slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

செவ்வாய், 27 நவம்பர், 2007

“தமிழா” முகுந்த் அவர்களுக்கு நன்றி – புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய இணைய தளம் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை நடத்த திட்டமிடுவதற்கு முன்பாக பதிவு செய்வதற்காகவும், நிர்வகிப்பதற்கும் ஒரு தளம் தேவை என்றும், அதற்கான புதிய தளம் ஒன்றும் தொடங்குவது என திட்ட மிட்டிருந்தோம். ஆனால், பின்னர் அது தேவையில்லை என்று முடிவு செய்தோம். 
 
 அதன்பின் நண்பர் வெங்கடேஷ் புதுச்சேரியில் நடத்தி வரும் தூரிகா இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று ஒரு படிவம் செய்து அனுப்பி இருந்தார், இதனால் அதில் புதிய பதிவர்களை பதிவு செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். 
 
ஆனால், அனைத்து தமிழ்ப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், ஊர் வாரியாக பிரிந்து இருக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இதனால் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தளத்தை பயன்படுத்தலாம் என்று கருதியிருந்தோம். 
 
அது இயலாமல் போனதால் மீண்டும், தூரிகா இணைய தளத்தில் பதிவைத் தொடங்குவது என முடிவு செய்து அதில் பதிவு செய்திருக்கிறோம். இந்நிலையில் திரு முகுந்த் அவர்களை பதிவர் பட்டறையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தோம். எங்கள் பதிவு "பிளாக்" இல் இருந்ததால் புதிதாக ஒரு இணைய தளம் ஒன்றை பதிவு செய்து தமிழா சிஸ்டம் நிறுவனத்தின் சார்பாக எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு அன்புடன் வழங்கியுள்ளார். 
 
அத்துடன் எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு குறிப்பேடுகளை தன் செலவில் வழங்கவும் முன்வந்துள்ளார். அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: