இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 25 ஜனவரி, 2010

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் கருத்தரங்கம் - நிறைவுற்றது

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும்" தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் நா.இளங்கோ தலைமை தாங்கினார்.


நிகழ்ச்சி தொடக்கத்தில் சீத்தா பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


இரா.சுகுமாரன்  வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறகம் அமைப்பின் நோக்கம் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.


கோ.சுகுமாரன் “தமிழில் வலைப்பதிவுகள்” தொடங்குவது பற்றி கருத்துரையாற்றினார். வலைப்பதிவு உருவாக்குதலைப் பற்றியும் தமிழ் வலைப்பதிவு திரட்டியான “தமிழ்மணம்”, “தமிழ்வெளி”, “திரட்டி” உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தால் மட்டுமே உங்கள் பதிவை அதிகமானோர் படிப்பர் என்பதையும் விளக்கினார்.
 
இரா.மோகனகிருஷ்ணன்
“தமிழில் எழுத்துருக்கள் வகைகள் பற்றி கருத்துரையாற்றுகிறார் தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தார்.

க.அருணபாரதி 
தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், விண்டோசு விஸ்டாவில் தமிழ், ஆபீஸ் 2007 இல் தமிழ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ஆகியவற்றில் தமிழில் கருவிப் பட்டைகள் உள்ளதையும் தமிழர்களாகிய நாம் தமிழிலேயே இந்த மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அருணபாரதி தான் உருவாக்கிய தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருளை நிறுவி தமிழ் தட்டச்சு செய்து காண்பித்தார். விஸ்டா, விண்டோசு 7 ஆகியவற்றில் தட்டச்சு செய்து காண்பித்தார். முதலில் தமிழ்-99 விசைப் பலகையில் இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. சோதனையில் இருப்பதால் தேவையானோர் வாங்கி சோதித்து அறியலாம். பலர் இயக்கம் பற்றி திருப்தி தெரிவித்த பின்னர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.

இந்த மென்பொருளின் உள்ளே என்ன "கோடிங்" பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும். அல்லது தேவையானோருக்கு அளிக்கப்படும். இதில் தாங்கள் விரும்பியவாறு விசைப் பலகையை அவர் மாற்றி கொள்ளும் வகையிலும் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். என அருண பாரதி தெரிவித்தார்.

எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார் தமிழில் இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கினர். நித்தியகுமார் உபுண்டு இயங்குதளத்தை கணினியில் நிறுவி அதில் தமிழ் பயன்பாடு பற்றி பேசினார்.

சீனுவாசன் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் தெரிவித்தார்.

இதில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ நம்பி வலைப்பதிவர் பட்டறை நடத்தப்பட்டதால் பயன் பெற்றோர்களைப் பற்றியும் தங்கள் பகுதியின் வலைப்பதிவர்கள்  பற்றியும் எடுத்துரைத்தார்.


வருகை தந்த அனைவருக்கும் தமிழ்மணம் ஏற்பாடு செய்து அளித்த துண்டறிக்கையும், தமிழ்மணம் பெயர் பதித்த எழுதுகோலும் வழங்கப்பட்டது,

 நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர்

புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் -புதுச்சேரியில் கருத்தரங்கம்

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் 23-01-2010 அன்று மாலை 5.30 மணி அளவில் புதுச்சேரி வணிக அவையில் நடைபெற உள்ளது.

புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கும் முயற்சியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான தகவல்களை அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோ.சுகுமாரன் 
"தமிழில் வலைப்பதிவுகள்" என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார்.

வலைப்பதிவு உருவாக்குதலை செயல் விளக்கமாக செய்து காண்பிப்பது,
தமிழ் வலைப்பதிவு திரட்டியான "தமிழ்மணம்", "தமிழ்வெளி", "திரட்டி" உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளைப் பற்றியும் அவை தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன்படும் விதம் பற்றியும் விளக்கப்படும்.

இரா.மோகனகிருஷ்ணன்
"தமிழில் எழுத்துருக்கள் அதன் பயன்பாடுகள்" கருத்துரையாற்றுகிறார்

தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைப்பார்.

க.அருணபாரதி
தமிழில் மென்பொருட்கள்


தமிழில் மென்பொருட்கள் பற்றியும், குறிப்பாக தமிழ் தட்டச்சு செய்வதற்கான மென் பொருட்கள் பற்றிய தகவல்கள் அளிப்பார்.
அவர் புதிதாக உருவாக்கிய தமிழ் தட்டச்சு செயலியை சோதனை செய்து விளக்குவார். ஏ-கலப்பை, என்.எச்.எம் எழுதி, குறள் மென்பொருள், உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி தமிழ் உள்ளீடு செய்வது தொடர்பாக விளக்கமளிப்பார்.


எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார்
தமிழில் இயங்கு தளங்கள்

விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்குவார்கள். மைக்ரோசாப்ட் 2003, 2007,  ஓப்பன் ஆபிஸ் ஆகியவற்றில் தமிழை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் கருவிப்பட்டைகள் ஆகியவற்றை தமிழில் வைத்துக்கொள்வது பற்றிய விளக்கம் ஆகியவை விளக்கப்படும்.


மேலும் பல்வேறு தகவல்களை இன்னும் பலர் வழங்க உள்ளனர் அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.

இந்த நிகச்சிக்கு

தலைமை :  பேராசிரியர் நா.இளங்கோ
வரவேற்பு : சீத்தா பிரபாகரன்
முன்னிலை: மகரந்தன், தமிழநம்பி,இராசராசன், வெங்கடேஷ்
தொடக்கவுரை: இரா.சுகுமாரன்
நன்றி: ம.இளங்கோ

அனைவரும் வருக.


மேலும் விவரங்களுக்கு :
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
+91 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
வலைதளம்: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்