இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

சனி, 22 மார்ச், 2008

புதிய ஒருங்குறி விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது

சென்னையில் யுனிகோடு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு 2007 மே மாதம் ஒருங்குறி நிறுவனத்துடன் நடந்த கூட்டத்தில் தமிழுக்கு அதிக இடம் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆய்வு செய்யப்படும் என்ற உறுதியை ஒருங்குறி நிறுவனம் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் 23, 24 சனவரி 2008 யுனிகோடு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடை பெற்றது, தமிழுக்கு ஒருங்குறியில் அதிக எழுத்துக்கள் இடம் பெறச் செய்வதற்கான பேச்சு வார்த்தையின் போது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் (பெயர் நினைவில்லை) தற்போது எந்த எழுத்து உங்களுக்கு கணினியில் தெரியவில்லை, எல்லா எழுத்துக்களும் சரியாகத் தெரியும் போது பிறகு ஏன் இதில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறீர்கள். இது தேவையற்றதாகும் என்று பேசியுள்ளார். அதோடு அல்லாமல் தமிழுக்கு இப்படி அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்வதால் எங்களுக்கு என்ன பயன் என்று ஒருங்குறி நிறுவனத்தினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சீனாவில் அவ்வாறு அதிக இடம் அம்மொழிக்கு ஒதுக்கியதால் ஒரு பெரிய அளவு வியாபாரம் நடந்தது. ஆனால் தமிழில் மாற்றம் செய்தால் வியாபார ரீதியாக எங்களுக்கு என்ன பயன் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு துளைத்துக்கொண்டிருந்தது ஒருங்குறி நிறுவனம் கேட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தயாரித்து வழங்கிய மென் பொருட்களுக்கு வியாபார நிலையில் தமிழக அரசு உதவும் என்பதை பற்றியும் பேசப்பட்டது. இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஒருங்குறி நிறுவனம் சாரிபாகா வந்தவர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்ததால், ஒரு நிலையில் பொருமை இழந்த நமது குழு எங்கள் மொழிக்கு இப்படித்தான் இட ஒதுக்கீடு வேண்டும். அதனை அங்கு சென்று தெரிவியுங்கள். எங்கள் மொழி எப்படி அமைய வேண்டும் என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்கள். எனவே, தமிழுக்கு ஒருங்குறியில் கூடுதல் இடம் ஒதுக்கப்படலாம், ஒரு வேளை அவ்வாறு ஒதுக்கப்படாமல் போனாலும், 16 பிட் குறியீட்டு முறையிலான எழுத்துருக்களை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதே போல இந்திய அரசும் இதனை அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இளங்கோ நிறுவனம் ஏற்கனவே 50 எழுத்துருக்களை புதிய ஒருங்குறியில் வெளியிட்டுள்ளது. ஆகவே புதிய எழுத்துருக்கள் உருவாக்குவது போன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை, புதிய ஒருங்குறியில் எழுத்துருக்களை உடனடியாக வெளியிடுவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை எனினும் தமிழக அரசு ஒருங்குறி நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருக்ககூடும். யுனிகோடு நிறுவனம் தமிழ் மொழியின் புதிய ஒருங்குறியை வெளியிடாவிட்டாலும் தமிழக அரசு புதிய ஒருங்குறி எழுத்துருவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்பது மட்டும் உறுதி எனத் தெரிகிறது.

5 கருத்துகள்:

சரவணன் சொன்னது…

சைனீஸ் மொழிக்கு மட்டும் 20 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்போது தமிழுக்கு 128 இடங்கள் என்பது கொடுமை. ஒழுங்குறி நிறுவனம் இதற்கு ஒப்புக்கொள்ளாவிடில் தமிழக அரசு அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அப்புறம் தற்போதைய inscript Tamil விசைப்பலகை, வின்டோஸின் படுத்தியெடுக்கும் transliteration உள்ளிடுமுறை (இதில் பல குறில்களுக்கு shift தேவை!) போல அதிகாரபூர்வ தமிழ் ஒழுங்குறியும் பயனற்றே கிடக்கும் என்பது உறுதி.

மு. மயூரன் சொன்னது…

தமிழுக்கான புதிய 16 பிட் குறிமுறை வருவது நல்லதே. ஆனால் அது தோற்றுவிக்கக்கூடிய நடைமுறைச்சிக்கலகளையும் கவனத்திலெடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தத்தருணத்தில் இருக்கும் குறிமுறைக்கு மாற்றாக புதிதாயொன்றைக்கொண்டுவரும்போது அது நாம் செய்யும் வரலாற்றுத்தவறாக ஆகிவிடக்கூடாது. இதுபற்றி புதிய தமிழ் ஒருங்குறிக் குழுவினர் போதிய தேளிவோடே இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்னைப்பொறுத்தவரை பழைய ஒருங்குறியுடன் ஏதாவதொரு வகையில் backward compatible ஆக புதியது இருக்குமானால் மிகச்சிறப்பு.

பெயரில்லா சொன்னது…

ஒருங்கு குறியில் உள்ள மிக முக்கிய பிரச்சினை 'ர்' எழுத்து. 'ர' இனின் மீது குற்று வைத்து எழுதப்படவேண்டிய 'ர்' இப்போது கால் இல்லாது நிற்கிறது. அதனைத் திருத்துவதற்கு வழி செய்யுங்கள். 'ா' தமிழ் மொழியில் நெடிலிற்குப் பாவிக்கும் ஒரு குறியீடு. குறியீட்டை எழுத்தாக்கிவிட்டார்கள்!!!!!!

✪சிந்தாநதி சொன்னது…

//ஒருங்கு குறியில் உள்ள மிக முக்கிய பிரச்சினை 'ர்' எழுத்து. 'ர' இனின் மீது குற்று வைத்து எழுதப்படவேண்டிய 'ர்' இப்போது கால் இல்லாது நிற்கிறது. அதனைத் திருத்துவதற்கு வழி செய்யுங்கள். 'ா' தமிழ் மொழியில் நெடிலிற்குப் பாவிக்கும் ஒரு குறியீடு. குறியீட்டை எழுத்தாக்கிவிட்டார்கள்!!!!!!//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிய வில்லையே? ர+் என்பது தான் ர் என்று வருகிறது. ஒருங்குறியோ கணினி மொழியோ வருவதற்கு முன்பே தமிழில் இப்படித்தான் எழுதப் படுகிறது. புள்ளியிட்டபின் கால் இருப்பதில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் அச்செழுத்துக்கள் ஆரம்ப முதலே அப்படித்தான் இருக்கின்றன. கணியச்சுக்கு முந்தைய நிலையிலேயே வந்த மாற்றம் இது. இதற்கும் ஒருங்குறிக்கும் தொடர்பில்லை.

பெயரில்லா சொன்னது…

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Perfume, I hope you enjoy. The address is http://perfumes-brasil.blogspot.com. A hug.