இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 5 மே, 2008

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு மே 11 ஞாயிறன்று நடக்கவிருக்கிறது.

விழுப்புரத்தில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பங்களிப்புடன் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு ஒன்று நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தை சேர்ந்த திரு .தமிழ் நம்பி அவர்கள் என்னை தொடர்பு கொண்டார். 
 
ஏற்கனவே, புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தில் அத்தகைய பயிற்சி பயிலரங்கு நடத்த வேண்டும் கருதி இருந்தோம். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த பணியை தொடர இயலவில்லை. 
 
அது பின்னர் நடத்துவது என தீர்மானித்துள்ளோம். ஆனால், விழுப்புரத்தில் வரும் மேமாதம் 11 தேதி ஞாயிறன்று வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு நடத்தித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். காலம் மிகமிகக்குறைவாக உள்ளது. எனினும் உடனடியாக நடத்தவேண்டும் என்பதில் விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தினர் முனைப்பாக இருக்கிறார்கள். இந்த தேதி தீர்மானிக்கப்பட்டதற்கு இடம் ஒரு முக்கிய காரணமாகும். 
 
அதாவது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வந்தால் விண்ணப்பம் வழங்குவது, சேர்க்கை போன்ற பிரச்சனையில் கல்லூரியில் முனைப்பாக இருக்கும் என்பதால் அதற்கு முன்பே நடத்திவிடுங்கள் என கல்லூரி பேராசிரியர் கேட்டுக் கொண்டபடியால் இந்த தேதியை அவசரமாக முடிவு செய்ய வேண்டியதாயிற்று. ஞாயிறு தானே கல்லூரி இயங்கும் நாளில் பயிற்சி பயிலரங்கு நடத்தவில்லை என்றாலும் உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் முனனப்பாக இருப்பதால் நாமும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
 
விழுப்புரம் அரசு கல்லூரியில் ஏற்கனவே சுமார் 32 கணினி வசதியுடன் இணைய இணைப்புடன் உள்ளது. எனினும் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் அகலக்கற்றை இணைப்பு தற்காலிகமாக ஒருமாதம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலம் குறைவு என்பதால் அதற்கு ஏற்றார் போல திட்டமிடுவது என முடிவு செய்யப்பட்டது. 
 
ஏற்கனவே இதில் பங்கு பெற சுமார் 50 பேர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது எனினும் விருப்பம் உள்ளவர்கள் thamizhanambi44@gmail.com அல்லது திரு தமிழ்நம்பி அவர்களை +91 9443440401 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தை சேர்ந்தவர்கள் செய்தாலும் அவற்றை நடத்தி தரும்படி வலைப்பதிவர் நண்பர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
எனவே வலைப்பதிவு அன்பர்கள் இப்பயிற்சிப் பயிலரங்கு சிறப்பாக நடத்திதர ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் பயிற்சி அளிக்க சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து நண்பர்கள் வருவார்கள் எனினும் வலைப்பதிவில் நல்ல அனுபவம் உள்ள நண்பர்கள் யாரேனும் வருவதாக இருந்தாலும் அவர்களையும் பயிற்சி அளிக்க இணைத்துக் கொள்ளலாம் என கருதுகிறோம். 
 
எனவே பயிற்சி அளிக்க விரும்பும் நண்பர்கள் இது தொடர்பாக தகவல் அளிக்க வேண்டிய மின்னஞ்சல் rajasugumaran@gmail.com அல்லது இரா.சுகுமாரன் 9443105825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
 
அன்புடன் இரா.சுகுமாரன்

1 கருத்து:

இரா. வசந்த குமார். சொன்னது…

ஐயா.. தங்கள் அழைப்பை அறிந்தேன். மிக்க நன்றி. ஆனால் தற்போது என்னால் அத்தகைய தொலைவிற்கு வருவதற்கு வாய்ப்புகள் மிக்க குறைவாய் இருப்பதால், தற்சமயம் தங்களது முகாமிற்கு வருவது கடினம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

தங்கள் பயிற்சிப் பட்டறை மாபெரும் வெற்றி பெற வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.