இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 17 மே, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும்

தினமணி செய்தி 

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்​டில் புல​வர் இரா.இளங்​கு​ம​ர​னார்  ​(இட​மி​ருந்து 4-வது)​ தொகுத்த தமிழ் வரி​வ​டிவ
சீர்​தி​ருத்​தமா சீர​ழிப்பா? என்ற நூலை பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா (இடமிருந்து 3-வது) வெளியிட அதைப் பெறுகிறார் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாறன் (வலமிருந்து 2-வது).
புதுச்​சேரி,​​ மே 16:​ தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும் என்று தமி​ழ​றி​ஞர் ஆர்.இளங்​கு​ம​ர​னார் தெரி​வித்​துள்​ளார்.​

பு​துச்​சே​ரி​யில் புதுச்​சேரி வலைப்​ப​தி​வர் சிற​கம் அமைப்பு சார்​பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு,​​ புதுவை வணிக அவை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்​தது.​ இ​தில் ஆர்.இளங்​கு​ம​ர​னார் பேசி​யது:​ தமி​ழக அரசு வரும் ஜூன் மாதத்​தில் கோவை​யில் உல​கத் தமிழ் செம்​மொழி மாநாடு நடத்த உள்​ளது.​ இ​தில் தமிழ் மொழி​யில் எழுத்து சீர்​தி​ருத்​தம் குறித்து அறி​விப்பு வெளி​யி​டப்​ப​டும் என செய்தி வெளி​யா​கி​யுள்​ளது.​ அவ் ​வாறு சீர்​தி​ருத்​தம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டிய நிலை உள்​ளது.​ தமி​ழில் குறைந்த கல்​வி​ய​றிவு பெற்​ற​வர்​கள் முற்​றி​லும் கல்​லா​த​வர்​க​ளாக மாற நேரும்.​

த​மி​ழக அர​சின் இந்த முயற்​சிக்கு பல்​வேறு தரப்பி​லி​ருந்து எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.​ உலக அள​வில் தமிழ் அறி​ஞர்​க​ளும்,​​ கணினி வல்​லு​நர்​க​ளும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்​துள்​ள​னர்.​ த​மி​ழக அரசு இது குறித்து எந்த விளக்​க​மும் இது​வரை அளிக்​க​வில்லை.​ தமிழ் எழுத்தை மாற்​றும் முயற்​சி​யில் முன்​னாள் துணை வேந்​தர் வா.செ.குழந்​தை​சாமி முதன்​மை​யாக உள்​ளார்.​

தினமணி செய்தி  மாவட்டங்கள் செய்தியில்
...................
அ​வர் எழு​தி​யுள்ள கட்​டு​ரை​யின்​படி உயிர் மெய் இகர,​​ ஈகார உகர,​​ ஊகர எழுத்​துக்​கள் 72-க்கும் மாற்​றாக குறி​யீ​டு​க​ளு​டன் கூடிய எழுத்​துக்​கள் பயன்​ப​டுத்த வேண்​டு​மென அறி​கி​றோம்.​ இ​தன்​படி எழுத்து மாற்​றம் செய்​தால் தமிழ் மொழி அறி​வி​யல் மொழி​யா​க​வும்,​​ கணி​னி​யில் எளி​தில் பயன்​ப​டக்​கூ​டிய மொழி​யா​க​வும்,​​ வளர்ச்சி பெறும் என்று கருத்து முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது.​

72 எழுத்​துக்​க​ளில் மாற்​றம் என்​பது தமி​ழில் 59 சத​வீ​தம் மாற்​றத்தை ஏற்​ப​டுத்​தம் என்று ஆய்​வா​ளர்​கள் கணக்​கிட்டு கூறி​யுள்​ள​னர்.​ 59 சத​வீத எழுத்து மாற்​றம் தமிழ் மொழி​யையே மாற்​றி​வி​டும். 

