தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம்
First Published : 17 May 2010 03:29:03 AM IST தினமணி செய்திhttp://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Chennai&artid=243023&SectionID=135&MainSectionID=135&SEO=&Title=தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம்
புதுச்சேரி, மே 16: தமிழ் எழுத்து வடிவ மாற்றம் நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம். என்று தமிழ் மணம் வலைப்பதிவுகள் திரட்டியின் நிர்வாகி சொ.சங்கரபாண்டி தெரிவித்தார்.
÷ தமிழில் கொண்டுவரப்படவிருக்கும் எழுத்து மாற்றம் என்பது தமிழ் படிப்போருக்கு இடையூறாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
÷புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அமைப்பு சார்பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷இதில் அமெரிக்காவிலிருந்து விடியோ கான்பிரன்சிங் மூலம் சொ.சங்கரபாண்டி பேசியது:
÷தமிழ் எழுத்துகள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாகவோ, புள்ளி விவரங்கள் மூலமாகவோ தமிழக அரசு நிரூபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுக்கப்பட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை எளிமை படுத்துகிறோம் என்று, எழுத்து வடிவத்தை மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
÷இது நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்கு சமம். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை என்பது பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. உலக தமிழ் அமைப்பு, தமிழர்களின் உரிமை பிரச்னைகள் குறித்து போராடக்கூடியது.
÷அமெரிக்காவில் எங்கள் அமைப்பு சார்பில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 மணி நேரம் வகுப்பு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வகுப்பெடுக்க நூலக அறை கிடைக்காவிட்டாலோ, பணிப் பொழிவு இருந்தாலோ, வகுப்புகள் நடைபெறாது.
÷ஆண்டுக்கு 30 மணி நேரத்துக்கும் குறைவாகவே வகுப்புகள் நடக்கும். புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் இங்கு அதிக அளவில் படிக்கின்றனர். அவர்கள் பள்ளிகளிலும், சக மாணவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். பெற்றோர்கள் கூட குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகளுடன் தமிழ் பேசுகிறார்கள்.
÷இருப்பினும் இவர்கள் ஓர் ஆண்டிலேயே தமிழை எழுத, படிக்க எளிதில் கற்றுக்கொள்கின்றனர். இவர்கள் இதுவரை தமிழ் எழுத கடினமாக உள்ளது என்று கூறியதில்லை.
÷தமிழர்களை திருமணம் செய்து கொண்ட வேற்று மொழியினர் கூட தமிழ் கற்க வருகிறார்கள். அவர்களும் தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை. ஜப்பான், சீன மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட எழுத்துகள் உள்ளன. ÷இவைகளை எழுதும் போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணையதளத்தில் கூட தங்கு தடையின்றி புழங்குகின்றனர்.
÷எழுத்து மாற்றம் என்பது தமிழ் வழி கற்கும் அப்பாவி மாணவர்களை கடுமையாக பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது என்றார் சொ.சங்கரபாண்டி.
÷செüதி அரேபியாவைச் சேர்ந்த பொறியாளர் நாக.இளங்கோவன் விடியோ கான்பரன்சிங்கில் பேசுகையில், சீன மொழியில் மாற்றம் கொண்டு வரும்போது, அனைத்து சீன மொழி சார்ந்த அமைப்பினரையும், கணினி வல்லுநர்களையும் கலந்தாலோசித்து உருவாக்கினர்.
÷தமிழ் எழுத்து மாற்றம் என்ற கருத்தில அவ்வாறு ஆலோசிக்கவில்லை. வீரமாமுனிவர் தமிழ் எழுத்தில் 6.25 சதவீதம் மாற்றம் கொண்டு வந்தார். தந்தை பெரியார் 4 சதவீதம் மாற்றம் கொண்டு வந்தார். ஆனால், தமிழக அரசு கொண்டு வரும் எழுத்து மாற்றம் 59 சதவீதம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது சிறந்ததல்ல என்றார்.

2 கருத்துகள்:
சிறப்பாக நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தமைக்கு நன்றி
தமிழ் எழுத்துக்கு மாற்றம் தேவையில்லை. மாற்றத்திற்கு ஏற்புடைய காரணங்கள் ஏதும் இல்லை.
கருத்துரையிடுக