இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு பெறுகிறது - விடைபெறுகிறேன் - நன்றி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு செய்திகளை ஓரளவுக்கு உடனுக்குடன் அளித்தோம்.
ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
விடைபெறுகிறேன்...
கோ.சுகுமாரன்.

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலைபதிவர்களுக்குப் பாராட்டு.

இரா.சுகுமாரன்... 

கோ.சுகுமாரன்... பேராசிரியர் மு. இளங்கோவன்... க.அருணபாரதி... விழுப்புரம் வலைபதிவர் மன்றத்தினர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பொறுப்பாளர்களுக்கு நூல் அளித்துப் பாராட்டினர். சிறகத்தைச் சேர்ந்த இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேராசிரியர் மு.இளங்கோவன், க.அருணபாரதி மற்றும் கடலூர் சீனுவாசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கின் நிறைவு விழா.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் நிறைவு விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் தமிழநம்பி, இரவிகார்த்திகேயன், எழில்.இளங்கோ உள்ளிட்டோர், பி.எஸ்.என்.எல்., துணைப் பொதுச் செயலாளர் கே.இரவீந்தரன், கோட்டப் பொறியாளர் கி.இராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசுக் கல்லூரி பேராசிரியர் குமரன் ஆகியோர் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினர்.
 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைபாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
பயிலரங்கில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் பயிலரங்கில் கலந்துக் கொண்ட சென்னை வலைப் பதிவர்களுக்குப் பாராட்டு...

விக்கிக்கு பாராட்டு செய்யும் பேராசிரியர் குமரன்... வினையூக்கிக்கு பாராட்டு செய்யும் விழுப்புரம் அரசுக் கல்லூரி கணிப் பொறி ஆசிரியர் குமார்... பாலபாரதிக்கு பாராட்டு செய்யும் பன்னீர்செல்வம்... மா.சிவக்குமாருக்கு பாராட்டு செய்யும் தயா.இளந்திரையன்...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கிற்கு "தமிழ்மணம்" ஆதரவு - நன்றி.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கத்திற்கு தமிழின் முதலாவது திரட்டி "தமிழ்மணம்" ஆதரவளித்துள்ளது. அவர்களுக்கு எங்களுடைய நன்றிகள்.
புதுச்சேரியில் நடந்த "தமிழ்க் கணினி" வலைபதிவர் பயிற்சிப் பட்டறைக்கு தமிழ்மணம் நிதி அளித்து ஆதரவளித்தை இங்கு நன்றியோடு குறிப்பிட விரும்புகிறோம்.

விழுப்புரம் பயிலரங்கில் "தமிழ் மென்பொருள்" அறிமுகம் - விளக்கம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "தமிழ் மென்பொருள்" குறித்து, க.அருணபாரதி, இரா.சுகுமாரன் ஆகியோர் விளக்கி பயிற்சி அளிக்கின்றனர். இந்த மென்பொருள்களை மென்பொருள் பொறிஞர் க.அருணபாரதி உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் அடங்கிய குறுந்தகடு பயிற்சிப் பயிலரங்கில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இலவயமாக வழங்கப்படுகிறது.

விழுப்புரம் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' அறிமுகம்...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் 'இணைய உலாவிகள்' பற்றி பாலபாரதி விளக்கம் அளித்தார். குறிப்பாக 'பயர்பாக்ஸ்' பற்றி விரிவாக பயிற்சி அளித்தார். மேலும், அதில் உள்ள பாதுகாப்பு, வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், பல இணைய உலாவிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

விழுப்புரம் பயிலரங்கில் "தமிழில் இயங்குதளங்கள்"...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கில் "இயங்குதளங்கள்" பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இயங்குதளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது தவறானது, தமிழிலும் இயங்குதளங்கள் உள்ளது பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தற்போது "மைக்கிரோசாப்ட்" நிறுவனம் தமிழில் பல்வேறு சேவைகளைத் தருகிறது. இது பற்றி செய்முறை விளக்கம் அளிக்கிறார் இரா.சுகுமாரன். மேலும், மா.சிவக்குமார் தமிழில் இயங்குதளம் செயல்பாடு பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் "கூகுள்" சேவைகள் பற்றி...

விழுப்புரம் பயிலரங்கில் தற்போது கடலூர் சீனுவாசன் "கூகுள் ரீடர்" பற்றியும், அதன் பயன் பற்றியும் விரிவாக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். மேலும், இரா.சுகுமாரன் "கூகுள்" தேடல் ஆங்கிலத்திலும், தமிழிலும் தட்டச்சு செய்து தேடலாம் என்பது குறித்து பயிற்சி அளித்தார். மேலும், "கூகுள்" பல்வேறு சேவைகள் பற்றியும் விளக்க அளிக்கப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்படும் என்று எண்ணுகிறேன்.

விழுப்புரம் பயிலரங்கில் பதிவுகளைத் 'திரட்டி'களில் இணைப்பது பற்றி...

பாலபாரதி...
விக்கி...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் தற்போது பதிவுகளைத் திரட்டியில் இணைப்பது குறித்து விக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இரா.சுகுமாரன் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவு, திரட்டி, தமிழ்வெளி போன்ற திடடிகளில் வலைப்பதிவுகளை இணைப்பது பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இடையே, பாலபாரதி திரட்டிகளின் கருவிப்பட்டைகளை இணைப்பது பற்றி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம் பயிலரங்கில் குறிச்சொல் பற்றியும் அதன் பயன்பாடு குறித்து பயிற்சி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் இரா.சுகுமாரன் பதிவுகளில் குறிச்சொல் இடுவது, அதனுடைய பயன் பற்றியும் பயிற்சியளித்தார்.
மேலும் குறிச்சொல் என்ன என்பது குறித்து பல்வேறு வலைத் தளங்களைக் காண்பித்து விளக்கினார்.
இரா.சுகுமாரன் - புதுச்சேரி வலைபதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது..

 

பயிற்சி அளிப்பவர்களுக்கு உதவியாக ஒளிப்படம் காட்டும் அருணபாரதி. படங்கள், வீடியோ இணைப்பது குறித்து வினையூக்கி.

திரையில் வீடியோ இணைப்பது... 
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகும் சோர்வில்லாமல்...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கம் மதிய உணவுக்குப் பிறகு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
 
புகைப்படம், வீடியோ படம் இணப்பது குறித்து வினையூக்கி, அருணபாரதி ஆகியோர் பயிற்சி அளித்துக் கொண்ர்டிருக்கின்றனர். 
 
பங்கேற்பாளர்கள் பலர் ஆர்வத்துடன் தங்களுக்கான சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்கின்றனர்.
 
மேலும், வலைப்பதிவைப் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களை எப்படி அனுப்புவார்கள், அவர்களுடைய கருத்துக்களை எப்படி வெளியிடுவது குறித்தும் பயிற்சி அளிக்கிறார்கள்.

அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களுக்கு புதிய வலைப்பதிவு தொடங்கப்பட்டது.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் கலந்துக் கொண்ட அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களுக்கு புதியதாக ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டது. "கலைஞர்" என்ற பெயரில் புதிய வலைபதிவு தொடங்கப்பட்டது. அனைவரும் அப்போது கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
வலைப்பதிவு முகவரி: www.ponmudi2008.blogspot.com.

தமிழர்களை ஒருங்கிணைக்க கணினியில் தமிழ் முயற்சி பயன்படும் - அமைச்சர் திரு.க.பொன்முடி உரை.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
 
தமிழில் இதுபோன்ற கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்கள். 
 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய பன்னாட்டு அறிஞர்களை அழைத்து சென்னையிலேயே மாநாடு நடத்தினார்கள். இதுபற்றி அவர் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். 
 
கணினியில் தமிழ்ப் பயன்பாடு வந்திருந்தாலும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை. நாம் ஒருவரை ஒருவர் சந்தித்தால் தமிழில் பேசாதது தான் காரணம். ஆங்கிலத்தில் பேசும் பிற மொழி மோகம் நமக்கு இருக்கிறது. அதை நாகரீகம் எனக் கருதுகிறோம். 
 
கணினிப் பயின்று வெளிநாட்டில் நமது இளைஞர்கள் பணியற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கிறவர்கள் தமிழைப் பயன்படுத்த முடியாது. சீனாவில் சீன மொழிதான். கணினி மொழிக்கு அப்பாற்பட்டு வளர்ந்துக் கொண்டிருக்கிற சாதனம். பல்வேறு சமூக மக்களை இணைக்கிற சாதனம். 
 
கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறைந்தபட்சம் தமிழர்களை இணைக்கவாவது பயன்படும். இந்த முயற்சி தொடர வேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த முயற்சியைக் கொண்டு சென்றால் தமிழ் வளரும். குறிப்பாக கல்லூரி பேராசிரியர்கள் இதற்கு உரிய முயற்சி எடுக்க வேண்டும். 
 
