

அவரின் பணியைப் பதிவர் பட்டறையில் முழுமையாகப் பதிவு செய்யவில்லை. குறுந்தகடு தயாரிப்பில் நண்பர் கல்பீஸ் அவரால் இயன்றவரை சிறப்பாக செய்திருந்தார்.

 தூரிகா-வெங்கடேஷ் பதிவர் பயிற்சிப் பயிலரங்குப் பற்றிய முக்கிய நிகழ்வுகளில் செயல்பட்டவர். பயிற்சிப் பட்டறை பற்றிய முடிவுகள் செய்தபோது பங்கேற்க இயலாமல் போனாலும் தனது கருத்தை தொலைபேசியிலேனும் பதிவு செய்து விடுவார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பாளர்கள் பதிவிற்காக தனது தூரிகா இணைய பக்கங்களில் இடம் ஒதுக்கி பதிவிற்கான ஏற்பாடுகளை செய்தவர். சென்னைப் பதிவர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். மேலும், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய இணைய தளத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.

 வீரமோகன் குறிப்பேடு, குறிப்பேடு அச்சு, குறுந்தகடு, சுவரொட்டி, அரங்க விளம்பர பலகை உள்ளிட்ட பணிகளுக்குப் பொறுப்பேற்று இவர்  செவ்வனே செய்திருந்தார். இவருக்கு வழங்கிய பணியைச் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும், அக்கரையோடும் செய்து முடித்திருந்தார். தன்நலம் பாராத இவர்களைப் போன்ற சிலரின் உழைப்பு மிகவும் மதிக்கத் தக்கதாகும்.

ம.இளங்கோ. எங்களின் எல்லாப் பணிகளிலும் இவர் இல்லாமல் இல்லை என்று செல்லும் அளவுக்கு எல்லாப் பணிகளில் பங்கேற்று செயல்பட்டவர் தான் ம.இளங்கோ.

ஓவியர் இராசராசன் வலைப்பதிவர் சிறகத்தின் சின்னத்தை மிகச்சிறப்பாக வரைந்து தனது திறமையை வெளிப்படுத்தியவர். பட்டறையின் அரங்கத்தின் மையத்தில் வைக்க வேண்டிய விளம்பர தட்டியை தானே வரைந்து கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். அவரின் ஓவியத் திறமையை வெளியிட இயலாத நிலைமைக்கு காரணம் காலம் கருதி முடிவு செய்ய வேண்டியதாயிற்று. தமிழக அளவில் குறிப்பிடத்தகுந்த ஓவியர்களில் முகாமையானவரான இவர்  தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

  இரா. செயப்பிரகாஷ் இவர் தனது பணி இடமாற்றம் காரணமாக தொடக்கத்தில் பங்காற்றிய அளவுக்கு பங்காற்ற இயலவில்லை என்றாலும், இவர் இப்பட்டறை நடப்பதற்கு முதற்கட்டமாக நடந்த மூவர் (இரா.சுகுமாரன், கோ. சுகுமாரன், செயப்பிரகாஷ்) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று முடிவு செய்தவர்களில் ஒருவர்.

 பேராசிரியர் நா.இளங்கோ, பேராசிரியர் மு.இளங்கோவன் இவர்கள் பட்டறை பணிகளின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி முடிவுகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கேற்றவர்கள். கணினி மலர் சரிபார்த்தல், ஒளி அச்சு நகல் இவற்றின் பொறுப்பை இந்த இரண்டு பேராசிரிகளும் தன் பொறுப்பில் செய்து முடித்தனர்.

  கோ.சுகுமாரன் பல்வேறு அமைப்பு ரீதியான பணிகளைச் செய்து வருவதால் சில பணிகளைச் சிக்கல் இல்லாமல் முடிக்க உதவி செய்தவர் இவர். ஒருங்கிணைப்பாளாராக நான் இருந்தாலும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் இவரும் தான். 'பட்டறை நடத்துவது ஒரு திருமணத்தை நடத்துவது போன்ற வேலைகொண்டது' என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், 'ஒரு மஞ்சள் நீர் விழா போல எளிமையாக முடித்துள்ளோம்' என்று பதிவர் பட்டறை நிகழ்வு ஏற்பாடுகளைப் பற்றி நகைச்சுவையாக கருத்து தெரிவித்திருந்தார் கோ.சுகுமாரன்.

 இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர் பதிவர் பட்டறையில் அமைப்புக்குழுவில் இருந்தாலும் பல்வேறு பணிகளை நிறைவேற்றும் பணி எனக்கும் கோ.சுகுமாரன் வசமே இருந்தது. வேலைகளைப் பகிர்ந்து அளித்தபோதிலும் அந்தப் பணிகளைச் செய்வதற்கு பின் தொடர்ந்து சென்று முடிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் பல வேலைகள் இறுதியில் நாமே செய்து விடலாம் என்ற நிலையில் நாமே சுமக்க வேண்டியிருந்தது.

 முதலில் அரங்கம் தேர்வு செய்வது தொடர்பாக, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடத்தலாம் என்று தொடங்கி புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை அரங்கத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்து, அங்குள்ள சில குறைபட்டினால் சற்குரு அரங்கம் என பின்னர் முடிவு செய்தோம். உணவு உள்பட சில காரணங்களால் தான் இந்த அரங்கம் தேர்வு செய்யப்பட்டது.

 இணைய இணைப்பு BSNL நிறுவனத்திடம் இலவசமாக வழங்கும் படி கேட்டிருந்தோம். அவர்களும் அவ்வாறு வழங்குவதாக வாய்மொழியாக உறுதி அளித்திருந்தனர். நவம்பர் 20 அன்று அதற்கான முறைப்படியான கடிதம், பத்திரி்கைகளில் சிறகம் தொடர்பான வெளிவந்த செய்திகள் அடங்கிய ஒளிப்பட நகல் உள்ளிட்டவைகளையும் நாங்கள் அவர்களிடம் கொடுத்திருந்தோம். இலவசமாக வழங்கினால் BSNL நிறுவனத்திற்கு என்ன பயன் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்திருந்தோம். இணைய இணைப்பு அளிப்பதாக உறுதி அளித்திருந்தும், பின் கடைசி மூன்று நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 5 அன்று) இணைய இணைப்பு இலவசமாக அளிக்க இயலாது என்று கையை விரித்து விட்டனர். நிலைமை மிக மோசமானதால் BSNL நிறுவனத்திடம் என்ன திட்டம் என்றாலும் பரவாயில்லை, நாங்கள் பணம் கொடுக்கவும் தயார், இணைப்பை வழங்குங்கள் என்று கோரினோம். அதற்கு அவர்கள் தற்காலிக இணைப்பை வழங்குவதில்லை என்று கூறினர். ஆனால், ரூ.10,000/- முன்பணம் கட்டுங்கள் பின்னர் தற்காலிக இணைப்பு வழங்குவதைப் பற்றி நாங்கள் யோசிப்போம் என்று உதவிக் கோட்டப் பொறியாளராக (SUB DIVISIONAL ENGINEER) பொறுப்பு வகிக்கும் செல்வம் என்பவர் தெரிவித்தார். ஆனால், அவர்களின் இணைய தளத்தில் இவ்வாறு தற்காலிக இணைப்பு வழங்கலாம என்றும் அதற்கான கட்டணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பின்னர்தான் தெரிய வந்தது. http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm#temp http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm#temp BSNL Broadband -TEMPORARY CONNECTION (w.e.f. 01st April 2006) Particulars Tariff in Rs. Bandwidth Above 256 Kbps Installation Charges 500 Security deposit for modem 1000 Modem charges 200 Plan charges Double of the normal rental Additional usage charges As per plan applicable Note: The minimum charges shall be for a period of 15 days. ஏற்கனவே நான் இதனைப் பார்க்கவில்லை. ஆனால், புதுச்சேரி பி.எஸ். என்.எல். நிறுவனத்தின் தலைமை பொறியாளர் திரு.மார்ட்டின் ஆண்டோன் லியோ இவ்வாறு இலவச இணைப்பு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அங்கு பணிபுரிந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், இந்த நிறுவனத்தில் இருந்து கொண்டே நிறுவனத்தின் செயல்கள் பற்றி தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து பணி செய்யாத ஊழியர்களில் ஒருவராக இந்த செல்வம் இருக்கிறார். இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் மீது BSNL நிறுவனம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (இது பற்றி மேலும் தகவல்கள் பின்னர் எழுதுவேன்).

