![]() |
திங்கள், 31 மே, 2010
சனி, 22 மே, 2010
தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு? - தமிழக அரசியல் இதழில் கட்டுரை!
தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு, 72-எழுத்துக்களில் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.”
தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களையும், கணினி வல்லுனர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
நடக்கவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழு துணைத்தலைவருமான வா.செ. குழந்தைசாமி தலைமையில் ரகசியமாக நடந்துவருவதாக தமிழுணர்வாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
இந்நிலையில்தான், இந்த தமிழ் எழுத்து வடிவச் சீர்திருத்த்தை எதிர்த்து புதுவையில் “புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்” என்ற அமைப்பு, தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டை நடாத்தியிருக்கிறது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இரா. சுகுமாறனை சந்தித்துப் பேசினோம்.
“தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழச்தைசாமி தி.மு.க. அரசின் ஊதுகுழலாக செயற்படுகின்றார். அவா எழுதிய கட்டுரையின்படி உயிர்மெய் எழுத்துக்களில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மாற்றுக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றார். அதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ்மொழி அறிவியல் மொழியாகவும், கணினியில் எளிதில் பயன்படக்கூடிய மொழியாகவும வளர்ச்சி பெறும் என கருத்தை முன்வைக்கின்றார். ஆனால் 72- எழுத்துக்களின் மாற்றம் தமிழில் 59-சதவிகிதம் மாற்றத்தை ஏற்படுத்து;ம் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர்.இது தமிழ்மொழியையே மாற்றிவிடும். இதனால் தமிழில் ஏற்கனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும், இணையத்தில் உள்ள பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்றுப்போகும். தமிழ் அறிந்தவர்கள் மறுபடியும் இந்த புதிய தமிழை படித்தாக லேண்டும். குறைந்த கல்வி அறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரிடும். அதனால்தான் அந்த மாற்றத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்” என்றார்.
இது குறித்து மக்கள் உரிமை கூட்மைப்பின் செயலாளரும், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான கோ. சுகுமாறனை சந்தித்துப் பேசினோம்.
“உலக அளவில் பல்வேறு நாடுகளின் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டுத் தமிழர்களை உலகத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்து;ம். இதனால் தமிழ்மொழியின் வளர்ச்சியோடு, தமிழர்களின் நிலையும் பின்னுக்குத் தள்ளப்படும். எழுத்து மாற்றத்தை வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் ஏற்கும்ம்படியாக இல்லை. எழுத்து மாற்றத்தால் கணினிப் பொறியியல் உழைப்பு குறையும். குறைவாக செயற்பட முடியும் எனக் கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்.
எழுத்து மாற்றம் செய்ய வேண்டுமானால், பலதுறை ;சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டும். அதை விடுத்து அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் சீனாவில் கூட, அனைத்து அமைப்பினரையும் ஒன்று சேர்த்து குழு ஓன்;று அமைத்து பொதுவான எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தி அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.அப்படித்தான் இந்த அரசும் செய்யவேண்டும்” என்றார்.
இந்த மாநாடு குறித்து “தமிழ்வர்p வடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?” ஏன்ற நூலின் ஆசிரியரும் மூத்த தமிழ் அறிஞருமான திருச்சி இளங்குமாரனாரிடம் பேசினோம்.
“இந்திய மொழிகளில் மிக்க் குறைந்த எழுத்துக்கொண்ட மொழி தமிழ்தான். ஆதில் ஏன் மாற்றம் கொண்டுவர வேண்டும். தந்தை பெரியார் 11-எழுத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்தார். அதனால் எவ்வித இடையூறும் இருக்கவில்லை. இதற்காகப் பெரியார் மிகப் பெரிய தண்டனையை அனுபவித்தார். தமிழக அரசு அன்று அவரது புத்தகங்களை நூலகங்களில் வாங்க மறுத்தது. பின்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபிறகுதான் அந்த எழுத்துக்களின் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்மொழி அழகிய நோக்கிலும், தத்துவ நோக்கிலும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.
புள்ளிக்கூடத்தில், நீதிமன்றத்தில், ஆட்சி ஆணை மொழியாக, கோவில் மற்றும் இசை மேடைகளில் தமிழ் இருக்கவேண்டம். இதைத்தான் 69-ல் “எல்லா நிலைகளிலும் தமிழ்” என்று அண்ணா சொன்னார். ஆனால் அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஆட்சி செய்யும் கலைஞர் 35-ஆண்டுகள் ஆகியும், எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த-பாதுகாக்கபபட்ட ஓர் மொழியை முப்பது நாட்களில் தொலைக்கப ;பார்க்கின்றார் கலைஞர். இந்த சீர்திருத்தத்தின் மூலமாக மெல்லத் தமிழ் இனி சாகும். தமிழ் முற்றிலுமாக குழி தோணடிப் புதைக்கப்படும்” என்றார் வேதனையோடு.
