Ads 468x60px

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Wednesday, June 2, 2010

எழுத்து மாற்றம்: தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறுவார்களாக! –விடுதலையில் வீரமணி அறிவுரை!!?

புதுச்சேரியில் நடைபெற்ற எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் புலவர் இளங்குமரனார் பேச்சை ஒட்டி விடுதலை நாளேடு கடந்த 20-05-2010 அன்று தலையங்கம் எழுதியுள்ளது. அந்த தலையங்கத்தில் தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறுவார்களாக! என அறிவுரை? வழங்கியுள்ளார்.
அந்த செய்தி விடுதலை இணையபக்கத்திலும் வெளிவந்துள்ளது.விடுதலை தலையங்கச் செய்தி

எழுத்துச் சீர்திருத்தம்

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு ஒன்று கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கு கொண்ட புலவர் ஆர். இளங்குமரனார் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தாவது:

தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தால், தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழைப் படிக்கவேண்டிய நிலை ஏற்படும். இதனால் தமிழில் ஏற்கெனவே உள்ள பல்லாயிரக்-கணக்கான அரிய நூல்களும், இணைய தளத்தில் பல்துறை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள செய்திகளும் பயனற்றுப் போகும் என்றெல்லாம் அச்சுறுத்தி உள்ளனர்.

தமிழ் மொழியின் வரலாற்றை எடுத்துக்-கொண்டால் இப்பொழுது உள்ளதுபோலவே தொடக்கத்திலிருந்து வருகிறது என்று சொல்ல முடியுமா? ஓலைச்சுவடி, கல்வெட்டுகளில் எப்படி-யெல்லாம் எழுத்துகள் இடம் பெற்றிருந்தன, இடையில் எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாகின என்பதெல்லாம் நம் மதிப்பிற்குரிய புலவர்களுக்குத் தெரியாதா?

தந்தை பெரியார் புகுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதால் என்ன சிரமம் ஏற்பட்டது? மேலும் எளிதாகப் படிக்கவும், கற்கவும் வசதி செய்து தரப்பட்டது. அது தவறா?

தமிழில் உள்ள 247 எழுத்துகளை எழுது-வதற்கு தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்-தத்திற்குப் பிறகு 107 குறியீடுகள் தேவைப்-படு-கின்றன. அவற்றுள் உயிர் மெய், இகர, ஈகார, வரிசைக்கு 36 குறியீடுகளும், உயிர் மெய் உ-கர, ஊ-கார வரிசைக்கு 36 குறியீடுகளும், ஆக 72 குறி-யீடுகள் தேவைப்படுகின்றன. மற்ற அனைத்-திற்கும் வேண்டியவை 35 குறியீடுகள்தான்.

இதனால் எழுத்துகளின் எண்ணிக்கை குறைகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு எழுத்துகள் குறைகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு மொழியை எளிதில் கற்க முடியும். மேலை நாடுகளில் வாழும் தமிழ் வீட்டுப் பிள்ளைகள், தமிழே தெரியாமல் வளரும் நிலை இதனால் தடுக்கப்படும். உலகம் முழுவதும் தமிழ் மொழி பரவிட இதனால் அதிக வாய்ப்புக் கிட்டும்.

தெ.பொ.மீ. ,பேராசிரியர் கா.அப்பாதுரை, புலவர் குழந்தை, கி.வா.ஜ., பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் போன்றவர்கள் எல்லாம் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளனரே!

உலகில் பல மொழிகளிலும் இந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றுதான் உள்ளது. ஜப்பானிய மொழி வலமிருந்து தொடங்கி செங்குத்து வரிசையில் எழுதப்படுவதாகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இடதுபுறத்தில் இருந்து எழுதத் தொடங்கிவிட்டனர். பண்டைய வரிவடிவமான நஞ்ச்சியுடன் சுதாகான, ஹீரா கான என்ற புதிய வடிவங்களையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

சீனாவில் 1956 இல் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாடு முற்றிலுமாக பழைய வடிவங்களைப் புறக்கணித்து விட்டு ரோமன் வடிவை ஏற்றுக்கொண்டு விட்டது.

கேரளாவிலும் மலையாள மொழியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குஞ்சன் பிள்ளைக் குழுவின் பரிந்துரையை ஏற்று, மலையாள மொழியில் பயன்படுத்தப்பட்டு வந்த குறியீடுகளில் 75 விழுக்காடாகக் குறைத்துக் கொண்டுவிட்டது.

1935 இல் தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த எழுத்துச் சீர்திருத்தம் மேலும் வளர்ச்சித் திசை நோக்கிச் செல்வது, -அறிவியல் கண்ணோட்டத்தில் அவசியமேயாகும்.

எழுத்துச் சீர்திருத்தம் தமிழர்களிடையே பிரி-வினையை ஏற்படுத்திவிடும் என்கிற அளவுக்கு சில புலவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமானதே! அவர்கள் கூறும் கருத்துகளில் விளக்கமும் இல்லை_ விவரமும் இல்லை.

18- ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் ஏகார, ஓகார வரிசைகளில் மாற்றம் செய்துள்ளார். 20 ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியார் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது. அதனை ஏற்றுக் கொள்ளத் தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறு-வார்களாக!

4 comments:

nayanan said...

தமிழூழியில் தமிழ்ப் புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இவ்வளவு பெரிய சோதனை இதற்கு முன்னர் வந்திருக்கவே வந்திருக்காது :-))

புலவர்களுக்கு நேர்ந்திருக்கும்
பேரவமானம் இது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

வர வர மணியை ரொம்ப ஆட்டுறான் இவன்....

சுப.நற்குணன் said...

அறிவு - ஆய்வு - ஆராய்ச்சி - பகுத்தறிவு என எதற்குமே துளியளவும் இடம் கொடுக்காமல்..

பெரியார் காட்டிய அறிவாண்மைக்கு எதிராக..

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் வள்ளுவத்தின் வாக்கைக் காற்றில் பறக்கவிட்டு..

எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று கேட்கிறார்கள் - கூவுகிறார்கள்.

எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்கவேண்டும் என்ற பகுத்தறிவு வீராப்பெல்லாம் குப்புற விழுந்து கிடக்கிறது.

rosered said...

மாற்றம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். சமூதாயத்தில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட வடிவத்தை மாற்றுவது என்பது தேவையை ஒட்டி அமைய வேண்டும். அந்த அடிப்படையில் மாற்றம் செய்தால் மறுக்க முடியாது. ஆனால், தமிழ் இலக்கியத்தில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன.

ஆனால், மக்கள் மத்தியில் உபயோகத்தில் உள்ள சொற்கள் சில ஆயிரங்கள் மட்டுமே, அதற்காக உபயோகத்தில் உள்ள சொற்களை மட்டும் எடுத்துக் கொண்டு உபயோகத்தில் இல்லாத சொற்களை அழித்துவிடலாமா?.

 

Sample text

Sample Text