கு.இராம்மூர்த்தி இவ்வகையான பணிகளில் அதிக அக்கறை கொண்டவர். பயிற்சிப் பட்டறைக்கு வருகை புரிந்தவர்களின் பதிவைப் பதிவு செய்து கொடுத்தவர். சிறகக் கூட்டங்களுக்கு தவறாமல் வருகை தந்தவர்.

மு.முத்துக்கண்ணு தொடக்கத்தில் உற்சாகமாக சிறகத்தின் பணிகளில் பங்கேற்றவர் உடல் நிலை காரணமாக சிறகத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்க இயலவில்லை. 

செந்தமிழன் மிகவும் ஆர்வமானவர். தனது சொந்த பணிகள் காரணமாக அதிகம் பங்கேற்க இயலவில்லை. எனினும் எனக்கு என ஒரு பணியை ஒதுக்குங்கள் அந்த பணியை நான் செய்து முடிக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். காலம் கருதி அந்த பணியை அவரிம் முழுமையாக ஒப்படைக்க இயலவில்லை. இருந்தாலும் முடிந்த அளவு உதவியவர்.

பிரேம்குமார் சென்னையில் இருப்பதால் எல்லாப் பணிகளிலும் இவரால் பங்கேற்க இயலவில்லை எனினும் கடைசி நாளில் பங்கேற்று பம்பரமாக செயல்பட்டார். சென்னை ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றவர்.

இரா.முருகப்பன் ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்தவர், தனது பணி காரணமாக பட்டறை நடக்கும் நாளன்று கூட இவரால் கலந்து கொள்ள இயலவில்லை. ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதால் இவரால் இதுபோன்ற எந்த பணியிலும் கலந்து கொள்ள இயலவில்லை.

ஊற்று சிறகத்திற்குப் பல ஆலோசனைகளை வழங்கியவர். சென்னையில் இருப்பதால் அதிக பங்களிப்பை அளிக்க இயலவில்லை எனினும், சென்னைப்பதிவர் சந்திப்பின் போது நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டவர். சிறகம் தொடர்பான நேரடி பணிகளில் கலந்து கொள்ள இயலாமைக்கு இவரின் பணி ஒரு காரணமாக இருந்தது.

குணவதி மைந்தன் இவர் ஒரு குறும்பட இயக்குநர். “குடும்ப விளக்கு” “வீராணம்” உள்ளிட்ட வேறு சில குறும்படங்களையும் இயக்கியவர். பட்டறை அன்று படப்பிடிப்புக்கு வெளிநாட்டிற்கு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

ச.அனந்தகுமார் புதுவையை சேர்ந்தவராக இருந்தாலும் சிறகம் தொடர்பான பணிகளில் ஏனோ அதிக ஆர்வம் காட்டவில்லை. பட்டறையில் கலந்து கொண்டு நன்றாக இருந்ததாக கூறினார். இந்தப் பட்டறை பலரின் உழைப்பால் தான் வெற்றி பெற்றது. 

எனவே, இது தனிப்பட்ட "சுகுமாரன்களுக்கு" கிடைத்த வெற்றி என்றோ அல்லது "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் " வெற்றி என்றோ பதிவு செய்து பலரின் உழைப்பை இருட்டடிப்பு செய்ய விரும்பவில்லை. இந்த வெற்றியில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை இந்தப் பதிவர் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். 

 அன்புடன் 
இரா.சுகுமாரன்

புதன், 12 டிசம்பர், 2007

புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1

 ஓசை செல்லா அவர்களின் பதிவு

புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1

நிறைவு விழா பார்க்காமல் சென்றவர்கள் ஒரு நல்ல நிகழ்வை இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது... அதிலும் குறிப்பாக மா.சிவா, வினையூக்கி போன்றவர்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை மிக மிக அருமை. தமிழை இணையத்திற்கு கொண்டு வந்த சீன அறிஞர் சிங்கை அரசு, தமிழ் டேப் டாம் போன்றவற்றின் வரலாறு, ஒருங்குறி (யுனிகோட்), தமிழனின் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை பற்றிய ஒரு அருமையான உரையை ஒரு மணிநேரம் நிகழ்த்தியுள்ளார். அது தான் அன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பு என்று கூட சொல்லலாம்!

post signature



பின்குறிப்பு: இந்த ஒளிஒலிப்பேழையை தரவேற்றம் செய்ய மிகுந்த பாடுபட வேண்டியிருந்தது. யூ ட்யூபில் இவ்வளவு பெரிய பைலை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால் கூகிள் கை கொடுத்தது.

செவ்வாய், 11 டிசம்பர், 2007

புதுச்சேரி பதிவர் பட்டறை பத்திரிக்கை செய்திகள்-2

தினமலர்11-12-2007 தினமலர்11-12-2007  

முப்படைத்தளபதி 11-12-2007 தினமணி 11-12-2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு படக்காட்சிகள்

 http://muelangovan.blogspot.com/2007/12/blog-post_4112.html
 

 மு இளங்கோவன் பதிவிலிருந்த.......


 மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள்
சட்டப்பேரவைத்தலைவர்,புதுச்சேரி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை...

 புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு நிகழ்ந்தமுறை.. மு. இளங்கோவன் பதிவிலிருந்து...

  புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு நண்பர்கள் பலரின் உடலுழைப்பாலும்,பொருளுதவியாலும் 09.12.2007 ஞாயிறு காலை 09. 00 மணி முதல் இரவு 08.30 மணிவரை புதுச்சேரி சற்குரு உணவகத்தின் கருத்தரங்க அறையில் சிறப்பாக நடைபெற்றது.


  காலை 9-00 மணிக்குப் பங்கேற்பாளர்களின் பதிவு தொடங்கியது.நிகழ்ச்சியில் 98 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு பயிற்சிபெற்றனர். 9-30 மணிக்கு நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தைக் கோ.சுகுமாரன் அவர்கள் வழங்கினார் அவரைத்தொடர்ந்து தமிழா முகுந்த் அவர்கள் தமிழ் எழுத்துருக்களின் செயலிகளை எவ்வாறு நிறுவுவது எனச்செயல் விளக்கம் அளித்தார். இடையிடையே சென்னை நண்பர்களும் முகுந்துடன் இணைந்து கொண்டனர். இரா.சுகுமாரன் இளங்கோ செயலி நிறுவுவதை விளக்கினார்.

  காலை 10.00 முதல் 10.30 வரை முனைவர் மு.இளங்கோவன் தமிழ் 99 தட்டச்சுப் பலகையின் வருகை, பயன்பாடு, நிறை, குறைகளைப் பகிர்ந்து கொண்டார். மா.சிவகுமார் இடையில் வந்து அவையின் இறுக்கத்தைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார். பங்கேற்பாளர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு விளக்கம் தரப்பட்டது.

  10.30 முதல்11.00 மணி வரை க.அருணபாரதி கணினியில் தமிழ்ப்பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.இதில் மின்னஞ்சல் வசதி,அரட்டை பற்றி விவாதிக்கப்பட்டது.  இவ்வாறு நடைபெற்ற பயிலரங்க நிகழ்வுகளை ஓசை செல்லா, வினையூக்கி, சிவகுமார் முதலானவர்கள் தமிழ்வெளி, தமிழ்மணம் முதலான தளங்கள் வழியாகப் படத்துடன் நேரடி ஒளிபரப்புச் செய்தனர்.

  தேநீர் இடைவேளைக்குப்பிறகு உபுண்டு இராமதாசு அவர்கள் தமிழில் உள்ள இயங்குதளங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 12.00 -12.30 வரை முகுந்த் இணைய உலவிகளான பயர்பாக்சு பற்றிப்பேசினார்.

  12.30 -1.00 மணிவரை முனைவர் மு.இளங்கோவன் தமிழில் உள்ள தரவுதளங்கள், இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள் பற்றி விரிவாகப்பேசினார். விக்கிபீடியா, விருபா, நூலகம், சென்னை நூலகம், மதுரைத் திட்டம், திண்ணை, பதிவுகள் பற்றி விரிவாகப் பேசி சிறப்புமலரில் உள்ள தம் கட்டுரையில் தமிழில் உள்ள தளங்களைப் பற்றிய பட்டியல் உள்ளதை அவைக்கு நினைவூட்டினார்.

பகலுணவுக்குப்பிறகு 2.00- முதல் 3.00 மணிவரை முனைவர் நா.இளங்கோ அவர்கள் வலைப்பதிவு அறிமுகம் என்னும் பொருளில் பல்வேறு செய்திகைப் பகிர்ந்துகொண்டார். அவர் உரைக்குப்பிறகு அரங்கில் பொருத்தப்பட்டிருந்த கணிப்பொறிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பலர் மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக் கொண்டனர். பலர் வலைப்பூ உருவாக்கிக்கொண்டனர். மா.சிவகுமார், வினையூக்கி, வெங்கடேஷ் முதலான தோழர்கள் இதில் பெரும்பங்காற்றினர்.

பிற்பகல் 3.00 மணிக்கு வலைப்பூவில் படம் இணைப்பது,ஓசை இணைப்பது பற்றி பிரேம்குமார்,ஓசை செல்லா பயிற்சியளித்தனர். இடையிடையே வேறு நண்பர்களும் இணைந்துகொண்டனர். பயிற்சிக்கு வந்திருந்த முத்துராசுவின் கவிதை வாசிப்பைப்பதிவு செய்து ஓசை செல்லா அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இரா.சுகுமாரன் திரட்டிகளில் இணைப்பது உட்பட பல தகவல்களை அவ்வப்பொழுது வழங்கினார். மா.சிவகுமார் திரட்டிகளில் இணைப்பது பற்றி இடையிடையே விளக்கினார். தூரிகா வெங்கடேஷ் கூட்டு வலைப்பதிவு உட்பட பல தகவல்களைப்பகிர்ந்துகொண்டார்.

இணைய இதழ்களில் எழுதுவது பற்றி முனைவர் மு.இளங்கோவன் விளக்கினார். திண்ணை, பதிவுகள், சிபி, வணக்கம் மலேசியா முதலான இதழ்களில் எழுதுவது பற்றி விளக்கினார்.இவ்வாறு பயிலரங்கு நிறைவுநிலைக்கு வந்தது.

பயிற்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. மைசூர் செம்மொழி நிறுவன நண்பர்கள், பேராசிரியர் மயிலாடுதுறை நெடுஞ்செழியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் தங்கள் நிறைவான கருத்துகளை எடுத்துரைத்தனர்.

மாலை 6.30 மணியளவில் நிறைவுவிழா தொடங்கியது.

பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கோ.சுகுமாரன் முன்னிலை வகித்தார்.க.அருணபாரதி வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் நா.இளங்கோ தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் மு.இளங்கோவன் நோக்கவுரை யாற்றினார். பராதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் கருத்துரை வழங்கினார். கணிப்பொறி, இணையவரலாறு, தமிழ் இணையத்தில் இடம்பெற்றமை, தமிழ் ஒருங்குகுறி குறித்துள்ள சிக்கல்கள், முழுமையான ஒருங்குகுறி இடம்பெற உள்ள நிலை இவற்றை நிரல்பட விளக்கினார். தமிழ்மொழி அனைத்து நிலைகளிலும் இடம்பெறவேண்டியதன் தேவை பற்றி எடுத்துரைத்தார். பயிற்சிப்பட்டறை என்பதைவிட பயிற்சிப் பயிலரங்கு என்றிருப்பதன் பொருத்தப்பாட்டை விளக்கினார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டிணன் அவர்கள் நிறைவுரை யாற்றினார். தமிழ்வளர்ச்சிக்குப் புதுவை அரசு தொடர்ந்து பாடுபடும் எனவும், கணிப்பொறியில் தமிழ் இடம்பெறுவதற்கு இயன்ற உதவிகளைச்செய்ய அணியமாக இருப்பதாகவும் உறுதியளித்தார். பயிலரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

தூரிகா வெங்கடேஷின் நன்றியுரையுடனும் நாட்டுப்பண்ணுடனும் இரவு 8.30 மணிக்கு விழா இனிதே நிறைவடைந்தது.

.. புதுவை வலைப்பதிவர் பட்டறை... பொன்னவைக்கோ பேச்சு,

 புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை .. பொன்னவைக்கோ பேச்சு

 இந்த பதிவு ஓசை செல்லாவின் தனிப்பட்டக் கருத்து ........ பயிலரங்கம் பேச்சி குறித்துள்ளதால் இங்கே பதிவு செய்கிறோம்////...

நிறைவு விழா பார்க்காமல் சென்றவர்கள் ஒரு நல்ல நிகழ்வை இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது... அதிலும் குறிப்பாக மா.சிவா, வினையூக்கி போன்றவர்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை மிக மிக அருமை. தமிழை இணையத்திற்கு கொண்டு வந்த சீன அறிஞர் சிங்கை அரசு, தமிழ் டேப் டாம் போன்றவற்றின் வரலாறு, ஒருங்குறி (யுனிகோட்), தமிழனின் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை பற்றிய ஒரு அருமையான உரையை ஒரு மணிநேரம் நிகழ்த்தியுள்ளார். அது தான் அன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பு என்று கூட சொல்லலாம்! இருந்தாலும் என்னைப்போன்ற மேற்கத்திய மக்களுடன் பழகி இணையம் அறிந்தவர்கள் அவரின் ஒரு சில கருத்துக்களுக்கு (மட்டும்!) மாற்றுக்கருத்து கொண்டிருப்பதில் வியப்பில்லை தானே!