இது குறித்து அமெரிக்கத் தமிழ்ச்சங்க அமைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்புக்களின் பொதுச்செயலாளரும், வட அமெரிக்காவில் தமிழ் மேலநிலைப் பள்ளி நடாத்தி வருபவருமான சொர்ணம் சங்கரபாண்டியிடம் பேசினோம்.
“தமிழ் எழுத்துக்கள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக தமிழக அரசு நிருபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுத்து, தமிழ் எழுத்த வடிவத்தை எளிமைப் படுத்துகின்றோம் என முடிவெடுத்துள்ளது. இது நம் வீட்டிற்கு நாமே தீ வைப்பதற்கு சமம். தமிழர்களை திருமணம் செய்துகொண்ட வேற்ற மொழியினர்கூட தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள். இவர்கள் கூட தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை;. ஜப்பான், சீன மொழிகள்pல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை எழுதும்போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணையதளத்தில் கூட தங்குதடையின்றி புழங்குகின்றனர். எழுத்து மாற்றம் என்பது தமிழ்வழி கற்கும் அப்பாவி மாணவர்களைப் பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழுத் துணைத்தலைவரும், எழுத்துச் சீரமைப்பில் முக்கிய பங்கு வகிப்பவருமான வா.செ.குழந்தைசாமியிடம் இந்த எதிர்ப்புக்கள் பற்றியெல்லாம் பேசினோம்.
“இது பெரியார் முன்வைத்த எழுத்து சீரமைப்பிற்கு அடுத்த கட்டம். தமிழ்மொழி கற்பது நேரம் அதிகமாக செலவிடப்படுவதாக அறியப்பட்டு., அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்துச் சீரமைப்பு. மேலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் அடுத்த தலைமுறைக்கு இனிமையாகவும், எளிமையாகவும் நேரத்தை சேமிக்கும் வகையிலும் ஏழுத்து மாற்றம் அமைக்கப்படடுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 247-தமழ் எழுத்துக்களுக்கு நாம் 107-குறியீடுகளை கற்கின்றோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின்படி 39-குறியீடுகள் கற்றாலே போதும். எனவே இந்த எழுத்து சீர்திருத்தம் அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
ஏற்கனவே தற்கால சந்ததியினருக்கு தமிழ் தகறாராக இருக்கம் நிலையில், இந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையா என்பதை அரசு ஆயிரம் முறை சிந்திக்கவேண்டும்.
—நன்றி தமிழக அரசியல்
தட்டச்சு உதவி: புகலிட சிந்தனை மையம்
வெள்ளி, 21 மே, 2010
தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி - தமிழிஷ் 24 செய்தி
தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு சார்பில் வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்றம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த எழுத்து மாற்ற அறிவிப்பு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு தன்னிச்சையாகவும், தமிழ் மொழியை சிதைக்கும் வகையிலும் தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குறிய பிரச்சனை ஊடகங்களில் வெளியானது, இது தொடர்பாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை. அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு இதுவரை தமிழ முதல்வர் எந்த வித விளக்கமும் அளிக்காதது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக உள்ளது.
எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல் - தினமலர்
தினமலர் முதல் பக்கம் » புதுச்சேரி செய்திகள்
எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல்
மே 21,2010,00:00 IST
புதுச்சேரி: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதில்லை என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலைப்பதிவர் சிறகம் கோரிக்கை விடுத் துள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் கூறியதாவது: கோவையில் நடக்க உள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் ராஜேந்திரன் கூறியுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன் னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. இதன்படி மாற் றம் செய்தால் தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 விழுக்காடு எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல் கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்து உள்ளது. தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய அமைச்சரோ அறிவிப்பு செய்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அமைப்புக் குழு உறுப்பினர்கள் சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ உடனிருந்தனர்.
வியாழன், 20 மே, 2010
தமிழ் எழுத்து சீர்திருத்தமில்லை தஞ்சை பல்கலை துணைவேந்தருக்கு புதுவை வலைப்பதிவர் சிறகம் நன்றி- தினகரன் நாளிதழ்
புதுச்சேரி, மே 20: புதுவை வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு எழுத்து சீர்திருத்தம் செய்யப்போவதாக வும், அதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. தமிழில் 18ம் நூற்றாண்டில் தான் முதல்முதலில் வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம் செய்தார். அதன்பின் 1935ல் தந்தை பெரியார் தமிழில் உள்ள 11 எழுத்துக்களை மாற்றியமைத்தார். அவர் புதியதாக எழுத் துகளை உருவாக்காமல் ஏற்கனவே இருந்த தமிழ் எழுத்துக்களை வைத்து சில மாற்றங்களை செய்தார்.
தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. அதாவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகள் 72க்கும் மாற்றாக புதிய குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதன்படி மாற்றம் செய்தால் அது தமிழில் 80 சதவீதம் சொற்களும், 59 சதவீத எழுத்துகளும் மாறும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது ஓட்டுமொத்த தமிழ் மொழியை மாற்றுவதாகும். இவ்வாறு எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் ஆயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையதளத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்று போகும் ஆபத்துள்ளது.

புதுவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு கடந்த 16ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிட போவதில்லை என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தருமான ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழக அரசு எழுத்து மாற்றம் செய்யப் போவ தில்லை என கொள்கை முடிவெடுத்து அதனை முதல்வரோ அல்லது துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைப்பு குழு உறுப்பினர் கோ.சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி வலைப்பதிவர் UNI - நெட் இந்தியா செய்தி
நெட் இந்தியா தனது தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது அதற்காக நன்றி
Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters
Puducherry | Wednesday, May 19 2010 IST
நெட் இந்தியா செய்தி இணைப்பு
Thanking convenor of the Tamil Classical Language Conference and Vice-Chancellor of the Tamil University M Rajendran for his statement that no statement on the reforms on Tamil letters will be there in the conference, the Puduvaibloggers today urged the Tamil Nadu Chief Minister M Karunanidhi to take such a decision. In a statement here today, Mr R Sugumaran, convenor of the bloggers, said they were shocked to see a news item in an eveninger that Tamil Nadu Governemnt was to bring in certain reforms on Tamil letters.
Veeramamunivar had initiated the Tamil letter reforms in the 18th centuery followed by Thanthai Periyar in 1935.
Any further changes in the Tamil letters would make several informations in Tamil in web sites and several books useless.
It would also make partially literate as illiterate, he added.

புதுச்சேரி வலைப்பதிவர் தமிழக முதவரிடம் கோரிக்கை நியூ கேரளா. காம் தளத்தில் செய்தி
நியூ கேரளா. காம் தளத்தில் செய்தி
Puduvaibloggers urge Tamil Nadu CM not to reform Tamil letters
Puducherry, May 19 : Thanking convenor of the Tamil Classical Language Conference and Vice-Chancellor of the Tamil University M Rajendran for his statement that no statement on the reforms on Tamil letters will be there in the conference, the Puduvai bloggers today urged the Tamil Nadu Chief Minister M Karunanidhi to take a similar decision.
In a statement here today, Mr R Sugumaran, convenor of the bloggers, said they were shocked to see a news item in an eveninger that Tamil Nadu Governemnt was to bring in certain reforms on Tamil letters.
Veeramamunivar had initiated the Tamil letter reforms in the 18th century followed by Thanthai Periyar in 1935.
Any further changes in the Tamil letters would make several information in Tamil on websites and in several books useless.
It would also make partially literate as illiterate, he added.
Any further changes in the Tamil letters would make several information in Tamil on websites and in several books useless.
It would also make partially literate as illiterate, he added.
எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி - தினமணி 20-05-2010
சென்னை
எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி
First Published : 20 May 2010 09:20:56 AM IST Last Updated :
புதுச்சேரி, மே 19: தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் இப்போது இல்லை என்ற அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று இதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இச் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா. சுகுமாரன், அமைப்புக்குழு உறுப்பினர்கள் கோ.சுகுமாரன், பேராசிரியர் நா. இளங்கோ,ம. இளங்கோ, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி வெளியான செய்தி ஒன்றில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், அதற்காக ஒரு தனிக்குழு அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்துள்ளது. இதற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் ஓர் அங்கமாகவே புதுச்சேரியில் 16-ம் தேதி
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். இதில் தமிழ் எழுத்து மாற்ற முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் உலக அளவில் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலும் எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதை முதல்வரோ அல்லது தொடர்புடைய துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

புதன், 19 மே, 2010
எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டுகோள்!
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், 19-05-2010 புதன் காலை 11.00 மணியளவில் புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட செய்தி:
கோவையில் நடைபெற உள்ள உலகத் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 7.10.2010 அன்று வெளியான மாலை செய்தித்தாள் ஒன்றில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், அதற்கென தனிக் குழு ஒன்று அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மொழியின்பால் பற்றுக் கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
தமிழில் 18-ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அதன் பின்னர் தந்தை பெரியார் அவர்கள் 1935-இல் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவர் தமிழில் உள்ள 11 எழுத்துக்களை மாற்றி அமைத்தார். அவர் புதியதாக எழுத்துக்களை உருவாக்காமல் ஏற்கனவே இருந்த தமிழ் எழுத்துக்களை வைத்து சில மாற்றங்களை செய்தார். மொத்த தமிழ் எழுத்துக்களில் அவர் செய்த சீர்திருத்தம் வெறும் 4 விழுக்காடுதான்.
தற்போது கொண்டு வரப்படும் இந்த எழுத்து மாற்றம் முன்னாள் துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமி அவர்களால் முன்மொழியப்பட்டது. அதாவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துக்கள் 72–க்கும் மாற்றாக புதிய குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.இதன்படி மாற்றம் செய்தால் அது தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 சதவிகித எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது ஒட்டு மொத்த தமிழ் மொழியையே மாற்றுவதாகும்.
இவ்வாறு தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தலவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்துள்ளது. குறைந்த படிப்பறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்கள் ஆவார்கள். இந்த எழுத்து மாற்றம் வந்தால் கணினியில் எளிதில் பயன்படுத்தக் கூடிய மொழியாக தமிழ் மாறும் எனக் கூறுவதையும் கணினி வல்லுநர்கள் ஆதரத்துடன் மறுக்கின்றனர்.
தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒரு அங்கமாக புதுச்சேரியில் கடந்த 16-ஆம் நாளன்று ஒரு நாள் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். இதில் தமிழக அளவிலும், உலக அளவிலும் புகழ் பெற்ற பல்துறை தமிழறிஞர்கள், தமிழ் அமைப்பினர், கணினி வல்லுநர்கள் உரையாற்றினர். இம்மாநாட்டில், தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 17-ஆம் நாளன்று, உலகத் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் உலக அளவில் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
மேலும், தமிழக அரசு எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என கொள்கை முடிவெடுத்து அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், கோ. சுகுமாரன், அமைப்புக் குழு உறுப்பினர், பேராசிரியர் நா. இளங்கோ, அமைப்புக் குழு உறுப்பினர்,
ம. இளங்கோ, அமைப்புக் குழு உறுப்பினர், தமிழநம்பி, ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு.

Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters - UNI
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு 19-05-2010 புதன் கிழமை காலை 11.00 மணியளவில் புதுச்சேரி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. தமிழ் எழுத்துமாற்ற அறிவிப்பு செம்மொழி மாநாட்டில் அறிவிக்கவில்லை என அறிவித்த செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தருமான திரு. ம.இராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. செம்மொழி குழு அறிவித்தாலும் தமிழக அரசு அறிவிக்கும் ஒரு வாய்ப்பு உள்ளதால் தமிழக அரசும் எழுத்து மாற்றத்தை செய்யமாட்டோம் அறிவிக்க வேண்டும் என கோரி இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பை ஒட்டி யு.என்.ஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியை http://news.webindia123.com இணைய பக்கம் எடுத்து வெளியிட்டுள்ளது அதன் இணைப்பு இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters
India Puduvaibloggers urge TN CM not to reform Tamil letters
Puducherry | Wednesday, May 19 2010 IST
Thanking convenor of the Tamil Classical Language Conference and Vice-Chancellor of the Tamil University M Rajendran for his statement that no statement on the reforms on Tamil letters will be there in the conference, the Puduvaibloggers today urged the Tamil Nadu Chief Minister M Karunanidhi to take such a decision. In a statement here today, Mr R Sugumaran, convenor of the bloggers, said they were shocked to see a news item in an eveninger that Tamil Nadu Governemnt was to bring in certain reforms on Tamil letters.
Veeramamunivar had initiated the Tamil letter reforms in the 18th centuery followed by Thanthai Periyar in 1935.
Any further changes in the Tamil letters would make several informations in Tamil in web sites and several books useless.
It would also make partially literate as illiterate, he added.
-- (UNI) -- 19MS50.xml

லேபிள்கள்:
எழுத்து மாற்றம்,
பத்திரிக்கையாளர் சந்திப்பு,
புதுச்சேரி
செவ்வாய், 18 மே, 2010
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்கு வெற்றி!
தமிழக அரசு தமிழ் எழுத்து மாற்றம் செய்யப் போவதாக 07.01.2010 நாளிட்ட மாலை மலர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியானது.
அந்த செய்தி: " சென்னை-7, தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது."
இந்த செய்தி வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவித மறுப்பும் வெளியிடாத நிலையில் கட்டாயம் இந்த எழுத்து மாற்றம் நடக்கும் எனக் கருதி உலகம் முழுவதுள்ள தமிழர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சென்னையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடந்தது. அதன் பின்னர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் ஒரு மாநாடு நடத்தலாம் என கருத்து முன் வைக்கப்பட்டு, அதனை அமைப்புக் குழு விரிவாக விவாதித்து முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 16.05.2010 அன்று புதுச்சேரியில் தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுநர்கள், தமிழ் இயக்கத்தினர் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், கலந்துக் கொண்ட அனைவரின் அதாரவுடன் 'தமிழ் எழுத்து மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டின் செய்திகளை விரிவாக செய்தித்தாள்கள் வெளியிட்டன. குறிப்பாக தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை. அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்." எனக் கூறியுள்ளார்.
இது புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் எழுத்து மாற்ற முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு கிடத்த வெற்றியாகும்.
இந்த அறிவிப்பை காலத்தே செய்த தமிழக அரசுக்கும், செம்மொழி மாநாட்டு குழுவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு - தீர்மானங்கள்!
எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: ம.ராஜேந்திரன் மறுப்பு

எழுத்து சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை - ம. ராஜேந்திரன் மறுப்பு !
தினமணி செய்தி 18-05-2010
எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: ம.ராஜேந்திரன் மறுப்பு
சென்னை, மே 17: செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று யாரும் தெரிவிக்கவில்லை என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 16) நடைபெற்ற தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் பேசிய தமிழறிஞர் ஆர். இளங்குமரனார், 'கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் தமிழுக்கு பின்னடைவு ஏற்படும்' என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ம. ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை. அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்.
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு - தீர்மானங்கள்!
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் 16.05.2010 அன்று புதுச்சேரி வணிக அவையில் ஒரு நாள் நடந்த தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1) தமிழக அரசு சார்பில் வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்றம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த எழுத்து மாற்ற அறிவிப்பு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு தன்னிச்சையாகவும், தமிழ் மொழியை சிதைக்கும் வகையிலும் தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது. தமிழ் எழுத்து வடிவ மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
2) தமிழ் எழுத்து வடிவ மாற்றத்தைக் கைவிட தமிழக அரசை வலியுறுத்திட வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், கணினி வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
3) தமிழக அரசு இதுபோன்ற தேவையற்ற, தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து தமிழே ஆட்சி மொழி, தமிழே கல்வி மொழி, தமிழே வணிக மொழி, தமிழே நீதிமன்ற மொழி என அனைத்து நிலைகளிலும் தமிழ் ஏற்றம் காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.
4) தமிழ் எழுத்து வடிவ மாற்றத்தை கைவிட வலியுறுத்தி தம்ழர்கள் அனைவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கோரிக்கை மடல் அனுப்ப வேண்டுமென இம்மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு - தினகரன் செய்தி
புதுச்சேரி, மே 17: புதுவை பாரதி பூங்கா அருகில் உள்ள வணிக அவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடந்தது.
வலைப்பதிவர் வெங்கடேஷ் வரவேற்றார். வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கழக இலக்கிய செம்மல் இளங்குமரன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நூல் வெளியீட்டு விழா நடந்தது. இளங்குமரன் தொகுத்த தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூலை பேராசிரியர் தங்கப்பா வெளியிட்டார். மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர் கோ.சுகுமாரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
மாநாட்டில் 2 அமர்வுகள் நடந்தது. முதல் அமர்வுக்கு நா.இளங்கோ தலைமை தாங்கினார். ஓவியர் ராசராசன், இளங்கோ, அருணபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் மணிவண்ணன், முனைவர் சங்கரபாண்டியன், குமரேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இரண்டாம் அமர்வுக்கு விழுப்புரம் வலைப்பதிவர் தமிழ்நம்பி தலைமை தாங்கினார். வீரமோகன், பிரபாகரன், மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் செல்வகுமார், நாக.இளங்கோவன், பூங்குன்றன், நற்குணன், அரிமாப்பாண்டியன், தமிழமல்லன், தமிழ்மணி, தாமரைக்கோ, நடராசன், திருநாவுக்கரசு, ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மோகனகிருஷ்ணன் நன்றி கூறினார்.
லேபிள்கள்:
இளங்குமரனார்,
எழுத்து மாற்றம்,
தினகரன்
திங்கள், 17 மே, 2010
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழை படிக்க வேண்டும்
Last Updated :
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் புலவர் இரா.இளங்குமரனார் (இடமிருந்து 4-வது) தொகுத்த தமிழ் வரிவடிவ
சீர்திருத்தமா சீரழிப்பா? என்ற நூலை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா (இடமிருந்து 3-வது) வெளியிட அதைப் பெறுகிறார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாறன் (வலமிருந்து 2-வது).
புதுச்சேரி, மே 16: தமிழ் எழுத்து வடிவ மாற்றம் கொண்டு வந்தால் தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழை படிக்க வேண்டும் என்று தமிழறிஞர் ஆர்.இளங்குமரனார் தெரிவித்துள்ளார்.சீர்திருத்தமா சீரழிப்பா? என்ற நூலை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா (இடமிருந்து 3-வது) வெளியிட அதைப் பெறுகிறார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாறன் (வலமிருந்து 2-வது).
