slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

புதன், 31 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு!

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று, புதுச்சேரியில் "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னை வலைப்பதிவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. 
 
புதுச்சேரி பயிற்சிப் பட்டறைக்கு சென்னை வலைப்பதிவர்கள் எந்தளவு ஒத்துழைக்க முடியும் என்பதும், ஏற்கனவே வலைபதிவர் சந்திப்பு நடத்தியது பற்றிய அனுபவம் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். 
 
அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
 
 நாள்: 04-11-2007 ஞாயிறு.  
 
நேரம்: காலை 11-00 மணி.  
 
இடம்: இக்சா மையம் (ICSA Center), 107, பாந்தியன் சாலை, எழுப்பூர் அருங்காட்சியம் எதிரில், எழும்பூர், சென்னை-600 008. 
இக்சா தொலைபேசி: 044 - 28194905.  
குறிப்பு: அறை சுகுமாரன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
 தொடர்புக்கு: இரா.சுகுமாரன்  
உலாபேசி: 94431 05825. 
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

6 கருத்துகள்:

ரசிகன் சொன்னது…

நல்ல செய்தி. வாழ்த்துக்கள்..

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்.
தங்கள் பயணமும் சந்திப்பும்
வெற்றியாக அமையட்டும்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி

இரா.சுகுமாரன் சொன்னது…

ரசிகன், மு.இளங்கோவன் ஆகியோருக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

சந்திப்பு நடந்ததா? என்ன பேசினீர்கள்?

இரா.சுகுமாரன் சொன்னது…

இதற்கும் அனானி கேள்வியா? பெயரை எழுதலாமே.

விவரம் இத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும்

பெயரில்லா சொன்னது…

சென்னையில் வேலை ஒண்ணும் உருப்படியா நடக்கலையா? பதிவே போடலையே?

இதற்கும் அனானி தான் :-)))