இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007-இல் தமிழில் பிழைத்திருத்தும் வசதி


மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007-இல் தமிழில் பிழைத்திருத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிய பெற வேண்டுமானால் Microsoft தகலவலிறக்க மையம் சென்று அங்குள்ள Update for Microsoft Office Word 2007 (KB974561) - தமிழ் - மேம்பாட்டிற்கான மென்பொருளை தகவலிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும். மேலே உள்ள இணைப்பின் வழியாக சென்றால் அதற்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்யாலாம். பதிவிறக்கம் செய்து நிறுவினால் இந்த வசதிய பெற இயலும்.
இந்த பிழைத்திருத்தி முழுமையானதாக இல்லை, இதனை முழு அளவில் அல்லது பகுதியளவில் கூட பயன்படுத்த இயலாது எனினும் முதற்கட்டமாக அதற்கான முயற்சிகளை மேற் கொள்ளப்பட்டுள்ளது. என்பது மகிழ்ச்சியான விசயம்.


மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழில் பிழைத்திருத்தம் செய்வதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளது இதன் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இது தொடக்கம் என்றாலும் காலப்போக்கில் இது விரிவடைந்து முழுமையான ஒரு வடிவமாக நமக்கு கிடைக்கும் என நம்பலாம். இப்போது இருக்கும் வசதியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

திங்கள், 5 அக்டோபர், 2009

புதுச்சேரியில் மீண்டும் வலைப்பதிவர் பயிலரங்கு

புதுச்சேரியில் மீண்டும் வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று 04-10-2009 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, சாகித்திய அகாதமி உறுப்பினர் மகரந்தன், க.அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ், கு.இராம்மூர்த்தி ஓவியர் இராசராசன், சீத்தா.பிரபாகரன், ஆனந்தக்குமார், வீர.மோகன்.
தமிழநம்பி. இரா.செயப்பிரகாசு, இரா.முருகப்பன், ஏ.சீனுவாசன் (கடலூர்), முருகதாசு, ந.இரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் ஆண்டு சனவரி 10, 2010 ஞாயிறன்று நடத்துவது என திட்ட மிடப்பட்டுள்ளது. வழக்கமாக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை என்று அழைக்கப்பட்ட இப்பயிலரங்கு BLOGGERS WORKSHOP என்ற வார்த்தையை நேரடியாக ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இது தவறானதாகும் என்று சென்றமுறை புதுச்சேரி பயிலரங்கில் கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ சுட்டிக்காட்டி இருந்தார். எனவே அதன் அடிப்படையில் பயிற்சிப்பட்டறை என்று குறிப்பிடாமல் இனிமேல் “பயிலரங்கு” என்று அழைப்பது என முடிவு செய்துள்ளோம்.

இந்த கூட்டத்தில் சென்ற முறை வழங்கியது போல ஒரு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு இலவசமாக கொடுப்பது, மலர் வெளியிடுவது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலர்க் குழு உறுப்பினர்கள்: பேராசிரியர் நா.இளங்கோ, மகரந்தன், இரா.சுகுமாரன்

குறுந்தகடு வெளியிடல்: க.அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ் ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவர்கள் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.