slide

Slide 1
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
Slide 2
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் - தமிழ்மணம்
Slide 4
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
Slide 6
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
Slide 7
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி

ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு பெறுகிறது - விடைபெறுகிறேன் - நன்றி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு செய்திகளை ஓரளவுக்கு உடனுக்குடன் அளித்தோம்.
ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
விடைபெறுகிறேன்...
கோ.சுகுமாரன்.

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலைபதிவர்களுக்குப் பாராட்டு.

இரா.சுகுமாரன்... 

கோ.சுகுமாரன்... பேராசிரியர் மு. இளங்கோவன்... க.அருணபாரதி... விழுப்புரம் வலைபதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பொறுப்பாளர்களுக்கு நூல் அளித்துப் பாராட்டினர். சிறகத்தைச் சேர்ந்த இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேராசிரியர் மு.இளங்கோவன், க.அருணபாரதி மற்றும் கடலூர் சீனுவாசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கின் நிறைவு விழா.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் தமிழநம்பி, இரவிகார்த்திகேயன், எழில்.இளங்கோ உள்ளிட்டோர், பி.எஸ்.என்.எல்., துணைப் பொதுச் செயலாளர் கே.இரவீந்தரன், கோட்டப் பொறியாளர் கி.இராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசுக் கல்லூரி பேராசிரியர் குமரன் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.
 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைபாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
பயிலரங்கில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் பயிலரங்கில் கலந்துக் கொண்ட சென்னை வலைப் பதிவர்களுக்குப் பாராட்டு...

விக்கிக்கு பாராட்டு செய்யும் பேராசிரியர் குமரன்... வினையூக்கிக்கு பாராட்டு செய்யும் விழுப்புரம் அரசுக் கல்லூரி கணிப் பொறி ஆசிரியர் குமார்... பாலபாரதிக்கு பாராட்டு செய்யும் பன்னீர்செல்வம்... மா.சிவக்குமாருக்கு பாராட்டு செய்யும் தயா.இளந்திரையன்...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கிற்கு "தமிழ்மணம்" ஆதரவு - நன்றி.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கத்திற்கு தமிழின் முதலாவது திரட்டி "தமிழ்மணம்" ஆதரவளித்துள்ளது. அவர்களுக்கு எங்களுடைய நன்றிகள்.
புதுச்சேரியில் நடந்த "தமிழ்க் கணினி" வலைபதிவர் பயிற்சிப் பட்டறைக்கு தமிழ்மணம் நிதி அளித்து ஆதரவளித்தை இங்கு நன்றியோடு குறிப்பிட விரும்புகிறோம்.

விழுப்புரம் பயிலரங்கில் "தமிழ் மென்பொருள்" அறிமுகம் - விளக்கம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "தமிழ் மென்பொருள்" குறித்து, க.அருணபாரதி, இரா.சுகுமாரன் ஆகியோர் விளக்கி பயிற்சி அளிக்கின்றனர். இந்த மென்பொருள்களை மென்பொருள் பொறிஞர் க.அருணபாரதி உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் அடங்கிய குறுந்தகடு பயிற்சிப் பயிலரங்கில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இலவயமாக வழங்கப்படுகிறது.

விழுப்புரம் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' அறிமுகம்...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' பற்றி பாலபாரதி விளக்கம் அளித்தார். குறிப்பாக 'பயர்பாக்ஸ்' பற்றி விரிவாக பயிற்சி அளித்தார். மேலும், அதில் உள்ள பாதுகாப்பு, வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், பல இணைய உலாவிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

விழுப்புரம் பயிலரங்கில் "தமிழில் இயங்குதளங்கள்"...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கில் "இயங்குதளங்கள்" பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இயங்குதளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது தவறானது, தமிழிலும் இயங்குதளங்கள் உள்ளது பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தற்போது "மைக்கிரோசாப்ட்" நிறுவனம் தமிழில் பல்வேறு சேவைகளைத் தருகிறது. இது பற்றி செய்முறை விளக்கம் அளிக்கிறார் இரா.சுகுமாரன். மேலும், மா.சிவக்குமார் தமிழில் இயங்குதளம் செயல்பாடு பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் "கூகுள்" சேவைகள் பற்றி...

விழுப்புரம் பயிலரங்கில் தற்போது கடலூர் சீனுவாசன் "கூகுள் ரீடர்" பற்றியும், அதன் பயன் பற்றியும் விரிவாக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். மேலும், இரா.சுகுமாரன் "கூகுள்" தேடல் ஆங்கிலத்திலும், தமிழிலும் தட்டச்சு செய்து தேடலாம் என்பது குறித்து பயிற்சி அளித்தார். மேலும், "கூகுள்" பல்வேறு சேவைகள் பற்றியும் விளக்க அளிக்கப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்படும் என்று எண்ணுகிறேன்.

விழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் இணைப்பது பற்றி...

பாலபாரதி...
விக்கி...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் தற்போது பதிவுகளைத் திரட்டியில் இணைப்பது குறித்து விக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இரா.சுகுமாரன் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவு, திரட்டி, தமிழ்வெளி போன்ற திடடிகளில் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இடையே, பாலபாரதி திரட்டிகளின் கருவிப்பட்டைகளை இணைப்பது பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.