slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

ஞாயிறு, 9 டிசம்பர், 2007

புதுவைப் பட்டறை குறித்து என் கருத்துகள் - ஓசை செல்லா

 ஓசை செல்லா தனது பதிவை முடக்கியுள்ளதால் நகல் இங்கே பதிவு செய்யப்படுகிறது

 புதுவைப் பட்டறைக் குறித்து என் கருத்துகள்

 நேற்றுகாலை ஆரோவிலில் இருந்து வாடைகைக்காரில் 8.15 மணிக்கு புறப்பட்டு சற்குரு ஹோட்டலை அடைந்தபோது இரா சுகுமாரன் அவர்களும் முக்குந்த் அவர்களும்ஏற்கனவே கணினியை கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தனர். அருமையான குளிரூட்டப்பட்ட அரங்கு அது. அருகிலேயே நூறு பேர் சாப்பிடுவதற்கான அரங்கு வேறு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எத்தனை ஆயிரங்கள் ஆகியிருக்குமோ என வியந்தேன். அரங்கின் பின்பகுதியில் 10 கணினிகள் வேறு இணைய இணைப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தன. 10 மணியளவில் அரங்கம் நிறைந்தது. வரிசையாக மதிய உணவு இடைவேளை வரை சீராக ஆரம்ப பாடங்களை கற்றனர். தமிழில் யுனிகோடில் தட்டச்சு செய்வது முதல் படங்கள், வீடியோக்கள் இணைப்பது வரை அனைத்து பாடங்களும் செயல்விளக்கங்களோடு செய்து காண்பிக்கப்பட்டன. இரண்டு சுகுமாரன்களும் இரண்டு இளங்கோக்களும் பம்பரமாகச் சுழன்று பட்டறையை மெருகேற்றினர். 

 

 

 மதியம் அருமையான சாப்பாடு... அனைவரும் தூங்கிவிடுவார்களோ என்று பயந்ததென்னவோ உண்மைதான். ஆனால் முனைவர் இளங்கோ ஒரு அருமையான பொறுமையான வகுப்பு எடுத்து அனைவரையும் அசத்தினார். பின் அனைவரும் ஒரு சில மணிக்கூறுகள் கணிணி முன் அமர்ந்து தனது முதல் தமிழ் வலைப்பூக்களை உருவாக்கி மகிழ்ந்தனர். மாசிவா, வினையூக்கி போன்றவர்கள் பொறுமையாக கேள்விகளுக்கு பதில்சொல்லி செயல்முறைகளை விளக்கினர். 

 பின் முனைவர் மு இளங்கோவன் அருமையான தமிழ் தளங்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். பின்பு நானும் எனது ஒலிப்பதிவு வகுப்பை ஆரம்பித்தேன். ஒரு அற்புதமான கவிதையை ஒரு இளைஞன் பிரசவித்தான்.. அரங்கு நிறைந்த கைதட்டலுடன்!...

மாலையில் தொடரும் .......

கருத்துகள் இல்லை: