இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 21 செப்டம்பர், 2007

புதுவை வலைப்பதிவர் சிறகம் - ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் இரண்டாவது ஆலோசனைக்கூட்டம் வரும் 27-09-2007 வியாழன் அன்று இரவு 7.00 மணியளவில் புதுச்சேரி பாரதிப்பூங்காவில் நடைபெற உள்ளது. 
 
இடம்: புதுவை சட்டமன்றம் எதிரில். ஆயிமண்டபம் அருகில் இதில் நிகழ்ச்சிக்கு யார் யாரை அழைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ள இருக்கிறோம். 
 
 பதிவர்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். வர இயாலாதவர்கள் மின்னஞ்சல் மூலம் கருத்தை பதிவு செய்ய வேண்டுகிறோம். 
 
மின்னஞ்சல் முகவரி: rajasugumaran@gmail.com 
 
தொடர்புக்கு: 94431 05825

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

"தமிழ்க் கணினி" - புதுச்சேரியில் வலைப்பதிவர் பட்டறை

புதுச்சேரியில் பதிய பதிவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2007, 9 ஆம் நாள் இப்பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இப்பயிற்சி வகுப்பானது முற்றிலும் புதியவர்களுக்கானதாகும். இதில் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, ஒருங்குறி எழுத்துறு பயன்படுத்துவது அதற்கான மென்பொருட்களை நிறுவுவது வலைத்தளங்களில் எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு நேரடி பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர்.
 
 இந்த பதிவர்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவே இந்த பட்டரை நடத்துவது என கருதி தொடக்கத்தில் பேசுவந்த நிலையில் பின்னர் புதியவர்களுக்குமாக சேர்த்து மொத்தமாக 100 பேர்களுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
காலை மாலை என இரு வேளையும் நடைபெறும். காலை கணினி பற்றி பொதுவானத் தகவல்களும், மாலை பதிவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். இந்த பதிவர் பட்டறை "தமிழ்க் கணினி"" என்ற பெயரில் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதன் நோக்கம் கணனி முழுமையும் தமிழ்படுத்த வேண்டும் என்பதுமாகும். இதனால், தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.
 
 அதனுடன் ஏகலப்பை, உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் வழங்கிய மென்பொருட்களும், புதிய மென்பொருட்கள் பலவும் வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதில் தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கணனியில் தமிழ் என்பது தொடர்பான விவரங்கள் அங்கிய ஒரு கணனி மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம். 
 
தொடக்கமாக கணனி தொடர்பான தொழில் நுட்பம் அறிந்தவர்களை அழைத்து தொடங்கி வைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். தமிழ் நாடு அரசு செய்துள்ள பல பணிகளை புதுவை அரசும் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தும் வகையில் புதுவை முதல்வரை அழைத்து இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பொதுவாக "சென்னை வலைப்பதிவுப் பட்டறை" போலவும் அதில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பட்டறையாக இது இருக்கலாம். "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்" என்ற பெயரிலான அமைப்பு இந்த பட்டறையை நடத்துவது எனவும் முடிவு செய்து இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் ஆர்வலர்கள், கணனி ஆர்வலர்கள், இணையப் பதிவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும். 
 
 மேலும், சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும். எல்லாமே இலவசமாக இல்லாமல் குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம் வசூலிப்பது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முடிவு நிதி என்ற பிரச்சனையை அடிப்படையாய் கொண்டது அல்ல. இவ்வாறு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது என்பது திட்டமிட்ட 100 பேர் என எண்ணிக்கையை குறைத்து சிறப்பாக செய்ய இயலும் என்பதாலேயே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சலுகை உண்டு. பதிவர்களின் ஆலேசனை வரவேற்கப்படுகிறது. 
 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்காக, 
 இரா.சுகுமாரன், 
 தொடர்பு எண்: 94431 05825

புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

“ தமிழ்க் கணினி ”
வலைப்பதிவர் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை கலந்தாய்வுக் கூட்டம்
------------------------------------------------------------------------------
நாள்: 09-09-2007, ஞாயிற்றுக்கிழமை, காலம்: சரியாக மாலை 5.00 மணி இடம்: பிலால் உணவகம், அண்ணா சாலை, புதுச்சேரி.1

------------------------------------------------------------------------------ 

வணக்கம்,

கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து புதுச்சேரியில் ''தமிழ்க் கணினி'' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தலாம் என எண்ணியுள்ளோம். இப்பயிற்சியானது கணினியில் முறையாகப் பயிற்சி பெறாதவர்களை நோக்கியதாகும். 
 
முறையாக பயின்றவர்கள், பயிற்சிப் பெற்றவர்கள் கூட கணினியைத் தமிழில் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்தால் மட்டுமே தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அறிந்திருக்கிறார்கள் என்றும், அதனை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. பலருக்குத் தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் மிகவேகமான வளர்ச்சிப் பற்றி போதிய அறிமுகம் இல்லாமலேயே உள்ளது. எனவே, தமிழ் மொழியில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கத்தோடு இப்பயிற்சிப் பட்டறையை முதற்கட்டமாக நடத்தலாம் என எண்ணுகிறோம். 
 
இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழில் கிடைக்கும் மென் பொருட்களை அறிமுகம் செய்வது, அதனை கணினியில் நிறுவுவது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, தமிழில் இணைய தளங்களில், வலைப்பூக்களில் எழுதுவது உட்பட தமிழ்க் கணினி தொடர்பான தொழிற்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்தலாம். 
 
இப்பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த தமிழ் ஆர்வலர்கள், கணினி ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டலின் படி செயல்பட தீர்மானித்துள்ளோம். 
 
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் மேற்கண்டவாறு நடைபெற உள்ளது. தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொண்டு, தங்கள் மேலான கருத்துக்களை வழங்கி, செம்மொழிக்கு கணினித் தமிழ் மூலம் மேலும் சிறப்பு சேர்க்க ஆதரவுதர வேண்டுகிறோம். 
 
தமிழ்க் கணினிக்காக, 
 
(இரா.சுகுமாரன்)
-------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: இரா.சுகுமாரன் 94431 05825. மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com