slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

சனி, 9 பிப்ரவரி, 2008

புதிய ஒருங்குறி பற்றி பொன்னவைக்கோ அவர்களிடம் ஒரு நேர்காணல்!

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தனது சொந்த ஊரான விழுப்புரம் வானூர் வட்டம், செங்கமேடு கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளிக்கு தனது சொந்த செலவில் கணினி ஒன்று வழங்கி, அந்த ஊரின் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கணினி பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளார்கள்.

இலவச கணினி வழங்கி பயிற்சி அளிக்கு விழா வரும் திங்கள் கிழமை பிப்ரவரி 11-ஆம் நாள் காலை 10 மணி அளவில் அந்த ஊரின் நடுநிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திரு பன்னீர்செல்வம் செய்து வருவதாக வெள்ளி அன்று இரவு துணைவேந்தர் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்து அவர்களை அழைத்துவரும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டுள்ளது. வானூர் பகுதியின் பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு இந்த செய்தி தெரிவித்துள்ளேன். இந்நிகழ்ச்சியில் அனவரும் கலந்து கொள்ளுமாறு நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன். .................... சென்ற மாதம் 23, 24 சனவரி 2008 – இல் யுனிகோடு நிறுவனத்துடன் சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்அவர்களும், முனைவர் பொன்னவைகோ அவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் அறிந்திருப்பீர்கள், வாய்ப்பிருந்தால் புதிய யுனிகோடு நிலைமைகள் பற்றி அவரிடம் ஒரு உரையாடல் அல்லது காட்சிப்படம் எடுக்கலாம் எனத் திட்டம். எனவே, முனைவர் பொன்னவைக்கோ அவர்களிடம் புதிய ஒருங்குறி தொடர்பாக குறிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ஏதெனும் இருந்தால் அன்புகூர்ந்து எனக்கு எழுதும் படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாளை ஞாயிறு (10-02-2008) மற்றும் திங்கள் அன்று அவரை புதுச்சேரியில் சந்திப்போம். நண்பர்கள் கேள்விக்கான பதில் அவரிடம் கேட்டு வரும் திங்கள் அன்று தெரிவிக்கப்படும் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள் இல்லை: