இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

செவ்வாய், 18 மே, 2010

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்கு வெற்றி!

தமிழக அரசு தமிழ் எழுத்து மாற்றம் செய்யப் போவதாக 07.01.2010 நாளிட்ட மாலை மலர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியானது.

அந்த செய்தி: " சென்னை-7, தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது."

இந்த செய்தி வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவித மறுப்பும் வெளியிடாத நிலையில் கட்டாயம் இந்த எழுத்து மாற்றம் நடக்கும் எனக் கருதி உலகம் முழுவதுள்ள தமிழர்கள்  இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.  

சென்னையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடந்தது. அதன் பின்னர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் ஒரு மாநாடு நடத்தலாம் என கருத்து முன் வைக்கப்பட்டு, அதனை அமைப்புக் குழு விரிவாக விவாதித்து முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 16.05.2010 அன்று புதுச்சேரியில் தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுநர்கள், தமிழ் இயக்கத்தினர் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  இதில், கலந்துக் கொண்ட அனைவரின் அதாரவுடன் 'தமிழ் எழுத்து மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் செய்திகளை விரிவாக செய்தித்தாள்கள் வெளியிட்டன. குறிப்பாக தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ்  உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து,  தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்." எனக் கூறியுள்ளார்.

இது புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் எழுத்து மாற்ற முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு கிடத்த வெற்றியாகும்.

இந்த அறிவிப்பை காலத்தே செய்த தமிழக அரசுக்கும், செம்மொழி மாநாட்டு குழுவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு - தீர்மானங்கள்!


எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: ம.ராஜேந்திரன் மறுப்பு

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

வணக்கம்

மாநாடு சிறப்பாக நடந்ததாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தமிழக அரசின் எழுத்து சீர்த்திருத்தம் இருக்காது என்ற அறிவிப்பு குறித்தும் மகிழ்ச்சி.

ஒன்றுபட்டு போராடினால் என்றைக்கும் வெற்றி உண்டு என்பதற்கு இது ஓர் உதாரணம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்pன் முயற்சிக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டியது கடமையாகும்..

தோழமையுடன்,
க.அருணபாரதி

Venkatesh சொன்னது…

தமிழக அரசின் எழுத்து சீர்த்திருத்தம் இருக்காது என்ற அறிவிப்பு குறித்தும் மகிழ்ச்சி.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்கு மிகப்பெரிய பாராட்டுகள்!!

Guru UI சொன்னது…

பாராட்டுகள்!!

Jeyakumar, Tindivanam சொன்னது…

வாழ்த்துகள்!! பாராட்ட வார்த்தையில்லை

Sivanesan சொன்னது…

மாநாட்டில் கலந்து கொள்ள எவ்வளவோ முயன்றேன் முடியவில்லை. மாநாடு வெற்றி குறித்து மட்டற்ற மகிழ்ச்சி

-/சுடலை மாடன்/- சொன்னது…

தமிழக அரசிடமிருந்து நல்ல செய்தி வந்துள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிற்கத்தின் பணி பெரும்பாராட்டுதற்குரியது. பின்புலமாக இருந்து இம்மாநாட்டை நடத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சொ.சங்கரபாண்டி

இரா.சுகுமாரன் சொன்னது…

வாழத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ், குரு, ஜெயக்குமார் சிவனேசன், சொ.சங்கரபாண்டி ஆகியோருக்கு நன்றி

மோகனகிருஷ்ணன் சொன்னது…

புதுச்சேரி வலைபதிவர் சிரகத்திற்கு வாழ்த்துக்கள். இது நமக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

இரா.சுகுமாரன் சொன்னது…

நன்றி மோகன் இது உலகத்தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி