தினமணி செய்தி 18-05-2010
எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை: ம.ராஜேந்திரன் மறுப்பு
சென்னை, மே 17: செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று யாரும் தெரிவிக்கவில்லை என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 16) நடைபெற்ற தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் பேசிய தமிழறிஞர் ஆர். இளங்குமரனார், 'கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் தமிழுக்கு பின்னடைவு ஏற்படும்' என்று கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ம. ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன. இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை. அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்.
3 கருத்துகள்:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது அதற்கான பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
தமிழ்மறவன்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் முயற்சிக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி.
கருத்துக்களை பதிவு செய்த தமிழ்மறவன், சுப.நற்குணன் ஆகியோருக்கு நன்றி
கருத்துரையிடுக