இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

புதன், 31 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு!

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று, புதுச்சேரியில் "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னை வலைப்பதிவர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. 
 
புதுச்சேரி பயிற்சிப் பட்டறைக்கு சென்னை வலைப்பதிவர்கள் எந்தளவு ஒத்துழைக்க முடியும் என்பதும், ஏற்கனவே வலைபதிவர் சந்திப்பு நடத்தியது பற்றிய அனுபவம் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். 
 
அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 
 
 நாள்: 04-11-2007 ஞாயிறு.  
 
நேரம்: காலை 11-00 மணி.  
 
இடம்: இக்சா மையம் (ICSA Center), 107, பாந்தியன் சாலை, எழுப்பூர் அருங்காட்சியம் எதிரில், எழும்பூர், சென்னை-600 008. 
இக்சா தொலைபேசி: 044 - 28194905.  
குறிப்பு: அறை சுகுமாரன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
 தொடர்புக்கு: இரா.சுகுமாரன்  
உலாபேசி: 94431 05825. 
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

சனி, 27 அக்டோபர், 2007

புதுச்சேரி பதிவர் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பதிவு செய்க

தமிழ்க் கணினி – வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை
நாள்: 09-12-2007 ஞாயிறு நேரம்: காலை 9.00 முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: ஓட்டல் சற்குரு, புதுச்சேரி.
“மெல்லத் தமிழ் இனி சாகும்” என்பதைப் பொய்யாக்கி இன்று தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது. தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது. குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது என பல்வேறு வடிவங்களில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிப்பது. ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது. தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது. இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன. இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். மாலை நிறைவு விழா. இதில் புதுச்சேரி முதல்வர் மண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்கிறார். இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினி பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம். எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர் புதுச்சேரி வலைபதிவர் சிறகம் பதிவகம் இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம். பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும். பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்காணும் தளங்களில் வெளியிடப்படும். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், அனைத்து தொடர்புகளுக்கும்: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைபதிவர் சிறகம். உலாபேசி: + 91 94431 05825 மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

புதுச்சேரி தமிழ்வலைப்பதிவர் பட்டறை, திசம்பர் 9

 http://muelangovan.blogspot.com/2007/10/9.html

புதுச்சேரி தமிழ்வலைப்பதிவர் பட்டறை, திசம்பர் 9

புதுச்சேரியில் தமிழ்வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை வரும் திசம்பர் 9 ஆம் நாள் நடைபெற உள்ளது.புதுச்சேரி நகரத்தில் சற்குரு உணவகத்தில் அமைந்துள்ள கருத்தரங்க அறையில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிவரை நிகழ்ச்சி நடைபெறும்.

காலையிலும் பிற்பகலிலும் இணையம்,வலைப்பதிவு,மின்னஞ்சல் அனுப்புவது,ஒருங்குறி எழுத்து,அதனைநிறுவுவது,புதிய இணையப்பக்கம் உருவாக்குவது முதலானபொருள்களில் பயிற்சியாளர்களின் அறிமுக உரையும்,செயல் விளக்கங்களும் இடம்பெறும்.

மாலை 6 மணிக்குத் தொடங்கும் மாலைஅமர்வு பொதுஅமர்வாகத் தொடங்கிப் புதுவையின் தமிழ்அறிஞர்கள்,கணிப்பொறி ஆர்வலர்களின் உரையோடு நடைபெறும்.புதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்களும்,பிற அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்புமலர் வெளியிடப்படுகின்றது.பயன்பாட்டுக் குறுவட்டு ஒன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள கல்லூரி,பல்கலைக்கழக மாணவர்கள் இப்பட்டறையில் கலந்துகொள்ள உள்ளனர்.

கணிப்பொறி,இணையம்,வலைப்பதிவுத் துறையில் உள்ளவர்களுடன் இணைந்து இப்பணியை வெற்றியாக நிறைவேற்றப் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் அன்புடன் அழைக்கிறது.

கட்டுரை வழங்குவோர்,பயிற்சியளிக்க முன்வருவோர்,பொருளுதவி, விளம்பரம் வழங்க விரும்புவோர்,பங்குபெற விரும்புவோர் திரு.இராச.சுகுமாரன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

கைப்பேசி : +9443105825
மின்னஞ்சல் :rajasugumaran@gmail.com

மு.இளங்கோவன்,புதுச்சேரி
muelangovan@gmail.com

செவ்வாய், 2 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

மு. இளங்கோவன் பதிவிலிருந்து.... 

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சிறப்புக்கூட்டத்தின் முடிவின்படி வரும் திசம்பர் 9 ஆம் நாள் புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை புதுச்சேரியில் நடைபெற உள்ளது.


தொடர்பு முகவரி :
இரா.சுகுமாரன்
பேசி: 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

திங்கள், 1 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் கலந்து கொள்கிறார்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக புதுச்சேரி முதல்வரை சந்தித்து கடிதம் அளித்து வலைப்பதிவர் பட்டறையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். முதல்வர் கலந்து கொள்வதாக இசைவு அளித்துள்ளார். 
 
முதல்வரை காண திரு. கோ.சுகுமாரன், திரு. செயப்பிரகாசு, திரு. அருணபாரதியுடன் இரா. சுகுமாரன் உள்ளிட்டவர்கள் முதல்வரை சந்திக்க சென்றோம். முன்னதாக புதுச்சேரி கூட்டுறவு ஒன்றியத்தில் இடம் ஒப்புதல் பெறுவது என முடிவு செய்திருந்தோம். 
 
பின்னர் புதுச்சேரி சர்குரு உணவகத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். இந்த இடம் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது. சுமார 100 பங்கேற்க வசதியானது. நகரின் உள்ளே அமைந்துள்ளது அமைதியான இடம் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதியுடையது.