slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

வெள்ளி, 30 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செலவுப் பட்டியல் - நிதி தாரீர்!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை குறித்த செலவு பட்டியலைக் கீழே கொடுத்துள்ளோம்.

செலவுப் பட்டியல்:

1. அரங்கம் 1 நாள் வாடகை - ரூ. 7000

2. மதிய உணவு, தேநீர், பிற ரூ.13000

3. விளக்க துண்டறிக்கை ரூ. 400

4. மடல் தாள்கள் ரூ. 400

5. நன்கொடை சீட்டு ரூ. 200

6. தமிழ்க் கணினி மலர் ரூ.15000

7. அழைப்பிதழ் (நிகழ்ச்சி நிரல், நிறைவு விழா) ரூ. 1000

8. சுவரொட்டி ரூ. 1000

9. பதாகைகள் (எண்ணிக்கை: 2) ரூ. 500

10. சிறப்பு அழைப்பாளர் தங்குதல், உணவு ரூ. 1500

11. கணினி (வாடகைக்கு) ரூ. 7500

12. கணினி இணைப்புக்கு ரூ. 1000

13. இணைய இணைப்பு ரூ. 1200

14. குறுந்தகடு (எண்ணிக்கை: 200) ரூ. 1700

15. குறுந்தகடு மேல் அச்சு ரூ.600

16. குறுந்தகடு மேல் உறை _ ரூ. 200

17. கோப்புகள் (எண்ணிக்கை: 150) ரூ 1500

18. கோப்புகள் மீது அச்சு ரூ. 200

19. குறிப்புச் சுவடி (எண்ணிக்கை: 150) ரூ. 1500

20. குறிப்புச் சுவடி மீது அச்சு ரூ. 200

21. எழுதுகோல் (எண்ணிக்கை: 150) ரூ. 750

22. அடையாள அட்டை ரூ. 300

23. பங்கேற்போருக்கு சான்றிதழ் ரூ. 1000

24. அஞ்சல், கூரியர் செலவு ரூ. 500

25. நகல் எடுக்க ரூ. 200

26. பிற ரூ. 1000

மொத்தம் செலவு ரூ. 59,350/-

தமிழ் மொழி ஏற்றம்பெற நடத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவு தர வேண்டுகிறோம். கணிசமான தொகை நிதி அளித்து ஆதரவாளர்கள் ஆக வேண்டுகிறோம். பிறர் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து உதவ வேண்டுகிறோம்.

நிதி அளிக்க தொடர்பு கொள்க:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825 மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த பயிற்சி பட்டறையின் நோக்கங்கள் குறித்து அறிய தந்தால் உதவியாக இருக்கும்.
நீதிமான்

இரா.சுகுமாரன் சொன்னது…

நீதிமான் அவர்களே

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்: புதுச்சேரி பதிவர் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பதிவு செய்க

என்ற பதிவில் பார்க்கவும்

பெயரில்லா சொன்னது…

இவ்வளவு பற்றாக்குறை வைத்து எப்படி நிகழ்ச்சி நடத்தப்போகிறீர்கள்?

சென்னைப் பதிவர்கள் ரூபாய் 51,276/- மீதிப்பணம் வைத்திருக்கிறார்களே அதில் ஏதாவது உங்களுக்கு கொடுப்பார்களா?

நீங்கள் கேட்டீர்களா? இது போன்ற நிகழ்ச்சிக்குத்தானே வசூல் செய்தார்கள். அவர்களாக முன் வந்து கூட கொடுத்திருக்கலாமே!

இதுவரை நீங்கள் கொடுத்ததாக பட்டியலிடவில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

மன்னிக்கவும், வெறும் 100 பேர் கலந்து கொள்ளும் பட்டறைக்கு 59,000 ரூபாய் என்பது தேவையில்லாத ஆடம்பரமாகத் தோன்றுகிறது. நன்கொடை தர விரும்புபவர்களையும் கூட இது யோசனையில் ஆழ்த்தி விடும்.

100 பேர் சாப்பாட்டுக்க 13,000?

15,000 ரூபாய்க்கு என்ன தமிழ்க் கணினி மலர் என்று புரியவில்லை? இதன் உள்ளடக்கம் என்ன?

இரா.சுகுமாரன் சொன்னது…

100 பேர் மட்டுமல்ல சுமார் 250 பேர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனை கட்டுப்படுத்தவே நுழைவுக்கட்டணம் என்று அறிவித்தோம். 100 பேர்கள் பதிவு செய்தவுடன் பதிவு செய்வதை நிறுத்தி விட்டோம். ஆனால், தொலைபேசியில் சிலர் நானும் வருவேன் ஏன் நாங்கள் பதிவு செய்வதற்கு முன் பதிவு செய்வதை நிறுத்தி விட்டீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். உணவு அதிகம் தான் இருப்பினும் அது குறித்து உணவக விடுதி பொறுப்பாளர்களிடம் பேச இருக்கிறோம். குறைக்க முயற்சி செய்வோம்.

