இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வியாழன், 14 ஜூன், 2012

தமிழில் எளிய வகையில் போட்டோசாப், (PHOTOSHOP-CS4) கோரல் டிரா, (C0RELDRAW-X4) டிரீம்வியூவர், (DERAMWEAVER CS4)  உள்ளிட்ட மென் பொருள்களை உபயோகிக்க தமிழில் எளிய விளக்கத்துடன் கூடிய வீடியோ வடிவிலான குறுந்தகடு "தமிழ் வழி சாப்ட்வேர் கல்வி" என DIGITAL MEDIA நீறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள். 
 
உண்மையிலேயே மிகவும் பயனுள்ள ஒரு குறுந்தகடாகும் இது. இந்த குறுந்தகட்டில் அடிப்படையை செய்தி களைக்கூட மிகச் சிறப்பாக இவற்றை விளக்கியுள்ளனர். அனைவரும் வாங்கிப் பயன்பெறலாம்.
போட்டோசாப், (PHOTOSHOP-CS4)

போட்டோசாப் மென்பொருள் உபயோகிக் கும் முறை குறித்து "இ.கிரிசுடோபர் விசய்" என்பவர் விளக்கியிருக்கிறார். நல்ல குரல் வளம் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார். அவர் பாடங்களை விளக்க அவர் பின்பற்றியிருக்கும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. புரியும் படி விளக்குகிறார். கருவிப் பட்டையில் (TOOL BAR) உள்ள ஒவ்வொரு கருவியையும் (TOOL) எப்படி பயன் படுதுவது என்பதை மிக அழகாக விளக்குகிறார்.


அதோடு இல்லாமல் அதே போன்ற வேறு கருவிகளை உபயோகிக்கும் போது, இந்த கருவிக்கும் அந்த கருவிக்கும் உள்ள நிறை குறைகளையும் அவ்வப்போது விளக்குகிறார். மேலும், மற்ற கருவிகளை உபயோகிக்கும் போதும், ஏற்கனவே விளக்கப்பட்ட கருவிகளைப் பற்றி நடுநடுவே பேசி விளக்கி அவை மறந்து போகாமலும் உள்ளவாறு பார்த்தும் விளக்கியுள்ளார்.

குறுந்தகடின் இறுதியில் போட்டோசாப்CS5 , (PHOTOSHOP-CS5) இல் புதிதாக என்னென்ன வசதிகள் அளித்துள்ளனர் அதை உபயோகிப்பது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இந்த குறுந்தகடின் விலை ரூ.200 என குறிப்பிட்டுள்ளார்கள். வெளியில் கற்றால் இதன் மதிப்பு ரூ.2000 அளவுக்கு மேல் மதிப்புடையது என நான் கருதுகிறேன்.

கோரல்டிரா, (C0RELDRAW)
கிரிசுடோபர் விசய் அவர்களின் விளக்கம் போட்டாசாப்பில் அறிந்தேன் கோரல்டிராவிற்கும் அவர்தான் விளக்கம் அளித்திருக்கிறார் என அறிந்து அதனையும் நான் வாங்கினேன். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார், ஆனால் நான் ஏமாந்துவிடவில்லை. கோரல்டிராவிலும் அவர் மிகச்சிறப்பாக அசத்தியுள்ளார். இதிலும் ஒவ்வொரு கருவியாக மிகச்சிறப்பாக விளக்கும் முறை நன்றாக உள்ளது. இது போன்ற குறுந்தகட்டில் உள்ள வசதி என்னவென்றால் நாம் எப்போது வேண்டுமானாலும் நேரம் கிடைக்கும் போது கற்றுக் கொள்ள முடியும்.

வெப் டிசைனிங், (WEB DESIGNING)


இந்த குறுந்தகடில் இணைய தள வடிவமைப்பு பற்றி வைதியநாத் என்பவர் விளக்கியுள்ளார். இதில் அடிப்படைகளை நன்றாக விளக்குகிறார்.

முதல் இரண்டு பாடங்கள் எச்.டி.எம்.எல் பற்றியும் அடுத்த பாடங்கள் அடோப் டிரீம்வியூவர் மென்பொருளில் இணைய தள வடிவமைப்பு பற்றி விளக்குகிறார். அடுத்து "ஜாவா ஸ்கிரிப்ட்" பற்றியும் விளக்குகிறார்.

இதுவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனினும் இவர் மிகவும் தொடக்கத்தில் உள்ள கணினி உபயோகிப்பாளருக்கு பாடம் சொல்லித் தருவது போல் சொல்வது கொஞ்சம் விறுவிறுப்பில்லாமல் இருந்தது. உதாரணமாக "நகல் எடுத்தல்" "ஒட்டுதல்" போன்ற அளவில் மிகவும் தொடக்க நிலையில் உள்ளவர் அளவுக்கு எளிமை இருந்தது. இதனால் அடிப்படை அறிந்தவர்களுக்கு கொஞ்சம் பொறுமை இழக்க வேண்டியிருக் கலாம். சில இடங்களில் ஏற்கனவே விளக்கிய அதே செய்தியை இவர் சொல்லும் போது கொஞ்சம் பொருமை இல்லை. எனினும் பயனுள்ளது.


பிளாஷ், (FLASH)


பிளாஷ் மிகவும் பயனுள்ள ஒன்று. எனினும் இதனை பார்த்தபின் முழு அளவில் கற்றுக்கொள்ள இயலும் என்று கருத முடியவில்லை.

மற்றும் எம்.எஸ் ஆபிஸ் வேர்டு, மற்றும் எக்செல், மற்றும் டேலி ஆகியவை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்கள். எக்செலில் மற்றும் பல்வேறு முறையில் பயன்படுத்து என்பது பற்றி விளக்கமளிக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவசியம் வாங்கலாம். பயனுள்ளது
.

கருத்துகள் இல்லை: