புதுச்சேரி, மே 17: புதுவை பாரதி பூங்கா அருகில் உள்ள வணிக அவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடந்தது.
வலைப்பதிவர் வெங்கடேஷ் வரவேற்றார். வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமை தாங்கினார். கழக இலக்கிய செம்மல் இளங்குமரன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நூல் வெளியீட்டு விழா நடந்தது. இளங்குமரன் தொகுத்த தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூலை பேராசிரியர் தங்கப்பா வெளியிட்டார். மக்கள் உரிமை கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினர் கோ.சுகுமாரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
மாநாட்டில் 2 அமர்வுகள் நடந்தது. முதல் அமர்வுக்கு நா.இளங்கோ தலைமை தாங்கினார். ஓவியர் ராசராசன், இளங்கோ, அருணபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் மணிவண்ணன், முனைவர் சங்கரபாண்டியன், குமரேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இரண்டாம் அமர்வுக்கு விழுப்புரம் வலைப்பதிவர் தமிழ்நம்பி தலைமை தாங்கினார். வீரமோகன், பிரபாகரன், மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் செல்வகுமார், நாக.இளங்கோவன், பூங்குன்றன், நற்குணன், அரிமாப்பாண்டியன், தமிழமல்லன், தமிழ்மணி, தாமரைக்கோ, நடராசன், திருநாவுக்கரசு, ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மோகனகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக