இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வியாழன், 20 மே, 2010

தமிழ் எழுத்து சீர்திருத்தமில்லை தஞ்சை பல்கலை துணைவேந்தருக்கு புதுவை வலைப்பதிவர் சிறகம் நன்றி- தினகரன் நாளிதழ்

புதுச்சேரி, மே 20: புதுவை வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு எழுத்து சீர்திருத்தம் செய்யப்போவதாக வும், அதற்கென தனிக்குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்தி வெளியானது. தமிழில் 18ம் நூற்றாண்டில் தான் முதல்முதலில் வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம் செய்தார். அதன்பின் 1935ல் தந்தை பெரியார் தமிழில் உள்ள 11 எழுத்துக்களை மாற்றியமைத்தார். அவர் புதியதாக எழுத் துகளை உருவாக்காமல் ஏற்கனவே இருந்த தமிழ் எழுத்துக்களை வைத்து சில மாற்றங்களை செய்தார்.


தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன்னாள் துணைவேந்தர் குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. அதாவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார எழுத்துகள் 72க்கும் மாற்றாக புதிய குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இதன்படி மாற்றம் செய்தால் அது தமிழில் 80 சதவீதம் சொற்களும், 59 சதவீத எழுத்துகளும் மாறும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது ஓட்டுமொத்த தமிழ் மொழியை மாற்றுவதாகும். இவ்வாறு எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் ஆயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையதளத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்று போகும் ஆபத்துள்ளது. 

புதுவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு கடந்த 16ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிட போவதில்லை என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தருமான ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழக அரசு எழுத்து மாற்றம் செய்யப் போவ தில்லை என கொள்கை முடிவெடுத்து அதனை முதல்வரோ அல்லது துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்த சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைப்பு குழு உறுப்பினர் கோ.சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

1 கருத்து:

Venkatesh சொன்னது…

இது மிகப்பெரிய சாதனை தங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி...

வெங்கடேஷ்