இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தமிழ் மொழியில் கிரந்தகத்தை கலந்தால் விளைவுகள் ஏற்படும்- தினகரன் செய்தி



தமிழ் அறிஞர்கள் எச்சரிக்கை

புதுச்சேரி, ஜன. 31:
தமிழ் மொழியில் கிரந்தகத்தை கலந்தால் பல விளைவுகள் ஏற்படும் என்று தமிழ் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தகக் கலப்பு எதிர்ப்பு மாநாடு புதுவை வணிக அவையில் நேற்று நடந்தது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மென்பொருள் வல்லுநர் அருணாபாரதி வரவேற்றார். வெங்கடேசு முன்னிலை வகித்தார். சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர் தெய்வசுந்தரம் கலந்து கொண்டு மின் நூலை வெளியிட முதல் படியை மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் பெற்றுக்கொண் டார். புதுச்சேரி இயற்கை கழகம் தங்கப்பா, காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்துறை இளங்கோ, தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு தமிழ்நம்பி, புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழ்நெஞ்சன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பேசும்போது, கிரந்தகத்தை தமிழில் கலந்தால் பல விளைவுகள் ஏற்படும். நாம் தெரிந்தே வேற்று எழுத்துகளை நம் மொழியில் கலக்க அனுமதிப்பது தற்கொலைக்கு சமமானது என்றனர். இளங்கோ நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை: