இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் இணைப்பது பற்றி...

பாலபாரதி...
விக்கி...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் தற்போது பதிவுகளைத் திரட்டியில் இணைப்பது குறித்து விக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இரா.சுகுமாரன் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவு, திரட்டி, தமிழ்வெளி போன்ற திடடிகளில் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இடையே, பாலபாரதி திரட்டிகளின் கருவிப்பட்டைகளை இணைப்பது பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

2 கருத்துகள்:

Warrant Balaw சொன்னது…

வணக்கம்.
தங்களின் கூட்டு முயற்சி ஆர்வம் வரவேற்கதக்கது. உங்களின் எண்ணம் தமிழ் மக்கள் அனைவராலும் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும் கூட, கணினி பயன்பாடு மற்றும் ஆர்வம் உள்ளவர்களே இதில் மூக்கை நுழைக்க முடியும்.

இப்படி நுழைய நினைப்பவர்களுக்கு கூட அதற்கு தேவையான தகவலோ, பயிற்சிகளோ குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு காரணங்களால் கிடைப்பதில்லை.

இதனை எச்சூழ்நிலையிலும் உடைத்து எறிய வேண்டும் என்பதுதான் உங்களின் நிலைப்பாடு என்பதாக என்றாலும் கூட அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

உண்மையாக, தாங்கள் இப்பக்கத்திற்கு விழுப்புரம் பயிலரங்கில் திரட்டிகளை இணைப்பது பற்றி என தலைப்பு இட்டுள்ளீர்கள். அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என ஆர்வத்தோடு படிக்க முற்பட்டால் வேண்டிய தகவல் ஒன்றுமே இடம் பெறவில்லை.

மாறாக, தாங்கள் பயிலரங்கு நடத்தியதாக சொல்லும் செய்தி முற்றிலும் உண்மையே என்பதை சட்டப்படி நிருபிக்க தேவையான ஒளிப்படங்களை மட்டும் இடுகை செய்துள்ளீர்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்? உங்களின் குறிப்கோள் எப்படி நிறைவேறும்?

உங்களின் சொல் வேறு, செயல் வேறு என்பதே என் கருத்து.

தாங்கள் தமிழ் வளர தமிழ் மக்களுக்கு சொல்ல விரும்பும் செய்திகளை முடிந்த அளவிற்கு புரியும் விதத்தில் புழங்கு, பேச்சு தமிழில் எப்படி பயிலரங்கை நடத்துகிறீர்களோ அப்படியே முழுமையாக தொகுத்து அளித்துடுங்கள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

//இதனை எச்சூழ்நிலையிலும் உடைத்து எறிய வேண்டும் என்பதுதான் உங்களின் நிலைப்பாடு என்பதாக என்றாலும் கூட அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

உண்மையாக, தாங்கள் இப்பக்கத்திற்கு விழுப்புரம் பயிலரங்கில் திரட்டிகளை இணைப்பது பற்றி என தலைப்பு இட்டுள்ளீர்கள். அது பற்றி தெரிந்து கொள்ளலாம் என ஆர்வத்தோடு படிக்க முற்பட்டால் வேண்டிய தகவல் ஒன்றுமே இடம் பெறவில்லை.//

எங்களின் முயற்சி ஆக்கப்பூர்வமற்றது என குறிப்பிட்டுள்ளீர்கள்,

ஆனால் எங்கள் தளத்தில் கீழே படித்து வந்தால் வலது புறம் பார்த்தால் உங்களுக்கு தெரியும்
உங்கள் பதிவை திரட்டிகளில் இணைக்க
* அடைப்பலகை மேம்படுத்தும் கருவி- தமிழ்மணம்
* குழலி பக்கங்கள்
* வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி - பூரணா ராசாராம்

என்ற பகுதியை பார்திருந்தீர்கள் எனில் உங்கள் கருத்து நியாயமற்றதாகும்.

எப்படி இணைப்பது என்பது பற்றி நேரடி விளக்கமும் அதன் செய்தி மட்டுமே இங்கு வெளியிட்டுள்ளோம். அதே நேரத்தில் இவ்வாறு ஆதங்கப்படுவதை விட்டு விட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தால் அது குறித்தோ அல்லது வேறு தொழில் நுட்பம் குறித்தோ விளக்கம் அளித்திருப்போம். எனினும் உங்கள் கருத்தை ஏற்கிறோம்.

இன்றைய நிலையில் அந்தந்த தளத்திற்கு சென்றால் அழகான தமிழில் இவை பற்றி அவர்கள் விளக்கமளித்துள்ளனர். திரட்டிகளில் இணைத்தல் முன்னதாக கொஞ்சம் சிக்கல் நிறைந்ததாக இருந்தபோது இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அவை மிகவும் எளிது.