 

முதலில் அவரின் கருத்து தமிழை ஒரே மாதிரி ஆங்கில முறையிலிருந்து மாற்றுகிறோம். அது தவறு... உதாரணம் "பட்டறை" . அதற்குப் பதிலாக "பயிற்சிப் பயிலரங்கம்" என்பதுதான் சரியான வார்த்தை உபயோகம்... என்று சொன்னார். என் கருத்து எல்லாம் முதலில் தமிழ் வழக்கை இந்த தமிழறிஞர்கள் குறை சொல்லி குறை சொல்லியே தமிழ் கடுப்படிக்க ஆரம்பித்து விட்டது இந்த இளைய தலமுறைக்கு. முதலில் இது இணையம் மூலம் படிக்கும் காலம். நான் சென்னையில் முதன்முதலில் நடேச முதலியார் பார்க்கில் தல பாலபாரதி குடுத்த உற்சாகத்தில் அறிவித்த விசயம் "வலைப்பதிவர் பட்டறை". அதுவரை பார்க்கில் உட்கார்ந்துகொண்டு ... போண்டா கொறித்துக்கொண்டு .. காதலர்களின் சில்மிசங்களையும் ஓரகண்ணால் பார்த்துக்கொண்டு .. போளி போண்டா கதைத்துக்கொண்டிருந்த நிலையிலிருந்து மேலே வர நானும் பாலபாரதியும் எடுத்த சிறு முயற்சிதான் "பதிவர் பட்டறை". அதுவும் யாரிடமும் ஒரு ரூபாய் கூட நன்கொடைவாங்காமல் கூகிளின் மூலம் வந்த ஒரு சிறு தொகையை வைத்து கோவையில் ஒரே ஒரு கணினி மூலம் சிறு எண்ணிக்கையிலான பதிவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட ஒரு சிறுநிகழ்வு அது. அங்கு எங்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்ற உந்துதலில்பால் வெளிவந்த ஒன்று கோவை முதல் பட்டறை . இந்த மாதிரி அகராதி பார்த்து தமிழறிஞர்கள் கூட்டம் கூட்டி ஆராய்ந்து எடுக்கப்பட்ட விசயமல்ல. திரு பொன்னவைக்கோ போன்றவர்கள் எல்லாம் இவ்வளவு பேசுகிறார்களே... ஆயிரக்கணக்கான கோடிகள், அரச பதவி, அரசாங்க உதவிகளிருந்தும் இவர்கள் எத்தனை "பயிற்சிப் பயிலரங்கங்கள்" வலைப்பூ பற்றி நிகழ்த்தினார்கள்? சொல்ல முடியுமா?


மொழி என்பது புழக்கத்தின்பால் வளர்வது, வழங்கப்படுவது. நோவம் காம்ஸ்கி காதலானான, சிட்னி பாலாவின் சீடனான இந்த செல்லாவுக்கு இந்த மொழியறிஞர்கள் மீது ஒரு சிறு கோபம். இணையம் என்பதே ஒரு கல்ட் நிகழ்வு. நிகழ்வுக்குப் பின் பெயர்கள் வரும். அனைவரும் வெப்லாங் என்று சொன்னது சுருங்கி இன்று பிளாங் ஆகியது! இதை எந்த ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் ஆங்கில அறிவுசீவியும் சேர்ந்து முடிவு செய்ததல்ல. ஒருவர் உபயோகித்த வார்த்தை பிடித்துப்போனது பலருக்கு.. அவ்வார்த்தையை பலரும் உபயோகிக்க ஆரம்பித்தனர். பின்பு அது ஸ்டேண்டர்டு ஆனது.

அதுபோல தவறாக இருந்தாலும் பட்டறை எங்களின் உணர்வுகளால் உருவான வார்த்தை. எங்கள் உழைப்பால் உருவான வார்த்தை நண்பர் பொன்னவைக்கோ அவர்களே! எங்களைப் போன்ற சாதாரண ஆர்வலர்கள் பேரைத் தவறோடு வைத்திருக்கலாம் தான்... ஆனால் செயலில்.. ஆர்வத்தில் நாங்கள் அரசாங்கம், நிறுவனங்கள் போன்றவற்றைவிட மிக அதிகம் செயலில் காண்பிக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து.

உங்களுக்கு ஒரு கேள்வி.. வெப் 2.0 வின் அற்புதம் இந்த வலைப்பூக்கள். மக்கள் தகவல் ஊடகம் இது. இதை உலகிலேயே அற்புதமான முறையில் முன்னெடுத்துச் சென்றது பாலா, முக்குந்த், காசி , மதி போன்ற சில தனிமனிதர்களின் முயற்சி. இதில் பல்கலைக்கழகங்கள், அரசாங்கம், அறிவுஜீவிகளின் சாதனை என்ன என்று சொல்வீர்களா தோழரே?!!

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - பத்திரிகை செய்திகள்

தினகரன் - 10-12-2007.  

தினமணி - 10-12-2007. தி இந்து - 10-12-2007.  

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 10-12-2007. 

திங்கள், 10 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கவிதை நிகழ்வு - ஒலிவடிவம்

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் 'ஓசை செல்லா' வலைப்பூவில் ஒலிப்பேழைகளைப் பதிவேற்றுவது குறித்து செய்முறை மூலம் பயிற்சி அளித்தார். இந்நிகழ்வின் போது முத்துராஜ் என்ற இளைஞரை அழைத்து ஒரு கவிதை வாசிக்கச் சொன்னார். அரங்கமே அதிரும் வகையில் ஒரு கவிதையை வாசித்தார் முத்துராஜ். அவரது கவிதையை ஒலி வடிவில் கேட்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும். கவிதையைக் கேட்க...

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள்

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை - சில குறிப்புகள்

 ம.சிவக்குமார் எழுதியது: சிலர் பதிவுகளைவிலக்கிவிடுவதால் இங்கு பதிவிடப்படுகிறது

விபரங்கள் வினையூக்கியின் இந்தப் பதிவில்

செல்லாவின் நச் கவரேஜ்
பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு
புதுவை பட்டறை பற்றிய என் கருத்துக்கள்!
நிறைவோடு விடைபெறுகிறேன் பாண்டியிலிருந்து
புதுவை வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு !!

அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு நந்தாவும், வினையூக்கியும் நானும் ஒன்பது மணி வாக்கில் (வாடகை) காரில் பாண்டிச்சேரி சற்குரு உணவகத்தை அடைந்தோம். சாப்பிடப் போகும் இடத்தில் முகுந்த், ஓசை செல்லா உட்கார்ந்திருந்த மேசையில் சேர்ந்து கொண்டோம்.

நல்ல திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வமான பங்கேற்பாளர்கள்.

இரா சுகுமாரன் நிகழ்ச்சியைத் துவங்கி வைத்து உரை ஆற்ற, முகுந்த் தமிழ் எழுத்துருக்கள், e-கலப்பை குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து சுகுமாரன் குறள் மென்பொருளைக் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து தமிழ்99 முறையில் தட்டச்சிடுவது குறித்துப் பேச முனைவர் இளங்கோவன் வந்தார். அதில் என்னையும் சேர்ந்து கொள்ளச் சொன்னார். மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு ஆற்றொழுக்காகப் போயிருக்க வேண்டிய அந்த அறிமுகத்தில் என்னுடைய குறுக்கீடுகளும் சேர்ந்தன. வகுப்பறை போன்ற சூழல் உருவாகி விடக் கூடாது என்று முனைந்து கொஞ்சம் un-conference பாணியைக் கொண்டு வர முயன்றோம்.

இயங்கு தளங்களைக் குறித்த அமர்வின் முன்னுரையில் சூடான விவாதத்துக்கு ஒரு அடித்தளம் அமைந்து விட்டது. ஆமாச்சு என்று ஸ்ரீராமதாஸ் கலகலப்பாக பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார். உபுண்டு லினக்சு பற்றிய அவரது 10 நிமிட ஆரம்பத்திற்கு அப்புறம் சூழல் பரபரப்பாக மாறி விட்டது. முகுந்த் 'மாற்றுக் கருத்தையும் தெரிவிக்க வேண்டும்' என்று ஓரிரு நிமிடங்கள் மைக்ரோசாப்டு நிறுவனத்தின் பங்களிப்பையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கு மேலும் அந்த அரசியல் தத்துவ விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று உபுண்டுவில் தமிழ் இடைமுகம், பயன்பாடுகள் என்று ராமதாஸ் இறங்கினார்.

அந்த அரை மணி நேர அமர்வின் இறுதியில் 'உபுண்டு குறுவட்டு, நிறுவும் விளக்கக் கையேடு அடங்கிய பொதியை விருப்பமிருப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு காணிக்கை போடலாம்' என்று அறிவித்தார் ராமதாஸ். அடுத்த சில நிமிடங்களிலேயே 50 பொதிகளும் ஆர்வலர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன.

இணையத்தில் தமிழ் இதழ்கள், இணையத் தமிழ் இதழ்கள், தமிழ் வலைத்தளங்கள் என்று ஒரு தொகுப்பை முனைவர் இளங்கோவன் வழங்க அத்துடன் உணவு இடைவேளை வந்தது. இலை போட்டு வடை பாயாசம், இனிப்புடன் சாப்பிட்டு விட்டு மதிய அமர்வுகள்.

பேராசிரியர் இளங்கோ வலைப்பதிவு என்றால் என்ன, எப்படி பிளாக்கர் மூலம் ஒரு கணக்கு ஆரம்பித்து பதிய ஆரம்பிக்கலாம் என்று கச்சிதமாக விளக்கினார். அவரது அமர்வின் ஆரம்பத்தில் 'கூடவே கணினியில் செய்முறை பயிற்சியும் ஆரம்பித்து விடலாமா' என்று நாங்கள் கேட்டது கொஞ்சம் அதிகப்படியாகப் போய் அவர் சூடாக பதிலளித்தார். அவரது உரையைத் தொடர்ந்து மக்கள் கணினிகளைச் சூழ்ந்து கொண்டு ஜிமெயில், பிளாக்கர், பதிவுகள் என்று அலையில் கால் நனைத்தார்கள்.

தொழில் நுட்ப அமர்வுகளாக, திரட்டிகளில் இணைத்தல், ஒலி ஒளி இடுகைகள், செய்தியோடைகள், வோர்ட்பிரஸ் பயன்பாடு என்று பலனுள்ள அமர்வுகள் தொடர்ந்தன.

மொத்தத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய பட்டறை. கல்லூரி தமிழ்த் துறை மாணவிகள், பேராசிரியை, தமிழ் ஆர்வலர்கள் என்று பல பெண்கள் மிக ஆர்வத்துடன் மின்னஞ்சலையும், வலைப்பதிவையும் உருவாக்கி இணைய உலகிற்குள் அடி எடுத்து வைக்க வழி செய்து கொடுத்த நிகழ்ச்சி.

சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதுவை நண்பர்கள், அருமையான அமர்வுகளை வழங்கிய இளங்கோவன், இளங்கோ, செறிவூட்டிய ஓசை செல்லா, முகுந்த், வினையூக்கி, நந்தகுமார், உபுண்டு ஆமாச்சு, நான் என்று நிறைவான ஒரு நாள்.

பின்குறிப்பு
கோவை, சென்னை, புதுவை - மூன்று பட்டறை கண்டவர்கள் என்ற சிறப்புத் தகுதி பெற்றவர்கள் மா சிவகுமார், வினையூக்கி மற்றும் முகுந்த். கழகங்களின் மேடைப் பேச்சாளர், இலக்கிய உலகின் பட்டிமன்ற பேச்சாளர் என்று வரிசையில் 'பட்டறை பேச்சாளர்' என்று ஒன்றை உருவாக்கும் காலம் வந்து விட்டது என்று தோன்றுகிறது.

 

புதுவை பதிவர் பட்டறை : திரு. பொன்னவைக்கோ பேசியதில் என்னவோ இடித்ததே...

 பிரேம் குமார் பதிவிலிருந்து..........

 

புதுவை பதிவர் பட்டறை : திரு. பொன்னவைக்கோ பேசியதில் என்னவோ இடித்ததே...

  புதுவை பதிவர் பட்டறை திசம்பர் 9, 2007 அன்று இனிதே நடைப்பெற்றது. புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக நடைப்பெற்ற இவ்விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் கலந்துக்கொண்டனர்.

சென்னை பதிவர் பட்டறையை நடத்திய குழுவிலிருந்தும் நண்பர்கள் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்

மாலை நடைப்பெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சட்டமன்ற தலைவர் திரு.ராதாகிருஷ்ணனும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ அவர்களும் கலந்துக்கொண்டார்கள்.

திரு. பொன்னவைக்கோ அவர்கள் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் & பல்கலைக்கழகங்களின் சார்பாக தமிழில் பொறியியல் பாடங்கள் குறித்தும் அருமையாக பேசினார்.




தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை நிறுவியதில் பெரும் பங்களித்தவர் திரு. பொன்னவைக்கோ. இரத்தின சபாபதி என்ற இயற்பெயரை தமிழ்படுத்தி தாயார் பெயரான பொன்னி + அவைக்கோ (சபாபதியின் தமிழாக்கம்) சேர்த்து பொன்னவைக்கோ ஆனவர்.

'தமிழ் இனி மெல்ல சாகும்' என்ற கூற்றைப் பற்றி பேசுகையில் தமிழன் தான் தமிழை மதிக்க மறுக்கிறான் என்று கூறினார். பெற்றவளை பிள்ளைகள் தாய்மொழியில் அழைத்தால் அவமானமாக கருதுகிறோம், கோயில்களில் தமிழில் பூசை செய்தால் பலிக்குமா என்று அஞ்சுகிறோம் என்று குற்றஞ்சாட்டினார். தமிழை ஆங்கிலங்கலக்காமல் பேசிப் பழக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


குட்டு : தமிழ் ஆர்வலர், தமிழில் தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துபவர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் அமைப்பாளர் என்று தமிழுடன் பெருந்தொடர்புக் கொண்டவர் கொஞ்சம் தமிழர்களின் கலாச்சார உடையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கு

 

ஆங்கிலம் பேசுவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள், சமிஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்பவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள் என்று குற்றஞ்சொன்னவரே தமிழர்கள் கூடும் ஒரு கூட்டத்திற்கு 'கோட்டு சூட்டு டை' அணிந்து வருவதை கௌரவமாக நினைத்ததை என்னவென்று சொல்லுவது ?

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - இந்து பத்திரிகை செய்தி

புதுச்சேரியில் நடந்த வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது: Tamil computing, blogging made easier Workshop discusses technological developments in the field

   

Catching on: A blogger at work at the workshop on Tamil computing in Puducherry on Sunday. PUDUCHERRY: The next edition of e-Kalappai, a keyboard driver for using Tamil in computers, will be ready by January 2008, S. Muguntharaj, a software developer and coordinator of the e-Kalappai Project told The Hindu on Sunday. Speaking on the sidelines of a workshop for bloggers on Tamil computing, he said e-Kalappai did not require a separate keyboard to type Tamil. “We developed the first version in 2001 and the second in 2002. We took a license from Keyman, an Australian company that has developed a driver (software) that can be used for all languages and have adapted it to incorporate Tamil,” he explained. The software, which can be used on all Microsoft Windows applications, takes just about a minute to install. It will appear as an icon on the task bar for easy access. The driver can be downloaded for free from http://thamizha.com. “ The software takes up just 1.2 MB of space. A team of persons interested in popularising Tamil computing have created it. Technology does not know language. So we thought language must not be a constraint for people who don’t know English,” he added. Bloggers were also introduced to Ubuntu, an easy-to-install Gnu/Linux based operating system. M. Ramadoss, founder of the Ubuntu Tamil community list, said it was a community-maintained software developed by people from India, Sri Lanka and the U.S. “There are about 20 active members in the project. The source code of this software can be seen, changed and developed by anyone who is interested in it,” he added. According to R. Sugumaran, coordinator of Puducherry Bloggers Wing, those who attended the workshop were also taught how to create blogs in Tamil, use Tamil e-mail (minn anjal), chat (arattai), attach pictures and how to link web pages. Ko. Sukumaran, an active blogger, explained that there were about 3,000 Tamil bloggers. Thamiz manam, Thamiz veli and Thenkoodu were some of the popular blog aggregates (Thirattugal).

ஞாயிறு, 9 டிசம்பர், 2007

பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு

 ஓசை செல்லாவின்பதிவு

பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் கைதட்டல் வாங்கிய முத்துராஜின் கவிதை வாசிப்பு

பாண்டி வலைப்பதிவர் பட்டறையில் நான் ஒலிப்பேழைகளை பதிவேற்றுவது தொடர்பாக நேர்முக நிகழ்வு ஒன்று நடத்தினேன். அங்கு வந்திருந்தவர்களில் யாருக்கு கவிதை படிக்க ஆர்வம்? .. என்ற கேள்வியை எழுப்பினேன். கூட்டத்திலிருந்து முத்துராஜ் என்ற இளைஞர் முன்வந்தார். அடாசிட்டி மூலம் பதிந்து மாசிவாவின் பதிவில் ஏற்றி போட்டுக்காட்டினால் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. நீங்களும் கேட்டுப்பாருங்களேன் அவரின் வாசிப்பை!.. புதுவை பட்டறையே ஒரு கலக்கல் நிகழ்வுதான்!

இதைவிடச் சிறப்பாக ஒரு பட்டறை செய்திருக்க முடியாது

 ஓசை செல்லா அவர்களின் பதிவு .... இதைவிடச் சிறப்பாக ஒரு பட்டறை செய்திருக்க முடியாது என்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் வலைப்பதிவு பட்டறை குறித்து குறிப்பிட்டிருந்தார். அவர் வலைப்பதிவை முடக்கியதால் இங்கே நகல் பதிவு செய்யப்படுகிறது.


இதைவிடச் சிறப்பாக ஒரு பட்டறை செய்திருக்க முடியாது! கோவை பேருந்து புறப்பட்டுவிட்டது! நாளை நிறைவு நேர நிகழ்ச்சிகள் புகைப்படம் மட்டும் வீடியோவாக பதிவேற்றப்படும் என்று நினைக்கிறேன்! மன நிறைவோடு விடைபெறுகிறேன்....

பாண்டியிலிருந்து ....

மேலே ஒரு நீண்டநாள் சந்திக்க நினைத்த தோழன் வந்து சந்தித்தான் இன்று பாண்டியில்! யார் அவன்? சரியாகச் சொல்பவருக்கு ஒரு கப் டீ பரிசு

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது.

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை பற்றி தமிழ் முரசு செய்தி - படம்

புதுவைப் பட்டறை குறித்து என் கருத்துகள் - ஓசை செல்லா

 ஓசை செல்லா தனது பதிவை முடக்கியுள்ளதால் நகல் இங்கே பதிவு செய்யப்படுகிறது

 புதுவைப் பட்டறைக் குறித்து என் கருத்துகள்

 நேற்றுகாலை ஆரோவிலில் இருந்து வாடைகைக்காரில் 8.15 மணிக்கு புறப்பட்டு சற்குரு ஹோட்டலை அடைந்தபோது இரா சுகுமாரன் அவர்களும் முக்குந்த் அவர்களும்ஏற்கனவே கணினியை கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தனர். அருமையான குளிரூட்டப்பட்ட அரங்கு அது. அருகிலேயே நூறு பேர் சாப்பிடுவதற்கான அரங்கு வேறு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எத்தனை ஆயிரங்கள் ஆகியிருக்குமோ என வியந்தேன். அரங்கின் பின்பகுதியில் 10 கணினிகள் வேறு இணைய இணைப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. 10 மணியளவில் அரங்கம் நிறைந்தது. வரிசையாக மதிய உணவு இடைவேளை வரை சீராக ஆரம்ப பாடங்களை கற்றனர். தமிழில் யுனிகோடில் தட்டச்சு செய்வது முதல் படங்கள், வீடியோக்கள் இணைப்பது வரை அனைத்து பாடங்களும் செயல்விளக்கங்களோடு செய்து காண்பிக்கப்பட்டன. இரண்டு சுகுமாரன்களும் இரண்டு இளங்கோக்களும் பம்பரமாகச் சுழன்று பட்டறையை மெருகேற்றினர். 

 

 

 மதியம் அருமையான சாப்பாடு... அனைவரும் தூங்கிவிடுவார்களோ என்று பயந்ததென்னவோ உண்மைதான். ஆனால் முனைவர் இளங்கோ ஒரு அருமையான பொறுமையான வகுப்பு எடுத்து அனைவரையும் அசத்தினார். பின் அனைவரும் ஒரு சில மணிக்கூறுகள் கணிணி முன் அமர்ந்து தனது முதல் தமிழ் வலைப்பூக்களை உருவாக்கி மகிழ்ந்தனர். மாசிவா, வினையூக்கி போன்றவர்கள் பொறுமையாக கேள்விகளுக்கு பதில்சொல்லி செயல்முறைகளை விளக்கினர். 

 பின் முனைவர் மு இளங்கோவன் அருமையான தமிழ் தளங்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். பின்பு நானும் எனது ஒலிப்பதிவு வகுப்பை ஆரம்பித்தேன். ஒரு அற்புதமான கவிதையை ஒரு இளைஞன் பிரசவித்தான்.. அரங்கு நிறைந்த கைதட்டலுடன்!...

மாலையில் தொடரும் .......

புதுவைப் பட்டறை ஒரு மைல்கல்


 https://web.archive.org/web/20191228030632/http://vinaiooki.blogspot.com/2007/12/blog-post_09.html

தமிழை , கணினியில் தமிழின் பயன்பாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல தமிழார்வலர்கள் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஆரோக்கியமான சூழலில், புதுவை வலைப்பதிவர் சிறகம் நடத்திய தமிழ்க் கணினி வலைப்பதிவர் பட்டறை ஒரு மைல்கல் என்று சொல்லலாம். நகரத்தின் மையப்பகுதியில் , வெளியூர்காரர்களும் சிரமமில்லாமல் சென்றடைந்திடக்கூடிய இடமாக பட்டறை நடக்கும் இடத்தை தேர்ந்தெடுத்தமைக்காக அமைப்புகுழுவினரை நிச்சயம் பாராட்டலாம். 



நந்தா, மா.சிவக்குமாருடன் சரியாக காலை 9 மணிக்கு அரங்கை (சற்குரு உணவகம்) அடைந்தபோது ஓசை செல்லா, எ-கலப்பை முகுந்த் ஆகியோர் ஏற்கனவே அங்கு இருந்தனர். புதுவை நண்பர் ஜே.பூரா எங்களுக்கான காலை உணவு ஏற்பாட்டைக் கவனித்துக் கொண்டார்.
காலை உணவை முடித்துவிட்டு பட்டறை நடக்கும் ஐந்தாம் தளத்தை அடைந்த போது ஏற்கனவே பட்டறை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக வந்திருந்தவர்கள் நிறைந்திருந்தனர். பங்கேற்பாளர்கள் உள்ளே நுழையும்பொழுதே பட்டறைக்கான மலர், தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு , எழுதுகோல், எழுத நோட்டுப்புத்தகம் அதை அழகாக வைத்துக் கொள்ள ஒரு கோப்பையும் அவர்களுக்கு தரப்பட்டது.


வழக்கமான ஆரம்ப விழாபோல் அல்லாமல் , இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோர் ரத்தினச்சுருக்கமாக பட்டறையின் நோக்கத்தைப் பற்றி சொல்லிவிட்டு நேரிடையாக நிகழ்ச்சிக்குச் சென்றனர்.

எ-கலப்பை முகுந்த் தமிழில் தட்டச்சு செய்யும் வழிமுறைகளை எளிமையாக புரியும்படி வகுப்பு எடுத்து முடித்தவுடன் , முனைவர். மு.இளங்கோவன் தமிழ்99 முறையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பங்கேற்பாளர்கள் சற்று இறுக்கமாக அமர்ந்திருப்பதைக் கவனித்த மா.சிவக்குமார் மு.இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவரசியமாகக் கூறி அந்த இறுக்கத்தை சற்று தளர்த்தினார்.





பங்கேற்பாளர்களும் இறுக்கம் தளர்ந்து சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க நந்தா, முகுந்த் ஆகியோர் மா.சி உடன் இணைந்து அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தனர். பட்டறை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஓசை செல்லா புகைப்படங்களை எடுத்து , தனக்கே உரிய ஒன்லைனருடன் தமிழ்வெளி தளத்தில் நேரலையாக தரவு செய்து கொண்டிருந்தார்.



அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் , அரட்டை வசதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி வகுப்பெடுத்து முடித்ததும், “உபுண்டு" ராமதாஸ் சுவரசியமாக உபுண்டு இயங்கு தளத்தைப் பற்றியும் கட்டற்ற மென்பொருள்களின் அவசியத்தைப் பற்றியும் ஆதிக்க அடிமை மோகம் எந்த அளவுக்கு போகும் என அழுத்தம் திருத்தமாக உதாரணங்களுடன் விளக்கினார்.

ராமதாசு பேசிக்கொண்டிருக்கையிலேயே , மா.சிவக்குமார் இடைமறித்து , ராமதாசு லினக்ஸு குழுமங்களில் தமிழில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் உறுதியான நிலையைப் பாராட்டினார்.



ராமதாசின் விளக்கம் முடிந்த பின்னர், முனைவர்.மு.இளங்கோவன் தமிழில் இணையத்தில் கிடைக்கப் பெறும் இணையத்தளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். தமிழில் இணையம் என்று பெயர்வந்தமையைப் பகிர்ந்து கொண்டார்.






அருமையான மதிய உணவிற்குப் பின்னர், முனைவர் நா.இளங்கோவின் தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிப்பது, குறித்த அமர்வு ஆரம்பித்தது. சாமானிய மக்களுக்கு தொழில்நுட்ப விசயங்களைச் சொல்லித்தருவது பெரிய கலை. அதை மிக அனயாசமாக செய்தார். அவ்ர் ஒவ்வொன்றாய் விளக்க மடிக்கணினியில் இருந்து விளக்கங்களை விரைவாக திரையில் காட்டிய அருண்பாரதியின் ஒருங்கிணைவு பாராட்டத்தக்கது. திரட்டிகளில் இணைப்பது பற்றி தூரிகா வெங்கடேசும் , வேர்டுபிரஸ் பற்றி நந்தாவும் ஒலி ஒளிக்காட்சிகளை இணைப்பது பற்றி செல்லாவும் வகுப்பு எடுத்தனர். சென்னைப் பட்டறையில் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டியவர்கள் மாணவர்கள் என்றால் இங்கு அரசு அலுவலங்களில் பணிபுரியும் நடுத்தர வயதினர் காட்டிய ஆர்வம் மெச்சத்தகுந்தது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க வைத்தார்கள். கடை நாற்பதுகளில் இருந்த ஒரு பெண்மனி தமிழில் டைப் அடிச்சுக் காட்டுங்கோ என்று சொல்லி அவர்களுக்கு தட்டச்சு செய்து எவ்வளவு எளிமையானது என்று சொல்ல அவர்கள் முகம் அடைந்த பூரிப்பு அளவிட முடியாதது.






ஜிமெயில் ஒரு கட்டத்தில் தன் வேலையைக் காட்டியதால் சிலருக்கு ஜிமெயில் கணக்கு திறந்து தர இயலவில்லை. இருப்பினும் கோவிந்து என்ற புதுவை நண்பர் விடாப்பிடியாக தனது கையேட்டில் கணக்குத்திறக்கும் வழிமுறைகளை எழுதிக் கொண்டார். மா.சிவக்குமாரும் களத்தில் இறங்கி சொல்லிக் கொடுத்தது பேருதவியாக இருந்தது.





பிரபல வலைப்பதிவாளர் பொட்டீக்கடை சத்யாவை இந்த நிகழ்வின் போது சந்தித்தது மகிழ்ச்சியான விசயம்.




