Ads 468x60px

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, May 17, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம்​ நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்-தமிழ் மணம் சொ.சங்​க​ர​பாண்டி-தினமணி செய்தி

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம்​ நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்
First Published : 17 May 2010 03:29:03 AM IST தினமணி செய்திhttp://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Chennai&artid=243023&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ் எழுத்து வடிவ மாற்​றம்​ நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்
புதுச்​சேரி,​​ மே 16:​ தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்.​ என்று தமிழ் மணம் வலைப்​ப​தி​வு​கள் திரட்​டி​யின் நிர்​வாகி சொ.சங்​க​ர​பாண்டி தெரி​வித்​தார்.​ ÷ தமி​ழில் கொண்​டு​வ​ரப்​ப​ட​வி​ருக்​கும் எழுத்து மாற்​றம் என்​பது தமிழ் படிப்​போ​ருக்கு இடை​யூ​றாக இருக்​கும் என​வும் அவர் எச்​ச​ரித்​தார்.​ 

÷பு​துச்​சேரி வலைப்​ப​தி​வர் சிற​கம் அமைப்பு சார்​பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு புதுச்​சே​ரி​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ 
÷இ​தில் அமெ​ரிக்​காவி​லி​ருந்து விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் சொ.சங்​க​ர​பாண்டி பேசி​யது:​ 
÷த​மிழ் எழுத்​து​கள் சிர​ம​மாக இருக்​கி​றது என்று அறி​வி​யல் பூர்​வ​மா​கவோ,​​ புள்ளி விவ​ரங்​கள் மூல​மா​கவோ தமி​ழக அரசு நிரூ​பிக்​க​வில்லை.​ கற்​ப​னை​யா​கவே முடி​வெ​டுக்​கப்​பட்டு,​​ ​ தமிழ் எழுத்து வடி​வத்தை எளிமை படுத்​து​கி​றோம் என்று,​​ எழுத்து வடி​வத்தை மாற்ற தமி​ழக அரசு முடி​வெ​டுத்​துள்​ளது.​ ​
÷இது நம் வீட்​டுக்கு நாமே தீ வைப்​ப​தற்கு சமம்.​ வட அமெ​ரிக்க தமிழ்ச்​சங்க பேரவை என்​பது பெரும்​பா​லான தமிழ்ச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு.​   உலக தமிழ் அமைப்பு,​​ தமி​ழர்​க​ளின் உரிமை பிரச்​னை​கள் குறித்து போரா​டக்​கூ​டி​யது.​ ​
÷அ​மெ​ரிக்​கா​வில் எங்​கள் அமைப்பு சார்​பில் தமிழ் மொழி கற்​றுக்​கொ​டுக்​கப்​ப​டு​கி​றது.​ இதில் படிக்​கும் மாண​வர்​க​ளுக்கு ஆண்​டுக்கு 40 மணி நேரம் வகுப்பு என்று நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​   ஆனால்,​​ வகுப்​பெ​டுக்க நூலக அறை கிடைக்​கா​விட்​டாலோ,​​ பணிப் பொழிவு இருந்​தாலோ,​​ வகுப்​பு​கள் நடை​பெ​றாது.​ 
÷ஆண்​டுக்கு 30 மணி நேரத்​துக்​கும் குறை​வா​கவே வகுப்​பு​கள் நடக்​கும்.​ புலம்​பெ​யர்ந்த தமி​ழர்​க​ளின் குழந்​தை​கள் இங்கு அதிக அள​வில் படிக்​கின்​ற​னர்.​ அவர்​கள் பள்​ளி​க​ளி​லும்,​​ சக மாண​வர்​க​ளி​ட​மும் ஆங்​கி​லத்​தில்​தான் பேசு​கி​றார்​கள்.​ பெற்​றோர்​கள் கூட குறைந்த எண்​ணிக்​கை​யி​லேயே குழந்​தை​க​ளு​டன் தமிழ் பேசு​கி​றார்​கள்.​ ​

÷இ​ருப்​பி​னும் இவர்​கள் ஓர் ஆண்​டி​லேயே தமிழை எழுத,​​ படிக்க எளி​தில் கற்​றுக்​கொள்​கின்​ற​னர்.​ இவர்​கள் இது​வரை தமிழ் எழுத கடி​ன​மாக உள்​ளது என்று கூறி​ய​தில்லை.​ ​ 

÷த​மி​ழர்​களை திரு​ம​ணம் செய்து கொண்ட வேற்று மொழி​யி​னர் கூட தமிழ் கற்க வரு​கி​றார்​கள்.​ அவர்​க​ளும் தமிழ் எழுத சிர​மம் என்று கூறி​ய​தில்லை.​ ஜப்​பான்,​​ சீன மொழி​க​ளில் 1000-க்கும் மேற்​பட்ட எழுத்​து​கள் உள்​ளன.​ ÷இ​வை​களை எழு​தும் போது அவர்​க​ளுக்கு சிக்​கல் வந்​த​தில்லை.​ இணை​ய​த​ளத்​தில் கூட தங்கு தடை​யின்றி புழங்​கு​கின்​ற​னர்.​ ​ 

÷எ​ழுத்து மாற்​றம் என்​பது தமிழ் வழி கற்​கும் அப்​பாவி மாண​வர்​களை கடு​மை​யாக பாதிக்​கும்.​ எனவே இதனை அனு​ம​திக்​கக் கூடாது என்​றார் சொ.சங்​க​ர​பாண்டி.​

÷செüதி அரே​பி​யா​வைச் சேர்ந்த பொறி​யா​ளர் நாக.இளங்​கோ​வன் விடியோ கான்​ப​ரன்​சிங்​கில் பேசு​கை​யில்,​​ சீன மொழி​யில் மாற்​றம் கொண்டு வரும்​போது,​​ அனைத்து சீன மொழி சார்ந்த அமைப்​பி​ன​ரை​யும்,​​ கணினி வல்​லு​நர்​க​ளை​யும் கலந்​தா​லோ​சித்து உரு​வாக்​கி​னர்.​ 

÷த​மிழ் எழுத்து மாற்​றம் என்ற கருத்​தில அவ்​வாறு ஆலோ​சிக்​க​வில்லை.​ வீர​மா​மு​னி​வர் தமிழ் எழுத்​தில் 6.25 சத​வீ​தம் மாற்​றம் கொண்டு வந்​தார்.​    தந்தை பெரி​யார் 4 சத​வீ​தம் மாற்​றம் கொண்டு வந்​தார்.​ ஆனால்,​​ தமி​ழக அரசு கொண்டு வரும் எழுத்து மாற்​றம் 59 சத​வீ​தம் இருக்​கும் எனக் கூறப்​ப​டு​கி​றது.​ இது சிறந்​த​தல்ல என்​றார்.

2 comments:

Anonymous said...

சிறப்பாக நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தமைக்கு நன்றி

Anonymous said...

தமிழ் எழுத்துக்கு மாற்றம் தேவையில்லை. மாற்றத்திற்கு ஏற்புடைய காரணங்கள் ஏதும் இல்லை.

 

Sample text

Sample Text