தமிழ் எழுத்து வடிவமாற்றம்! உலகத் தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
செய்திகள் May 20, 2010தமிழக அரசு சார்பில் வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்றம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த எழுத்து மாற்ற அறிவிப்பு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு தன்னிச்சையாகவும், தமிழ் மொழியை சிதைக்கும் வகையிலும் தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வருவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இந்த சர்ச்சைக்குறிய பிரச்சனை ஊடகங்களில் வெளியானது, இது தொடர்பாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை. அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு இதுவரை தமிழ முதல்வர் எந்த வித விளக்கமும் அளிக்காதது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக