இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு 16, மே 2010,

தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் என புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கருதுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து  மாநாடு ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே மே மாத தொடக்கத்தில் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காமல் போனதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  வரும் மே மாதம் 16 ஆம் நாள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடத்தலாம் என கருதியுள்ளோம்.

இந்த நிகழ்வில் இதுவரை கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இசைவளித்துள்ளனர்.
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை,
  3. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (இணைய வழி உரை/ தொலைபேசி உரை)
  4. திரு.மணி.மு.மணிவண்ணன்,  சென்னை
  5. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி
  6. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருத்துக்களை ஒலி/ஒளி வடிவத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

இந்த நிகழ்வில்  மேலும் சில தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள், மொழி அறிஞர்கள், நேரில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க இருக்கிறார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825

4. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
5. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தமிழ்மணம்
1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு

நாக.இளங்கோவன் அவர்களின்
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-9
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12
திரு. செல்வா - தமிழ்வெளி
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

4 கருத்துகள்:

மகரந்தன் சொன்னது…

மாநாடு சிறக்கவும் வெற்றிபெறவும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
- மகரந்தன்

விருபா - Viruba சொன்னது…

நாக. இளங்கோவன் அவர்களுடைய எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பிலான கட்டுரைகளின் சுட்டி தந்தமைக்கு நன்றிகள்.

மேலும் மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

தோழமைக்கு வணக்கம்..

முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்வையொட்டி, மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நடக்கவிருப்பதால், மே 16 அன்று நடைபெறும் இம்மாநாட்டில் என்னால் பங்கேற்க இயலாமைக்கு வருந்துகிறன்.

எனினும், தமிழக அரசின் புதிய தமிழ் எழுத்து சீர்திருத்தத்திற்கு எதிரான பரப்புரைப் பணிக்கு நானும், நான் சார்ந்துள்ள இளந்தமிழர் இயக்கமும் முழு ஆதரவளிப்புடன், இணைந்து செயல்படவும் முயற்சிக்கிறேன்.

தோழமையுடன்,
க.அருணபாரதி

Venkatesh சொன்னது…

மாநாடு சிறக்கவும் வெற்றிபெறவும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.