திங்கள், 3 டிசம்பர், 2007

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இப்பட்டறை சிறப்பாக நடைபெற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் உதவ முன்வந்துள்ளார். 

சற்குரு உணவக அரங்கம் மற்றும் உணவு ஆகியவற்றின் செலவுகளைத் தன் பொறுப்பில் செய்ய உறுதி அளித்துள்ளார். பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். சட்டப்பேரவைத் தலைவர் திரு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 கருத்துகள்:

வின்சென்ட். சொன்னது…

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை மிக சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை இன்றே கூறிவிடுகிறேன்.

manjoorraja சொன்னது…

நிகழ்ச்சி சிறப்புற நடக்க வாழ்த்துக்கள்.