இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

ஞாயிறு, 16 மே, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது!

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு இன்று (16-05-2010 ஞாயிறு), காலை 10 முதல், வணிக அவையில் நடந்துக் கொண்டிருக்கிறது.

காலை அமர்வுக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.சுகுமாரன் அவர்கள் தலைமைத் தாங்கினார். திரட்டி திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மாநாட்டைத் தொடக்கி வைத்து முதுமுனைவர் -செந்தமிழ் அந்தணர் - கழக இலக்கிய செம்மல் திரு. இரா.இளங்குமரனார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மிக சிறப்பான வகையில் அவர் எழுத்து மாற்றம் குறித்து கருத்துரை ஆற்றினார்.

பின்னர் தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா? என்ற நூல் வெளியீடு நடந்தது. இந்நூலை புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலினை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் வெளியிட்டார். முதல் படியினை மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் உத்தமம் பொதுக்குழு உறுப்பினர், (INFITT) கோ.சுகுமாரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் நூல் குறித்தும், எழுத்து மாற்றம் பற்றியும் பேசினார்.

பின்னர் முற்பகல் 11.30 மணி முதல் 1.45 மணி வரை முதல் அமர்வு நடந்தது. இந்த அமர்வுக்கு பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் தலைமைத் தாங்கினார். திரு ஓவியர் இரா.இராசராசன், திரு ம.இளங்கோ, திரு க. அருணபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த அமர்வில் சென்னையில் இருந்து வருகை தந்த உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் திரு. இராம.கி அவர்கள், பொறியாளர் திரு மணி. மு.மணிவண்ணன் அவர்கள் ஆகியோர் ஆதாரங்களோடு கருத்துரை வழங்கினர். சென்னையில் இருந்து வந்திருந்த விருபா.காம் திரு விருபா.குமரேசன் அவர்கள் கல்ந்துக் கொண்டார். அமெரிக்காவில் இருந்து தமிழ்மணம் - வலைப்பதிவுகளின் திரட்டி பொறுப்பாளர் முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள் இணைய வழிப் பேசினார்.

மதிய இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து மாநாடு நடந்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: