slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

சனி, 14 ஜூன், 2008

" இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் " புதுச்சேரியில் கருத்தரங்கு

இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் திங்கள் அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ளது, இடம் “ஓட்டல் லெ ஹெரிட்டேஜ் பாண்டிச்சேரி“ 128 கந்தப்பா தெரு, அண்ணாத்திடல் பின்புறம் புதுச்சேரியில் நடக்க உள்ளது.
இதில் தமிழ்மணம் நிர்வாகி திரு சொ. சங்கரபாண்டி அவர்கள் இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் பற்றியும்,
தமிழ்மணத்தின் நிறுவனரான திரு காசி. ஆறுமுகம் தமிழ்மணம் ஒரு அறிமுகம் என்ற தலைப்பிலும்
திரு தமிழ் சசி உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் வலைப்பதிவுகள்
என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகின்றனர். அனைவரும் வருக,
அழைப்பு இணைத்துள்ளேன்.
வருக வருக அனைவரும் வருக.

10 கருத்துகள்:

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்!!

இரா.சுகுமாரன் சொன்னது…

நன்றி பாலா,

இடம் கிடைக்காமல் அவதிப்பட்டோம். ஒருவழியாக ஏதேனும் ஒரு அரங்கம் என இடத்தை தேர்வு செய்துள்ளோம்.

பெயரில்லா சொன்னது…

நிகழ்ச்சி சிறப்புடன் நடக்க வாழத்துக்கள்

சுந்தரவடிவேல் சொன்னது…

ரெண்டு சுகுமாரன், ரெண்டு இளங்கோ... பெயர்க் குழப்பமில்லாமல் விழா பயனுற வாழ்த்துக்கள் :))

Subbiah Veerappan சொன்னது…

நிகழ்ச்சி சிறப்புடன் நடக்க வாழத்துக்கள்

சீனுவாசன் சொன்னது…

கருத்தரங்கு சிறப்புடன் நடந்தேர வாழ்த்துக்கள்.

புதுச்சேரி நண்பர்களும் வலைப்பதிவில் பங்காற்றுவது மகிழ்ச்சிக்குறிய செய்தியாக கருதுகிறேன்.

நா. கணேசன் சொன்னது…

விழா பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள். ஈரோட்டில் 'கல்வெட்டு' முனைவர் இராசு இல்லத்தில் ஸ்டாலின் குணசேகரனைச் சந்தித்தேன்.

ஈரோட்டிலும், நெல்லையிலும் பதிவுப் பயிலரங்கம் எளிதில் நடத்தலாம். செய்ய வேண்டுகிறேன். மு. இளங்கோவன் சென்னையில் இலக்கியக் கூட்டத்தில் இருப்பதாய்ச் சொன்னார்.

அன்புடன்,
நா. கணேசன்

இரா.சுகுமாரன் சொன்னது…

திரு சுந்தவேல், திரு சுப்பையா நா.கணேசன் ஆகியோருக்கு நன்றி

இரா.சுகுமாரன் சொன்னது…

//விழா பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள். //

நன்றி


//ஈரோட்டில் 'கல்வெட்டு' முனைவர் இராசு இல்லத்தில் ஸ்டாலின் குணசேகரனைச் சந்தித்தேன்.//

ஸ்டாலின் குணசேகரனை தொலை பேசி என் உள்ளதா? இருந்தால் கொடுக்கவும்.

அவர் தலித் எழுத்தாளர் என்று சொன்னார்கள் அதனால் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் அவர்களிடம் கேட்டேன். ஆனால் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

லக்கிலுக் சொன்னது…

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!