இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

வெள்ளி, 30 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - செலவுப் பட்டியல் - நிதி தாரீர்!

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை குறித்த செலவு பட்டியலைக் கீழே கொடுத்துள்ளோம்.

செலவுப் பட்டியல்:

1. அரங்கம் 1 நாள் வாடகை - ரூ. 7000

2. மதிய உணவு, தேநீர், பிற ரூ.13000

3. விளக்க துண்டறிக்கை ரூ. 400

4. மடல் தாள்கள் ரூ. 400

5. நன்கொடை சீட்டு ரூ. 200

6. தமிழ்க் கணினி மலர் ரூ.15000

7. அழைப்பிதழ் (நிகழ்ச்சி நிரல், நிறைவு விழா) ரூ. 1000

8. சுவரொட்டி ரூ. 1000

9. பதாகைகள் (எண்ணிக்கை: 2) ரூ. 500

10. சிறப்பு அழைப்பாளர் தங்குதல், உணவு ரூ. 1500

11. கணினி (வாடகைக்கு) ரூ. 7500

12. கணினி இணைப்புக்கு ரூ. 1000

13. இணைய இணைப்பு ரூ. 1200

14. குறுந்தகடு (எண்ணிக்கை: 200) ரூ. 1700

15. குறுந்தகடு மேல் அச்சு ரூ.600

16. குறுந்தகடு மேல் உறை _ ரூ. 200

17. கோப்புகள் (எண்ணிக்கை: 150) ரூ 1500

18. கோப்புகள் மீது அச்சு ரூ. 200

19. குறிப்புச் சுவடி (எண்ணிக்கை: 150) ரூ. 1500

20. குறிப்புச் சுவடி மீது அச்சு ரூ. 200

21. எழுதுகோல் (எண்ணிக்கை: 150) ரூ. 750

22. அடையாள அட்டை ரூ. 300

23. பங்கேற்போருக்கு சான்றிதழ் ரூ. 1000

24. அஞ்சல், கூரியர் செலவு ரூ. 500

25. நகல் எடுக்க ரூ. 200

26. பிற ரூ. 1000

மொத்தம் செலவு ரூ. 59,350/-

தமிழ் மொழி ஏற்றம்பெற நடத்தப்படும் இப்பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவு தர வேண்டுகிறோம். கணிசமான தொகை நிதி அளித்து ஆதரவாளர்கள் ஆக வேண்டுகிறோம். பிறர் தங்களால் முடிந்தளவு நிதி அளித்து உதவ வேண்டுகிறோம்.

நிதி அளிக்க தொடர்பு கொள்க:

இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்,

உலாபேசி: + 91 94431 05825 மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

"ஹோப்" நிறுவனத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள தமிழ்க் கணினி - வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறைக்கு உதவும் நோக்கோடு புதுச்சேரியில் செயல்பட்டு வரும் "ஹோப்" நிறுவனம் ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது. பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவளித்து, நன்கொடை அளித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். "ஹோப்" நிறுவனத்திற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதன், 28 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறையில் துணைவேந்தர் பொன்னவைக்கோ பங்கேற்கிறார்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 ஞாயிறன்று நடைபெற உள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்கள் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

திரு பொன்னவைக்கோ அவர்கள் தமிழகத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் என்பதும், இணையத்தில் தமிழ் மொழி உரிய இடம்பெற பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு பொன்னவைக்கோ அவர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொண்டு உரையாற்றுவது அனைவருக்கும் பயனளிக்கும்.

பயிற்சிப் பட்டறையில் கலந்துக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளமைக்கு அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

செவ்வாய், 27 நவம்பர், 2007

“தமிழா” முகுந்த் அவர்களுக்கு நன்றி – புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய இணைய தளம் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை நடத்த திட்டமிடுவதற்கு முன்பாக பதிவு செய்வதற்காகவும், நிர்வகிப்பதற்கும் ஒரு தளம் தேவை என்றும், அதற்கான புதிய தளம் ஒன்றும் தொடங்குவது என திட்ட மிட்டிருந்தோம். ஆனால், பின்னர் அது தேவையில்லை என்று முடிவு செய்தோம். 
 
 அதன்பின் நண்பர் வெங்கடேஷ் புதுச்சேரியில் நடத்தி வரும் தூரிகா இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று ஒரு படிவம் செய்து அனுப்பி இருந்தார், இதனால் அதில் புதிய பதிவர்களை பதிவு செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். 
 
ஆனால், அனைத்து தமிழ்ப் பதிவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், ஊர் வாரியாக பிரிந்து இருக்க வேண்டாம் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இதனால் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தளத்தை பயன்படுத்தலாம் என்று கருதியிருந்தோம். 
 
அது இயலாமல் போனதால் மீண்டும், தூரிகா இணைய தளத்தில் பதிவைத் தொடங்குவது என முடிவு செய்து அதில் பதிவு செய்திருக்கிறோம். இந்நிலையில் திரு முகுந்த் அவர்களை பதிவர் பட்டறையில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தோம். எங்கள் பதிவு "பிளாக்" இல் இருந்ததால் புதிதாக ஒரு இணைய தளம் ஒன்றை பதிவு செய்து தமிழா சிஸ்டம் நிறுவனத்தின் சார்பாக எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு அன்புடன் வழங்கியுள்ளார். 
 
அத்துடன் எங்கள் வலைப்பதிவர் சிறகத்திற்கு குறிப்பேடுகளை தன் செலவில் வழங்கவும் முன்வந்துள்ளார். அவருக்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதன், 21 நவம்பர், 2007

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி - புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வரும் டிசம்பர் 9 அன்று ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடத்த உள்ளதை அறிந்திருப்பீர்கள். கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கணினியில் தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பை இலவசமாக வழங்கி பயிற்சி அளிப்பது எனத் திட்டமிட்டுள்ளோம். 
 
அந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ்மணம் நிர்வாகம் எங்களுக்கு ரூபாய் 10,000/- (ரூபாய் பத்து ஆயிரம்) நன்கொடையாக வழங்கியுள்ளது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. ... என்று திருவள்ளுவர் சொன்னது போல, இது மிகப் பெரிய உதவியாகவும், நாங்கள் கேட்காமலேயே மனமுவந்து அளித்துள்ளமையால் இதனை அதைவிட பெரியதாக நாங்கள் கருதுகிறோம். 
 
தமிழ்மணதிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 
 
 நன்றி
 இரா.சுகுமாரன் 
ஒருங்கிணைப்பாளர் 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

செவ்வாய், 13 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை புதிய பதிவர்கள் கவனத்திற்கு!!

தமிழ்க் கணினி பயிற்சி என்பது முழுமையாக கணினியில் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி அல்ல. கணினியில் அடிப்படை தெரிந்தவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க இயலும். 
 
சிலர் முழுமையான கணிப்பொறி பயிற்சி என்று கருதி இதில் பதிவு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்। ஆனால், இது அத்தகைய பயிற்சி இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்। 
 
பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்களின் தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரியை அவசியம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்।

திங்கள், 12 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினமணி" செய்தி

இன்றைய(12.11.07) தினமணி இதழில் புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி விரிவாக  செய்தி வெளிவந்துள்ளது.

பார்க்க : புதுச்சேரி - 12 2007 00:11

கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் வலைப்பதிவுகள்

புதுச்சேரி, நவ. 11: கணினியில் வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கணினியைத் தமிழில் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகள் மூலம் தமிழ்ப் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த வலைப்பதிவுகளில் எழுதுவதற்கான வசதிகளை பிளாக்கர்.காம், வேர்ட்பிரஸ்.காம் உள்ளிட்ட பல தளங்கள் இலவசமாக வழங்குகின்றன.

யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரில் இலவசமாக வலைப்பதிவுகளை ஆரம்பித்து தங்கள் கருத்துகளை எழுத முடியும். தங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை இதில் விவாதிக்க முடியும். கதை, கவிதை, கட்டுரை, திரைவிமர்சனம் என எழுதலாம்.

உங்கள் வலைப்பதிவுகளில் நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள தமிழ்த் திரட்டிகள் உள்ளன. இவைகள் இலவசமாக வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுக்கின்றன.

இதற்காகத் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், தமிழூற்று உள்ளிட்ட திரட்டிகள் செயல்படுகின்றன. எழுதுபவர்கள் இந்தத் திரட்டிகளில் தங்கள் வலைப்பதிவுகளை இணைத்துக் கொண்டால் ஒரே இடத்தில் உலகில் உள்ள அனைவரும் படிக்க முடியும்.

தமிழ்மணம் திரட்டியில் 2354 பேர் தங்கள் பதிவுகளை இதுவரை இணைத்துள்ளனர். இதில் ஒரு நாளைக்குச் சராசரியாக 143 பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதேபோல் தேன்கூட்டில் 1874 பேர் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளனர். இந்திய மொழிகளில் தமிழில்தான் வலைப்பதிவுகளைத் திரட்டிக் கொடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த வசதி வாய்ப்புகள் இருப்பதால் கணினியில் தமிழ்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இயங்குதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பலருக்குத் தேவை.

புதுச்சேரியில் இந்த வலைப்பதிவுகள் குறித்தும், கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைக் கொண்டு செல்வது, இது தொடர்பான இயங்குதளங்களையும், தமிழ் மென்பொருள்களையும் அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பதிவுகளில் தமிழைப் பயன்படுத்துவது போன்றவற்றைப் பரவலாகக் கொண்டு செல்ல உள்ளது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன்.

இதற்காக இவர்கள் டிசம்பர் 9-ம் தேதி ஒருநாள் பயிற்சிப் பட்டறையை நடத்த உள்ளனர். இதில் புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்கிறார்.


இந்த அமைப்பைத் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணினி நிபுணர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களில் தமிழின் பங்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற பயிற்சி பட்டறைகள் இதற்கு வலு சேர்க்கும்.

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "டெக்கான் கிரானிக்கல்" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினகரன்" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தினமலர்" செய்தி

புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - "தி இந்து" செய்தி

ஞாயிறு, 11 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை கலந்துரையாடல் கூட்டம்

 மு. இளங்கோவன் பதிவிலிருந்து

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை வரும் திசம்பர் 9 இல் புதுச்சேரி சற்குரு உணவகத்தில்  நடைபெற உள்ளதால் அதற்கான கலந்துரையாடல் கூட்டம் இன்று (11.11.2007) புதுச்சேரியில் காலை 10.30 மணியிலிருந்து பகல் இரண்டு மணிவரை நடைபெற்றது.

பட்டறை நிகழ்முறை, பட்டறையில் பேசப்பட உள்ள தலைப்புகள், பயிற்சியளிக்கப்படும் துறை, பயிற்சியளிப்போர், மாலையில் புதுவை முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழா நிகழ்முறை  பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.

சென்னை வலைப்பதிவர் பட்டறையைச்சேர்ந்த தோழர்கள் சிலரை விருந்தினர்களாக அழைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பட்டறையில் சிறப்புமலர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

தொடர்புக்கு:
இராச.சுகுமாரன் :9443105825
மின்னஞ்சல் : rajasugumaran@gmail.com

சனி, 10 நவம்பர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி இந்து நாளிதழில்...

 மு. இளங்கோவன் பதிவிலிருந்து

புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை பற்றி இந்து நாளிதழில்...

புதுச்சேரி தமிழ் வலைப்பதிவர் பட்டறை பற்றிய செய்தியை இன்றைய (10.11.2007) இந்து
நாளிதழில் பின்வருமாறு வெளியிட்டு உதவியுள்ளனர்.

Puducherry

Workshop for bloggers 

Special Correspondent

PUDUCHERRY: A workshop for bloggers would be conducted by the Puducherry Bloggers Wing here on December 9.

According to coordinator of the programme R. Sugumaran, the proposed workshop aims at providing adequate training for using Tamil in computers on a wider basis.

Imparting training in operating systems and software in Tamil, sending e-mail in Tamil and writing in Tamil blogs, with the assistant of required software, would be the components of the programme. For further details, contact 94431-05825.