.​
இ​த​னால் தமி​ழில் ஏற்​கெ​னவே உள்ள பல்​லா​யி​ரக்​க​ணக்​கான அரிய நூல்​க​ளும்,​​ இணை​ய​த​ளத்​தில் உள்ள பல்​துறை சேர்ந்த ஆயி​ரக்​க​ணக்​கான பக்​கங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளும் பய​னற்று போகும்.​

உ​லக அள​வில் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் உள்ள நிலை​யில் தமிழ்​நாட்​டில் மட்​டும் இந்த எழுத்து மாற்​றம் தமி​ழர்​க​ளி​டையே பிரி​வி​னையை ஏற்​ப​டுத்​தும்.​ தமிழ்​நாட்டு தமி​ழர்​களை உல​கத் தமி​ழர்​க​ளி​ட​மி​ருந்து தனி​மைப்​ப​டுத்​தும்.​

இ​த​னால் தமிழ் மொழி​யின் வளர்ச்சி பின்​ன​டை​யும் என்​ப​தோடு,​​ தமி​ழர்​க​ளின் நிலை மேலும் பின் தள்​ளப்​ப​டும்.​ எழுத்து மாற்​றம் குறித்து வற்​பு​றுத்​து​வோர் கூறும் கார​ணங்​கள் எது​வும் ஏற்​கும்​ப​டி​யாக இல்லை

எ​ழுத்து மாற்​றத்​தால் கணிப்​பொ​றி​யில் உழைப்பு குறை​யும்,​​ விரை​வாக செயல்​பட முடி​யும் என கூறப்​ப​டும் கருத்தை கணினி வல்​லு​நர்​கள் சான்​று​க​ளு​டன் மறுத்​துள்​ள​னர்

த ​மிழ் எழுத்து வடி​வத்​தில் மாற்​றம் கொண்டு வர எவ்​வித கார​ண​மும் இல்​லா​த​போது,​​ தமி​ழக அரசு இவ்​வா​றாக முயற்சி மேற்​கொள்​வது தமிழ் மீது கொண்டுள்ள பற்று கார​ண​மல்ல.​

மா​றாக பல்​வேறு அர​சி​யல் கார​ணங்​க​ளுக்​கா​க​வும்,​​ தன்​னல விளம்​ப​ரங்​க​ளுக்​கா​க​வும் தான் என்​ப​தில் மாற்​றுக் கருத்​தில்லை.​ எ​ழுத்து மாற்​றம் செய்​ய​வேண்​டு​மா​னால் பல்​துறை சேர்ந்த அறி​ஞர்​கள் கொண்ட குழு அமைத்து,​​ மிக நுணுக்​க​மாக ஆராய்ந்து படிப்​ப​டி​யாக மக்​கள் ஏற்​கும்​படி செய்ய வேண்​டும்.​ ÷அதை விடுத்து அவ​சர கோலத்​தில் அள்​ளித் தெளித்​தது போல் தமிழ் எழுத்து மாற்​றம் செய்​வது என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​றார்.​

இ​வர் எழு​திய தமிழ் வரி​வ​டிவ சீர்த்​தி​ருத்​தமா சீர​ழிப்பா என்ற நூலை பேரா​சி​ரி​யர் ம.லெ.தங்​கப்பா வெளி​யிட,​​ மக்​கள் உரிமை கூட்​ட​மைப்பு செய​லா​ளர் கோ.சுகு​மா​ரன் பெற்​றுக் கொண்​டார்.​

வி​டியோ கான்​ப​ரன்​சிங் முறை​யில் அமெ​ரிக்​கா​வில் உள்ள தமிழ்​ம​ணம் வலைப்​ப​தி​வு​க​ளின் திரட்​டி​யின் நிர்​வாகி சொ.சங்​க​ர​பாண்டி,​​ சவுதி அரே​பி​யா​வில் உள்ள பொறி​யா​ளர் நாக.இளங்​கோ​வன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​÷பு​துவை வலைப்​ப​தி​வர் சிற​கம் ஒருங்​கி​ணைப்​பா​ளர் ரா.சுகு​மா​ரன்,​​ பேரா​சி​ரி​யர் நா.இளங்கோ,​​ மென்​பொ​ருள் வல்​லு​நர் க.அரு​ண​பா​ரதி,​​ பொறி​யா​ளர் மு.மணி​வண்​ணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

 சென்னை பதிப்பு

கருத்துகள் இல்லை: