இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

புதுச்சேரியில்தமிழ் தயார் திட்டம் செயல்படுத்த - 28-09-2008 ஞாயிறு அன்று ஆலோசனைக் கூட்டம்

அனைவருக்கும் வணக்கம், புதுச்சேரியில் தமிழ் தயார் திட்டம் ஏற்கனவே தொடங்குவதாக திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இதுவரை அதற்கான பணி எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே அத்திட்டத்தை நடைமுறை செய்வது குறித்து விவாதிக்கலாம் என கருதியுள்ளோம். வரும் 28-09-2008 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு புதுச்சேரி 100 அடி சாலை நடேச நகரில் (இந்திரா காந்தி சிலை அருகில் உள்ளது) இதற்கான ஆலோசனக்கூட்டம் நடைபெற உள்ளது. இது ஒரு பதிவர் சந்திப்பாகவும் நடைபெறும், இதில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன். கலந்து கொள்ள rajasugumaran@gmail.com அல்லது 94431 05825 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் தயார் திட்டம் என்பது " தற்போது கணினியில் தமிழ் பயன்படுத்துவதற்கான வசதிகள் அதிகமாக இருந்தாலும் அதன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இணையம் பயன்படுத்த இணைய மையங்களுக்கு வருபவர்களுக்கு உடனடியாக இந்த வசதிகள் சென்று சேர இணைய மையங்களில் தமிழ் வசதிகளை நிறுவி அந்த மையத்தில் உள்ளவர்களுக்கு இது தொடர்பான தகவல்களை அளித்து தமிழ் மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு ஒன்றும் இலவசமாக அளித்து தமிழை இணைய மையங்களில் பயன்படுத்த தயார் செய்வதையே " தமிழ் தயார்" திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கோவையில் செயல்படுத்தப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை ஏற்கனவே கோவையில் செயல்படுத்திய "ஓசை செல்லா" இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். http://osaichella.blogspot.com/2007/12/1000.html இது குறித்து ஓசை செல்லா ஏற்கனவே இட்ட பதிவின் காணவும். அன்புடன் இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

திங்கள், 1 செப்டம்பர், 2008

பிளாகரில் புதிய வசதிகள்

பிளாகர் தளத்தில் புதிய பல வசதிகள் செய்யப் பட உள்ளன, கீழே இணைத்துள்ள படத்தை பார்க்கவும். உங்கள் வலைத்தளத்தில் Add a gadget என்பதை கிளிக் செய்தால் பகுதிய கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்று உங்களுக்கு காட்சி தரும் இதில் BLOG LIST (NEW) என்பதில் உள்ள + குறியீட்டை கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த வசதி அளிக்கப்படும். ஏற்கனவே ( RSS) இந்த வசதி அளிக்கப்பட்டிருந்தாலும்  இது புதிய மேம்பட்ட  வசதியாகும்.

படம் -1
படம் -2

பதிவு எழுதியுள்ள இந்த தளத்தில் அந்த வசதி அளிக்கப்படவில்லை  "பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது" செய்தியை கிளிக் செய்து பார்த்தால் வலது பக்கத்தில் படிக்க சில வலைத்தளங்கள் என்ற தலைப்பிலான செய்திகளை பார்க்கவும். அதில் உள்ளவாறு நீங்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி படிக்க விரும்பும் வலைத்தளங்களை உங்கள் தளத்தில் இணைக்கலாம் ஏற்கனவே பெயர்களை மட்டுமே அல்லது தளத்தின் இணைப்பு மட்டுமே இணைக்க வசதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வலைத்தளத்தை இணைப்பதோடு அல்லாமல் அந்த வலைத்தளத்தில் கடைசியாக எப்போது செய்தி வெளியிடப்பட்டது என்ற தகவல்களை நாம் பார்த்துக்கொள்ள முடியும். அதோடு செய்தியின் முதல் சில வரிகளை படிக்க முடியும். இவ்வசதி வரைவு  பிளாகர்   அல்லாது நடைமுறையில் உள்ள தளத்திலேயே  பெற இயலும்.


கருத்து சொல்ல புதிய வழி
உங்கள் தளத்தில் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் குறிப்பிட்டபதிவு பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்ய தற்போது ஒரு வசதியை பிளாகர் தளம் வழங்க உள்ளது . இந்த வசதியை நீங்கள் பெறவேண்டுமானால் நீங்கள் உங்கள் தளத்தில் உள்ள LAYOUT  சென்று BLOG POST க்கு செல்ல வேண்டும். அங்குள்ள EDIT  க்கு சென்று இவ்வசதியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

***** ஸ்டார் ரேட்டிங் என்று படத்தில் உள்ளவாறு மதிப்பீடு வழங்க இயலும், கீழே "எதிர்வினைகள்" என்று பதிவின் கீழ் பகுதியில் தோன்றுவது தெரியும் இதில் உள்ள "நன்று", "சுமார்", "மோசம்" என்ற சொற்களை தட்டச்சு செய்துள்ளேன். இதில் நீங்கள் விரும்பியவாறு திருத்தி வெளியிடலாம். இதில் நீங்கள பல முறை நன்று என்று வாக்களித்து எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள முடியாது. அல்லது உங்களுக்கு பிடிக்காதவர்கள் பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்க முடியாது. ஏனெனில் ஒரு முறை நீங்கள் வாக்களித்தால் உங்களது ஐ.பி முகவரி அந்த பதிவிற்காக பதிவு செய்யப்படுகிறது . அதே போல ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கும் வாக்களிக்க முடியாது. மீண்டும் மீண்டும் நீங்கள் வாக்களித்தால் எண்ணிக்கை உயரும் ஆனால் அது மீண்டும் பழைய எண்ணிக்கைக்கே வந்து விடும்.

இதில் ஒரு குறை உள்ளது இதனை எல்லா தளத்திலும் இணைக்க இயலவில்லை சில தளங்களில் இணைத்தால் இவ்வசதி தெரியவில்லை. எனவே, முயற்சி செய்துவிட்டு வரவில்லை என கருதவேண்டாம். அவ்வாறு வரவில்லை எனில் வேறு தளத்தில் முயற்சியுங்கள் அப்போதும் வரவில்லையா? கவலை வேண்டாம். இது பிளாகர் டிராப்டில் உள்ள வசதிதான் விரைவில் பிளாகர் தளத்திற்கு வந்து விடும்.

மூன்றாவதாக  இணைப்பு வசதி 
ஏற்கனவே இந்த வசதி அளிக்கப் பட்டிருந்தாலும்  இதில் இணைப்பதில் மிகவும் எளிமையாக உள்ளது ஏற்கனவே இந்த வசதிகளை சிலர் உபயோகித்தும் வருகிறார்கள்.புதியவர்களுக்கு இது மிகவும் பயன்படும் என்று கருதலாம்.