பட்டறையை வெற்றிகரமாக முடிந்ததும், தன் வீட்டுக் கல்யாணத்தை சிறப்பாக முடித்து ஏற்படும் சந்தோசத்தை அமைப்பாளர்களின் கண்களில் காண முடிந்தது. பட்டறையின் தொடர்ச்சியாக புதுவைக்குட்பட்ட பள்ளிகளில் தமிழில் கணினிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் புதுவை வலைப்பதிவர் சிறகம் ஈடுபடப் போவதாக தூரிகா வெங்கடேஷ் தெரிவித்தார். இவர் திரட்டி.காம் என ஒரு வலைப்பூத் திரட்டி ஒன்றை வடிவமைத்துள்ள செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.



இந்த புதுச்சேரி பட்டறை, பிறநகரங்களில் இருக்கும் தமிழார்வலர்கள் இணைந்து தமிழ்க்கணினிப் பயன்பாட்டை பாமரமக்களிடம் கொண்டு சேர்க்க, இவ்வகைப் பட்டறைகளை நடத்தப் போவதற்கு ஒரு முன்மாதிரி என்றால் அது மிகையாகாது. புதுவை வலைப்பதிவர் சிறகத்திற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

தமிழ்க் கணினி பயன்பாட்டைப் பரவலாக்கும் முயற்சிகளில் மீண்டும் ஒரு முறை பங்கேற்ற மகிழ்ச்சியில் ஊர் திரும்பினோம்.






புகைப்படங்கள் நன்றி: ஓசை செல்லா, தமிழ்வெளி.காம்

புதுவை வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு !!

ஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ! 

ஓசை செல்லாவின் நச் னு ஒரு வலைப்பதிவு

 
பட்டறை ஆரம்ப சோதனைகள்.. முகுந்த், இரா.சுகுமாரன், உபுண்டு ராம்தாஸ்

அறிவிப்பு பலகை வரவேற்கிறது!

நேர்முக புகைப்பட ஒளிபரப்பு தமிழ்வெளி மூலம் இங்கே தொடர்கிறது!
 

சனி, 8 டிசம்பர், 2007

புதுச்சேரி தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை இனிதே ஆரம்பமானது

வினையூக்கி பதிவு

 வினையூக்கி

 புதுச்சேரியில் தமிழ்க்கணினி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை இரா.சுகுமாரன் மற்றும் கோ.சுகுமாரன் ஆகியோர்களின் ஆரம்ப அறிமுக உரைக்குப் பின்னர் இனிதே துவங்கியது. எ-கலப்பை முகுந்த் தமிழ் தட்டச்சு முறைகளை தமிழ்க் கணினி ஆர்வலர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொன்டிருக்கிறார். சென்னையில் இருந்து வலைப்பதிவர்கள் நந்தா, மா.சிவக்குமார் உடன் நானும் சரியான நேரத்திற்கு பட்டறை நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.கோவையில் இருந்து ஓசை செல்லாவும் வந்திருக்கிறார்.

முனைவர்.மு.இளங்கோவன் தமிழ்99 தட்டச்சு முறையை விளக்கிக்கொண்டிருக்கிறார்.இறுக்கமாக அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களை மா.சிவக்குமார் இளங்கோவனுடன் இணைந்து சில மேலதிக தகவல்களை சுவையாகக் கூறி அந்த இறுக்கத்தை தளர்த்தினார்.

பங்கேற்பாளர்களின் இறுக்கம் தளர்ந்து தங்களது சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க, முகுந்த் ,நந்தா, மா.சி ஆகியோர் அதற்கான விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர்.

அருணபாரதி தமிழில் மின்னஞ்சல் அரட்டை ஆகிய விசயங்களை வகுப்பு எடுத்தார்.நேரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பட்டறையில் அடுத்த நிகழ்வாக இயங்குதளங்களைப் பற்றி மா.சிவக்குமாரும், உபுன்டு ராமதாசு அவர்களும் விளக்கினர்.்
உபுன்டு ராமதாசு மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்கள் எவ்வாறு பயனாளரகளை அடிமைத்தனத்தில் கொண்டு போகிறது என கமலஹாசனின் திரைப்பட எடுத்துக்காட்டைக் கூறி ஒபன் சோர்சு மென்பொருள்களின் தேவையை விளக்கினார்.்
இணைய உலவிகளைப் பற்றி, முக்கியமாக பயர்பாக்சு அதன் நீட்சிகளைப்பற்றியும் விரிவாக விளக்கிக் கொண்டு இருக்கிறார்.
இணைய வெளியில் உலவும் தமிழ் இணையதளங்களைப் பற்றிய தனதுக் கட்டுரையை முனைவர். மு. இளங்கோவன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஓசை செல்லா பட்டறை செய்திகளை உடனுக்குடன் தமிழ்வெளி முகப்பில் தந்துகொன்டிருக்கிறார்.

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிறைவு விழா

அழைப்பிதழைப் பெரிதாக்கிப் படிக்க, படத்தை "அழுத்தவும்"

வியாழன், 6 டிசம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நிகழ்ச்சி நிரல்

காலை நிகழ்வு தமிழ்க் கணினி
காலை 09.00 - 9.15 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)
காலை 09.15 - 9.30 நிகழ்ச்சிகள் பற்றி அறிமுகம் (15 நிமிடம்) - கோ.சுகுமாரன் காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - பேராசிரியர் நா. இளங்கோ ஏகலப்பை (15 நிமிடம்)

குறள் (5 நிமிடம்)

இளங்கோ (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது -

பேராசிரியர் மு. இளங்கோவன்

தமிழ் 99 (15 நிமிடம்)

ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.31-11.00 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - க.அருணபாரதி

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 11.00- 11.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

காலை 11.15- 12.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார் & உபுண்டு ராமதாஸ்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (25 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.00- 12.30 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் - தமிழா" முகுந்த்

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.30- 01.00 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.00-03.00 வலைப்பதிவு அறிமுகம் - பேராசிரியர் நா. இளங்கோ

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (10நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது(5 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (15 நிமிடம்)

பகல் 03.00-03.30 படங்கள் இணைப்பது (5நிமிடம்) - பிரேம்குமார்

காட்சிப்படம் இணைப்பது (5 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (15 நிமிடம்) - ஒசை செல்லா

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 03.30- 04.00 வலைப்பதிவு தொடக்கம் - நந்தக்குமார்

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 04.00- 04.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 04.15- 04.45 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) - லக்கிலுக்

கேள்வி பதில் (10 நிமிடம்)

இணைய இதழ்களில் எழுதுவது

பகல் 04.45- 05.00 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) மா.சிவக்குமார்

இணைய இதழ்களில் எழுதுவது (8 நிமிடம்)

- பேராசிரியர் மு.இளங்கோவன்

பகல் 04.45- 05.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்

(8 நிமிடம்)

சொந்தத் தளத்தில் வலைப்பதிவு word press எப்படி நிறுவுவது

(15 நிமிடம்)

கேள்வி பதில் (7 நிமிடம்)

பகல் 05.15- 05.30 தமிழைக் கணினியில் பயன்படுத்துவதில் இன்றைய சவால்கள் அவற்றிற்கான சாத்தியமாகக்கூடிய தீர்வுகளும்.