ஊடகச் செய்தி 30.01.2011
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் இன்று (30-01-2011) காலை 10.30 முதல் 1.30 வரை வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.
இம்மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் |
இராம.கி அவர்கள் |
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
மா.பூங்குன்றன் அவர்கள் |
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் |
- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது. 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது என ஒருங்கு குறி நிறுவனத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
- இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன், அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்.
3 கருத்துகள்:
மிகச்சிறப்பாக உள்ளது படங்களும், தீர்மானங்களும் நிகழ்வின் பதிவும். அரும் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களும், முனைவர் இராம.கி ஐயா அவர்களும் கலந்துகொண்டார்கள் என்று அறிந்து மிக மகிழ்ந்தேன்.
செல்வா
வாட்டர்லூ, கனடா
நன்று...
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக