slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

ஞாயிறு, 11 மே, 2008

தமிழர்களை ஒருங்கிணைக்க கணினியில் தமிழ் முயற்சி பயன்படும் - அமைச்சர் திரு.க.பொன்முடி உரை.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
 
தமிழில் இதுபோன்ற கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்கள். 
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய பன்னாட்டு அறிஞர்களை அழைத்து சென்னையிலேயே மாநாடு நடத்தினார்கள். இதுபற்றி அவர் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். 
 
கணினியில் தமிழ்ப் பயன்பாடு வந்திருந்தாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தால் தமிழில் பேசாதது தான் காரணம். ஆங்கிலத்தில் பேசும் பிற மொழி மோகம் நமக்கு இருக்கிறது. அதை நாகரீகம் எனக் கருதுகிறோம். 
 
கணினிப் பயின்று வெளிநாட்டில் நமது இளைஞர்கள் பணியற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கிறவர்கள் தமிழைப் பயன்படுத்த முடியாது. சீனாவில் சீன மொழிதான். கணினி மொழிக்கு அப்பாற்பட்டு வளர்ந்துக் கொண்டிருக்கிற சாதனம். பல்வேறு சமூக மக்களை இணைக்கிற சாதனம். 
 
கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறைந்தபட்சம் தமிழர்களை இணைக்கவாவது பயன்படும். இந்த முயற்சி தொடர வேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த முயற்சியைக் கொண்டு சென்றால் தமிழ் வளரும். குறிப்பாக கல்லூரி பேராசிரியர்கள் இதற்கு உரிய முயற்சி எடுக்க வேண்டும். 
 
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுகலை - தகவல் தொழில்நுட்பப் பாடப் பிரிவு தொடங்க உள்ளோம். அதில் இந்த முயற்சியைத் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: