இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

சனி, 22 மார்ச், 2008

புதிய ஒருங்குறி விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது

சென்னையில் யுனிகோடு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு 2007 மே மாதம் ஒருங்குறி நிறுவனத்துடன் நடந்த கூட்டத்தில் தமிழுக்கு அதிக இடம் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆய்வு செய்யப்படும் என்ற உறுதியை ஒருங்குறி நிறுவனம் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் 23, 24 சனவரி 2008 யுனிகோடு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடை பெற்றது, தமிழுக்கு ஒருங்குறியில் அதிக எழுத்துக்கள் இடம் பெறச் செய்வதற்கான பேச்சு வார்த்தையின் போது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் (பெயர் நினைவில்லை) தற்போது எந்த எழுத்து உங்களுக்கு கணினியில் தெரியவில்லை, எல்லா எழுத்துக்களும் சரியாகத் தெரியும் போது பிறகு ஏன் இதில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறீர்கள். இது தேவையற்றதாகும் என்று பேசியுள்ளார். அதோடு அல்லாமல் தமிழுக்கு இப்படி அனைத்து எழுத்துக்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்வதால் எங்களுக்கு என்ன பயன் என்று ஒருங்குறி நிறுவனத்தினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சீனாவில் அவ்வாறு அதிக இடம் அம்மொழிக்கு ஒதுக்கியதால் ஒரு பெரிய அளவு வியாபாரம் நடந்தது. ஆனால் தமிழில் மாற்றம் செய்தால் வியாபார ரீதியாக எங்களுக்கு என்ன பயன் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு துளைத்துக்கொண்டிருந்தது ஒருங்குறி நிறுவனம் கேட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தயாரித்து வழங்கிய மென் பொருட்களுக்கு வியாபார நிலையில் தமிழக அரசு உதவும் என்பதை பற்றியும் பேசப்பட்டது. இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஒருங்குறி நிறுவனம் சாரிபாகா வந்தவர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்ததால், ஒரு நிலையில் பொருமை இழந்த நமது குழு எங்கள் மொழிக்கு இப்படித்தான் இட ஒதுக்கீடு வேண்டும். அதனை அங்கு சென்று தெரிவியுங்கள். எங்கள் மொழி எப்படி அமைய வேண்டும் என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்கள். எனவே, தமிழுக்கு ஒருங்குறியில் கூடுதல் இடம் ஒதுக்கப்படலாம், ஒரு வேளை அவ்வாறு ஒதுக்கப்படாமல் போனாலும், 16 பிட் குறியீட்டு முறையிலான எழுத்துருக்களை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதே போல இந்திய அரசும் இதனை அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இளங்கோ நிறுவனம் ஏற்கனவே 50 எழுத்துருக்களை புதிய ஒருங்குறியில் வெளியிட்டுள்ளது. ஆகவே புதிய எழுத்துருக்கள் உருவாக்குவது போன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை, புதிய ஒருங்குறியில் எழுத்துருக்களை உடனடியாக வெளியிடுவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை எனினும் தமிழக அரசு ஒருங்குறி நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருக்ககூடும். யுனிகோடு நிறுவனம் தமிழ் மொழியின் புதிய ஒருங்குறியை வெளியிடாவிட்டாலும் தமிழக அரசு புதிய ஒருங்குறி எழுத்துருவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்பது மட்டும் உறுதி எனத் தெரிகிறது.