இரா.சுகுமாரன் சொன்னது…

கணினி மலர் என்பது "தமிழ்க் கணினி" பற்றிய கட்டுரைகள் மென்பொருட்களை உபயோகிப்பது பற்றிய தகவல்கள் உள்ளடங்கியது.

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

சுகுமாரன்,
நீங்கள் தொகுத்துள்ள செலவினங்களில் மதிய உணவு, விழாமலர் இரண்டுமே மொத்த செலவில் பாதியாக இருக்கிறது. இந்த இரண்டுமே நம் ஊர் விழாக்களில் இரண்டற கலந்துவிட்ட தேவையற்ற செலவுகள்.

நான் இந்தியாவிலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் அறிவியல் மாநாடுகளில் கலந்துகொண்டிருக்கிறேன். இலவசமாக மூக்கு முட்ட சாப்பாடு போட்டு அரங்கில் தூங்கவைக்கும் வழக்கம் இந்தியாவில் மட்டுமே உண்டு. போதிய இடைவேளை கொடுத்து மதிய உணவை அவரவர்களே கவனித்துக்கொள்ள வேண்டுமென வைப்பதே சரியான அணுகுமுறை. இங்கு (வட அமெரிக்காவில்) அப்படி தான் நடைமுறை (உணவும் கொடுக்கும் மாநாடுகளில், அதற்கென தனிக்கட்டணம் செலுத்தவேண்டும்).

அதேபோல மாநாட்டுமலர்களில் என்பதில் பாதி கட்டுரைகளுக்கு மேல் உருப்படியான கட்டுரைகளாக இருப்பதில்லை. நீங்கள் நடத்தப்போவது ஒரு பயிற்சிப் பட்டறை. பயிற்சியின் இறுதியில் பங்கு பெற்றவர்களுக்கு வலைப்பதிவை துவக்குவது, எழுதுவது போன்றவற்றில் போதிய அறிவு கிடைத்திருக்க வேண்டும். அதற்கு உதவியாக ஒரு கையேடு தயாரித்து அளித்தால் மட்டும் போதுமானது. இதில் விழா மலர் எதற்கு?

சென்னை வலைப்பதிவு பட்டறை நடத்தியவர்களில் ஒருவர்கூட இதில் இதுவரை துளிகூட ஆர்வம் காட்டாமலிருப்பது ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஒருவேளை அவர்களுடைய 'தமிழுலகம்' சென்னையோடு முடிந்து விடுகிறதோ?

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

சுகுமாரன்,
ஒரு விஷயத்தைக் கேட்க மறந்துவிட்டேன். பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? 250 பேர் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஒருவருக்கு ரூ.100 பதிவுக்கட்டணம் வீதம் வசூலித்தால், 200 பேர் பதிவுசெய்தால் கூட ரூ. 20,000 திரட்ட முடியும். பதிவு இலவசம் என்றால், இலவசமாக சாப்பாடும் போட்டு, பயிற்சியும் கொடுத்து பட்டறையை நடத்துவது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. குறைந்தபட்சம் பாதிச் செலவையாவது பங்கேற்பவர்களிடமிருந்து வசூலித்து, மீதியை நன்கொடைகள் மூலமாக சரிகட்டுவதே சரியாக இருக்கும்.

லக்கிலுக் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

திரு இரா.சுகுமாரன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் தமிழ் சமூக முயற்ச்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. நான் பாரீசில் வசித்தாளும் தமிழ் உணர்வுள்ளவன். நானும் இங்குள்ள உண்மையான தமிழ் ஆர்வம் உள்ளவர்களூக்கு தமிழில் எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொடுத்து வருகிறேன். தமிழனுக்கு
கோடு போட்டுக்காட்டினால் போதும்
ரோடு போடும் திறமை படைத்தவன்.
அடுத்தமுறை தங்களைத் தங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்கிறேன்.
தங்கள் முயற்ச்சிக்கு என்னுடைய
வாழ்த்துக்கள்.
புதுவை. சத்தியமூர்த்தி

இரா.சுகுமாரன் சொன்னது…

சிலர் தேவையற்ற முறையில் பிறரைப் பற்றியும், அவதூறாகவும் சில பின்னூட்டங்களை அளித்துள்ளார்கள்.

அவை வெளியிடப்படாமல் இதுவரை 11 பின்னூட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி அவை வெளியிடப்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுவாக பிறரை அவதூறாக சொல்லும் எந்த பின்னூட்டமும் இதில் வெளியிட இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரா.சுகுமாரன் சொன்னது…

ஒரு பைசா கொடுக்காதவனுங்க எத்தனை கேள்வி கேட்கிரானுங்க தெரியுமா? அதெல்லாம் வெளியிடல!