slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

புதன், 21 நவம்பர், 2007

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வரும் டிசம்பர் 9 அன்று ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளதை அறிந்திருப்பீர்கள். கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கணினியில் தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பை இலவசமாக வழங்கி பயிற்சி அளிப்பது எனத் திட்டமிட்டுள்ளோம். 
 
அந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்மணம் நிர்வாகம் எங்களுக்கு ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. ... என்று திருவள்ளுவர் சொன்னது போல, இது மிகப் பெரிய உதவியாகவும், நாங்கள் கேட்காமலேயே மனமுவந்து அளித்துள்ளமையால் இதனை அதைவிட பெரியதாக நாங்கள் கருதுகிறோம். 
 
தமிழ்மணதிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
 
 நன்றி
 இரா.சுகுமாரன் 
ஒருங்கிணைப்பாளர் 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழ்மணத்திற்கு நானும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

தமிழுக்கான தமிழ்மணம் எவ்வளவு அக்கரையாக உள்ளது என்பது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது

manjoorraja சொன்னது…

தமிழ் மணத்தின் இது போன்ற சிறந்த சேவைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.