விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.
அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது.
காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்
காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார்.
சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர்,
அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது.
நிகழ்ச்சி கீழே உள்ளவாறு நடக்க உள்ளது.
வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும்.
தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008.
விழுப்புரம்
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம்
நாள் 11 மே 2008
நிகழ்ச்சி நிரல்
காலை 08.50 - 9.00 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)
காலை 09.00 - 9.30 நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்)
காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி
ஏகலப்பை (15 நிமிடம்)
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது
பேராசிரியர் மு.இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 10.30-11.30 வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்
மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)
வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)
வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)
வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)
மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)
கேள்வி பதில் (5 நிமிடம்)
காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)
பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி
(WORD PRESS) (10 நிமிடம்)
வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்
காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்)
ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி
கேள்வி பதில் (5 நிமிடம்)
பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்
கேள்வி பதில் (10 நிமிடம்)
இணைய இதழ்களில் எழுதுவது
பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)
பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்
விண்டோஸ் (10 நிமிடம்)
லினக்ஸ் (10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்
ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)
எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)
தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)
தமிழில் அரட்டை (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி
அதியன் இணைப்பு (10 நிமிடம்)
பத்மா இணைப்பு(10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)
மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்
விக்கிப்பீடியா (10 நிமிடம்)
மதுரைத்திட்டம் (5 நிமிடம்)
யாழ் நூலகம் (5 நிமிடம்)
பிற தளங்கள் (5 நிமிடம்)
கேள்வி பதில் (5 நிமிடம்)
மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்
மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது
- தூரிகா வெங்கடேஷ் (10 நிமிடம்)
மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு
word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி
மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு
பயிற்சி ஒருங்கிணைப்பு
புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/
நிகழ்ச்சி ஏற்பாடு:
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்
********************************************
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/
தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -
புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு
தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php
வலைப்பதிவு திரட்டிகள்தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html தேன்கூடு http://www.thenkoodu.com/
1 கருத்து:
Best wises all your teem Mr.Sugumar
yours
siva
Hong Kong.
கருத்துரையிடுக