புதுச்சேரியில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அமைப்பு சார்பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு, புதுவை வணிக அவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் ஆர்.இளங்குமரனார் பேசியது: தமிழக அரசு வரும் ஜூன் மாதத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த உள்ளது. இதில் தமிழ் மொழியில் எழுத்து சீர்திருத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. அவ் வாறு சீர்திருத்தம் கொண்டு வந்தால் தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழை படிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழில் குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரும்.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலக அளவில் தமிழ் அறிஞர்களும், கணினி வல்லுநர்களும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு இது குறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி முதன்மையாக உள்ளார்.
தினமணி செய்தி மாவட்டங்கள் செய்தியில்
...................அவர் எழுதியுள்ள கட்டுரையின்படி உயிர் மெய் இகர, ஈகார உகர, ஊகர எழுத்துக்கள் 72-க்கும் மாற்றாக குறியீடுகளுடன் கூடிய எழுத்துக்கள் பயன்படுத்த வேண்டுமென அறிகிறோம். இதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் மொழி அறிவியல் மொழியாகவும், கணினியில் எளிதில் பயன்படக்கூடிய மொழியாகவும், வளர்ச்சி பெறும் என்று கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
72 எழுத்துக்களில் மாற்றம் என்பது தமிழில் 59 சதவீதம் மாற்றத்தை ஏற்படுத்தம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். 59 சதவீத எழுத்து மாற்றம் தமிழ் மொழியையே மாற்றிவிடும்.
.
இதனால் தமிழில் ஏற்கெனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும், இணையதளத்தில் உள்ள பல்துறை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்று போகும்.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு தமிழர்களை உலகத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்தும்.
இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சி பின்னடையும் என்பதோடு, தமிழர்களின் நிலை மேலும் பின் தள்ளப்படும். எழுத்து மாற்றம் குறித்து வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் எதுவும் ஏற்கும்படியாக இல்லை
எழுத்து மாற்றத்தால் கணிப்பொறியில் உழைப்பு குறையும், விரைவாக செயல்பட முடியும் என கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்
த மிழ் எழுத்து வடிவத்தில் மாற்றம் கொண்டு வர எவ்வித காரணமும் இல்லாதபோது, தமிழக அரசு இவ்வாறாக முயற்சி மேற்கொள்வது தமிழ் மீது கொண்டுள்ள பற்று காரணமல்ல.
மாறாக பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும், தன்னல விளம்பரங்களுக்காகவும் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எழுத்து மாற்றம் செய்யவேண்டுமானால் பல்துறை சேர்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து, மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும். ÷அதை விடுத்து அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இவர் எழுதிய தமிழ் வரிவடிவ சீர்த்திருத்தமா சீரழிப்பா என்ற நூலை பேராசிரியர் ம.லெ.தங்கப்பா வெளியிட, மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் பெற்றுக் கொண்டார்.
விடியோ கான்பரன்சிங் முறையில் அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் வலைப்பதிவுகளின் திரட்டியின் நிர்வாகி சொ.சங்கரபாண்டி, சவுதி அரேபியாவில் உள்ள பொறியாளர் நாக.இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.÷புதுவை வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, மென்பொருள் வல்லுநர் க.அருணபாரதி, பொறியாளர் மு.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை பதிப்பு
லேபிள்கள்:
எழுத்து மாற்றம்,
தமிழ்க் கணினி
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம்-தமிழ் மணம் சொ.சங்கரபாண்டி-தினமணி செய்தி
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம்
First Published : 17 May 2010 03:29:03 AM IST தினமணி செய்திhttp://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Chennai&artid=243023&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம்
Last Updated :
புதுச்சேரி, மே 16: தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம். என்று தமிழ் மணம் வலைப்பதிவுகள் திரட்டியின் நிர்வாகி சொ.சங்கரபாண்டி தெரிவித்தார்.
÷ தமிழில் கொண்டுவரப்படவிருக்கும் எழுத்து மாற்றம் என்பது தமிழ் படிப்போருக்கு இடையூறாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
÷புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அமைப்பு சார்பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷இதில் அமெரிக்காவிலிருந்து விடியோ கான்பிரன்சிங் மூலம் சொ.சங்கரபாண்டி பேசியது:
÷தமிழ் எழுத்துகள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாகவோ, புள்ளி விவரங்கள் மூலமாகவோ தமிழக அரசு நிரூபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுக்கப்பட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை எளிமை படுத்துகிறோம் என்று, எழுத்து வடிவத்தை மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
÷இது நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை என்பது பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. உலக தமிழ் அமைப்பு, தமிழர்களின் உரிமை பிரச்னைகள் குறித்து போராடக்கூடியது.
÷அமெரிக்காவில் எங்கள் அமைப்பு சார்பில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 மணி நேரம் வகுப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பெடுக்க நூலக அறை கிடைக்காவிட்டாலோ, பணிப் பொழிவு இருந்தாலோ, வகுப்புகள் நடைபெறாது.
÷ஆண்டுக்கு 30 மணி நேரத்துக்கும் குறைவாகவே வகுப்புகள் நடக்கும். புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் இங்கு அதிக அளவில் படிக்கின்றனர். அவர்கள் பள்ளிகளிலும், சக மாணவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். பெற்றோர்கள் கூட குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகளுடன் தமிழ் பேசுகிறார்கள்.
÷இருப்பினும் இவர்கள் ஓர் ஆண்டிலேயே தமிழை எழுத, படிக்க எளிதில் கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் இதுவரை தமிழ் எழுத கடினமாக உள்ளது என்று கூறியதில்லை.
÷தமிழர்களை திருமணம் செய்து கொண்ட வேற்று மொழியினர் கூட தமிழ் கற்க வருகிறார்கள். அவர்களும் தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை. ஜப்பான், சீன மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட எழுத்துகள் உள்ளன. ÷இவைகளை எழுதும் போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணையதளத்தில் கூட தங்கு தடையின்றி புழங்குகின்றனர்.
÷எழுத்து மாற்றம் என்பது தமிழ் வழி கற்கும் அப்பாவி மாணவர்களை கடுமையாக பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது என்றார் சொ.சங்கரபாண்டி.
÷செüதி அரேபியாவைச் சேர்ந்த பொறியாளர் நாக.இளங்கோவன் விடியோ கான்பரன்சிங்கில் பேசுகையில், சீன மொழியில் மாற்றம் கொண்டு வரும்போது, அனைத்து சீன மொழி சார்ந்த அமைப்பினரையும், கணினி வல்லுநர்களையும் கலந்தாலோசித்து உருவாக்கினர்.
÷தமிழ் எழுத்து மாற்றம் என்ற கருத்தில அவ்வாறு ஆலோசிக்கவில்லை. வீரமாமுனிவர் தமிழ் எழுத்தில் 6.25 சதவீதம் மாற்றம் கொண்டு வந்தார். தந்தை பெரியார் 4 சதவீதம் மாற்றம் கொண்டு வந்தார். ஆனால், தமிழக அரசு கொண்டு வரும் எழுத்து மாற்றம் 59 சதவீதம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது சிறந்ததல்ல என்றார்.

ஞாயிறு, 16 மே, 2010
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது!
புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு இன்று (16-05-2010 ஞாயிறு), காலை 10 முதல், வணிக அவையில் நடந்துக் கொண்டிருக்கிறது.
காலை அமர்வுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.சுகுமாரன் அவர்கள் தலைமைத் தாங்கினார். திரட்டி திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
மாநாட்டைத் தொடக்கி வைத்து முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர் - கழக இலக்கிய செம்மல் திரு. இரா.இளங்குமரனார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மிக சிறப்பான வகையில் அவர் எழுத்து மாற்றம் குறித்து கருத்துரை ஆற்றினார்.
பின்னர் தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூல் வெளியீடு நடந்தது. இந்நூலை புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலினை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் வெளியிட்டார். முதல் படியினை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் உத்தமம் பொதுக்குழு உறுப்பினர், (INFITT) கோ.சுகுமாரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் நூல் குறித்தும், எழுத்து மாற்றம் பற்றியும் பேசினார்.
பின்னர் முற்பகல் 11.30 மணி முதல் 1.45 மணி வரை முதல் அமர்வு நடந்தது. இந்த அமர்வுக்கு பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் தலைமைத் தாங்கினார். திரு ஓவியர் இரா.இராசராசன், திரு ம.இளங்கோ, திரு க. அருணபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அமர்வில் சென்னையில் இருந்து வருகை தந்த உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் திரு. இராம.கி அவர்கள், பொறியாளர் திரு மணி. மு.மணிவண்ணன் அவர்கள் ஆகியோர் ஆதாரங்களோடு கருத்துரை வழங்கினர். சென்னையில் இருந்து வந்திருந்த விருபா.காம் திரு விருபா.குமரேசன் அவர்கள் கல்ந்துக் கொண்டார். அமெரிக்காவில் இருந்து தமிழ்மணம் - வலைப்பதிவுகளின் திரட்டி பொறுப்பாளர் முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள் இணைய வழிப் பேசினார்.
மதிய இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து மாநாடு நடந்துக் கொண்டிருக்கிறது.

புதுவையில் இன்று எழுத்துமாற்ற எதிர்ப்பு மாநாடு -16-05-2010
அனைவருக்கும் வணக்கம்,
இன்று புதுச்சேரியில் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் பலவேறு அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இரா.சுகுமாரன்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வெள்ளி, 14 மே, 2010
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு - நிகழ்ச்சி நிரல்
தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு
16-05-2010 ஞாயிறு
காலை 10
முதல் மாலை 6 மணிவரை
வணிக அவை (பாரதி
பூங்கா எதிரில்),
புதுச்சேரி
................................................
தமிழ் எழுத்து வடிவ
மாற்றம் எதிர்ப்பு மாநாடு
தொடக்க
நிகழ்வு
காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை
தலைமை"
திரு.இரா.சுகுமாரன்
அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி
வலைப்பதிவர்
சிறகம்
வரவேற்பு:
திரு.ஏ.வெங்கடேஷ்
அவர்கள்,
திரட்டி
மாநாட்டைத் தொடக்கி
வைத்து உரை:
முதுமுனைவர்
-செந்தமிழ் அந்தணர்- கழக இலக்கிய செம்மல்
திரு. இரா. இளங்குமரனார்
அவர்கள்
நூல்
வெளியீடு:
தமிழ்
வரிவடிவ சீர்திருத்தமா?
சீரழிப்பா?.
தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார்
அவர்கள்
வெளியிடுபவர் :
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
முதல் படி பெறுபவர்
திரு கோ.சுகுமாரன்
செயலர், மக்கள்
உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).
முற்பகல்
11.30
மணி முதல் 1.30
மணிவரை
முதல்
அமர்வு
தலைமை
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
புதுச்சேரி
முன்னிலை:
திரு ஓவியர் இரா.இராசராசன்
அவர்கள்
திரு ம.இளங்கோ, அவர்கள்
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
கருத்துரை:
திரு.இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு
உறுப்பினர், உத்தமம் INFITT),
சென்னை
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர்
சென்னை,
முனைவர் சொ.சங்கரபாண்டி
அவர்கள்
தமிழ்மணம்-
வலைப்பதிவுகளின் திரட்டி,
அமெரிக்கா,
திரு விருபா.குமரேசன்
அவர்கள்
விருபா.காம், சென்னை
---------------------------------------------
உணவு
இடைவேளை: பகல் 1.30
மணிமுதல் 2.30
மணிவரை
மதிய
உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------
பிற்பகல்
அமர்வு
பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை
தலைமை:
திரு.தமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட
வலைப்பதிவர் அமைப்பு
முன்னிலை:
திரு.வீரமோகன் அவர்கள்
திரு. சீத்தா .பிரபாகரன்
அவர்கள்,
திரு.ஓவியர்,பா.மார்கண்டன்
அவர்கள்
கருத்துரை:
பேராசிரியர். செல்வக்குமார்
அவர்கள்,
வாட்டலூ
பல்கலைக்கழகம். கனடா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா,
திரு. மா,பூங்குன்றன்
அவர்கள்,
தென்மொழி, சென்னை.
திரு.சுப.நற்குணன்
அவர்கள், மலேசியா,
திரு, சீனு,அரிமாப்பாண்டியன்
அவர்கள்,
செயலர், தனித்தமிழ்க்
கழகம, புதுச்சேரி,
திரு. க.தமிழமல்லன்
அவர்கள்
தலைவர், தனித்
தமிழ் இயக்கம்
புதுச்சேரி,
திரு.ந.மு தமிழ்மணி
அவர்கள்
அமைப்பாளர் , செந்தமிழர்
இயக்கம்,புதுச்சேரி
திரு. கோ.தாமரைக்கோ
அவர்கள்,
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்
தமிழ்வளர்ச்சி
நடவடிக்கைக்குழு, புதுச்சேரி
திரு. ப. திருநாவுக்கரசு
அவர்கள்
தலைவர், நண்பர்கள்
தோட்டம், புதுச்சேரி
திரு. எழில் . இளங்கோ அவர்கள்
தமிழியக்கம், விழுப்புரம்,
நிறைவு
நிகழ்வு
மாநாட்டு
நிறைவுரை:
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
நன்றியுரை:
திரு. இரா. மோகனகிருஷ்ணன்
அவர்கள்
புதுவை.காம்
வெளிநாடுகளில்
இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக நேரடியாக
ஒளி/ஒலிபரப்பப்படும்.
புதுச்சேரி
வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு
விரிவாக்கம், அன்னைதெரசா நகர்
மூலக்குளம்
புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, இணையம்
: www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com
லேபிள்கள்:
எழுத்து மாற்றம்,
கணினி தொழில் நுட்பம்,
நிகழ்ச்சி நிரல்,
புதுச்சேரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)