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் முதுகலை - தகவல் தொழில்நுட்பப் பாடப் பிரிவு தொடங்க உள்ளோம். அதில் இந்த முயற்சியைத் தொடர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் அமைச்சர் திரு. க.பொன்முடி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் வந்துவிட்டார்கள். அவருடன் நகரமன்ற தலைவர் திரு.ஜனகராஜ் ஆகியோருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும், ஆர்வலர்களும் திரண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற பொறுப்பாளர்கள் திரு.தமிழநம்பி, திரு.ரவிகார்த்திகேயன் ஆகியோர் கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கிறர்கள். விழுப்புரம் அரசுக் கல்லூரி முதல்வர் திரு பாவா மொய்தீன் தற்போது உரையற்றினார்.
இறுதியில் அமைச்சர் திரு. க.பொன்முடி உரையாற்றினார்.

விழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் பலகைகள் குறித்து...

பயிற்சி அளிக்கிறார் பேராசிரியர் மு.இளங்கோவன்...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் பயிலரங்கில் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள். 
 
தற்போது பேராசிரியர் மு.இளங்கோவன் தமிழ் எழுத்துகள் குறித்துப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழ் 99 விசைப் பலகைப் பற்றி விரிவாக பேசிக் கொண்டிருக்கிறார். பங்கேற்பாளர்கள் பலர் தங்கள் அய்யங்களைக் கேட்டு அறிகின்றனர்.
 
இடையே, இரா.சுகுமாரன், மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மேலும் பல கருத்துக்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். 
 
மேலும், புதியதாக வாங்கிய கணினியில்கூட தமிழ் எழுத்து கட்டம் கட்டமாக தெரிவதாக பலர் குறிப்பிட்டனர், இது குறித்து செய்முறை விளக்கம் அளித்துக்
கொண்டிருக்கின்றனர்.

விழுப்புரம் பயிலரங்கில் புதிய வலைப்பதிவுகள் தொடக்கம்...படங்கள்...

புதிய வலை: தமிழருவி உடனுக்குடன் பதிவிடும் கோ.சுகுமாரன்..
ஆர்வத்துடன் வலைபதிவு தொடங்கும் மாணவிகள்...
வலைப்பதிவு தொடங்க பயிற்சி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு தொடங்கியது...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்றுக் கொண்டு இருக்கிறது. காலையில் இரா.சுகுமாரன் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். பின்னர் பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார். தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் திரு. க.பொன்முடி வர சிறிது நேராமாகும் என்பதால், பயிலரங்கு தொடங்கியது. 
 
சென்னை பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல் கணக்கு தொடங்குவது குறித்து வகுப்பு எடுத்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் மின்னஞ்சல் கணக்கு தொடங்கும் பணியில் மூழ்கியுள்ளனர் பயிற்சிப் பயிலரங்கிற்கு வந்திதிருந்தோர்.

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடங்க உள்ளது...

விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு இன்னும்சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பயிற்சியாளர்கள், பயிற்சி பெறுபவர்கள் விழா அரங்கில் கூடியுள்ளனர். தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி அவர்கள் பயிலரங்கைத் தொடங்கி வைக்க உள்ளார்கள்...

சனி, 10 மே, 2008

ஆரவாரமில்லாமல் மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் பயிற்சிப் பயிலரங்கு

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது. 
 
 அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது. காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் 
 
காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார். சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். 
 
இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர், 
 
அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது. நிகழ்ச்சி கீழே உள்ளவாறு நடக்க உள்ளது. வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும். 
 
தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008. 
 
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம் 
 
நாள் 11 மே 2008 
 
நிகழ்ச்சி நிரல் 
 
காலை 08.50 - 9.00        பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்) 
 
காலை 09.00 - 9.30        நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்) 
 
காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி ஏகலப்பை (15 நிமிடம்) 
குறள் (5 நிமிடம்) இளங்கோ (5 நிமிடம்) 
கேள்வி பதில் (10 நிமிடம்) 
 
காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது பேராசிரியர் மு.இளங்கோவன் தமிழ் 99 (15 நிமிடம்) 
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்) 
கேள்வி பதில் (10 நிமிடம்) 
 
பகல் 10.30-11.30      வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்   
 மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)
வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)
வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)
வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)
மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)
கேள்வி பதில் (5 நிமிடம்)
 
காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)
 
பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி
(WORD PRESS) (10 நிமிடம்)
வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
 
பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்
காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்) 
 
ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி
கேள்வி பதில் (5 நிமிடம்)
பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்
கேள்வி பதில் (10 நிமிடம்)
இணைய இதழ்களில் எழுதுவது
 
பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)
 
பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)
 
பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்
விண்டோஸ் (10 நிமிடம்)
லினக்ஸ் (10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
 
பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்
ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)
எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)
தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)
தமிழில் அரட்டை (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்) 
 
பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி
அதியன் இணைப்பு (10 நிமிடம்)
பத்மா இணைப்பு(10 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)
 
பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)
 
மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்
விக்கிப்பீடியா (10 நிமிடம்)
மதுரைத்திட்டம் (5 நிமிடம்)
யாழ் நூலகம் (5 நிமிடம்)
பிற தளங்கள் (5 நிமிடம்)
கேள்வி பதில் (5 நிமிடம்)
 
மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்
 
மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது
 - தூரிகா வெங்கடேஷ் (10 நிமிடம்)
 
மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு
word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி
 
மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு 
*************************************************  
 
வலைப்பதிவர்களுக்கான பயனுள்ள தளம் தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://tamilblogging.blogspot.com/
வலைப்பதிவு பயிற்சி : தமிழ் வலைப்பதிவர்கள்: http://www.tamilbloggers.org/ (தமிழ்நாடு-புதுச்சேரி)
பயிற்சி ஒருங்கிணைப்பு புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/
நிகழ்ச்சி ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்
******************************************** 
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/
தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -
புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு

தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php
வலைப்பதிவு திரட்டிகள்தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html                    தேன்கூடு http://www.thenkoodu.com/   
தமிழ்வெளி http://www.tamilveli.com/  திரட்டி http://www.thiratti.com/   
மாற்று http://www.maatru.net/  கில்லி http://gilli.in/

திங்கள், 5 மே, 2008

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு மே 11 ஞாயிறன்று நடக்கவிருக்கிறது.

விழுப்புரத்தில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பங்களிப்புடன் வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு ஒன்று நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தை சேர்ந்த திரு .தமிழ் நம்பி அவர்கள் என்னை தொடர்பு கொண்டார். 
 
ஏற்கனவே, புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தில் அத்தகைய பயிற்சி பயிலரங்கு நடத்த வேண்டும் கருதி இருந்தோம். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த பணியை தொடர இயலவில்லை. 
 
அது பின்னர் நடத்துவது என தீர்மானித்துள்ளோம். ஆனால், விழுப்புரத்தில் வரும் மேமாதம் 11 தேதி ஞாயிறன்று வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு நடத்தித் தரும்படி கேட்டிருக்கிறார்கள். காலம் மிகமிகக்குறைவாக உள்ளது. எனினும் உடனடியாக நடத்தவேண்டும் என்பதில் விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தினர் முனைப்பாக இருக்கிறார்கள். இந்த தேதி தீர்மானிக்கப்பட்டதற்கு இடம் ஒரு முக்கிய காரணமாகும். 
 
அதாவது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வந்தால் விண்ணப்பம் வழங்குவது, சேர்க்கை போன்ற பிரச்சனையில் கல்லூரியில் முனைப்பாக இருக்கும் என்பதால் அதற்கு முன்பே நடத்திவிடுங்கள் என கல்லூரி பேராசிரியர் கேட்டுக் கொண்டபடியால் இந்த தேதியை அவசரமாக முடிவு செய்ய வேண்டியதாயிற்று. ஞாயிறு தானே கல்லூரி இயங்கும் நாளில் பயிற்சி பயிலரங்கு நடத்தவில்லை என்றாலும் உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் முனனப்பாக இருப்பதால் நாமும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
 
விழுப்புரம் அரசு கல்லூரியில் ஏற்கனவே சுமார் 32 கணினி வசதியுடன் இணைய இணைப்புடன் உள்ளது. எனினும் வேகம் குறைவாக இருக்கும் என்பதால் அகலக்கற்றை இணைப்பு தற்காலிகமாக ஒருமாதம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலம் குறைவு என்பதால் அதற்கு ஏற்றார் போல திட்டமிடுவது என முடிவு செய்யப்பட்டது. 
 
ஏற்கனவே இதில் பங்கு பெற சுமார் 50 பேர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது எனினும் விருப்பம் உள்ளவர்கள் thamizhanambi44@gmail.com அல்லது திரு தமிழ்நம்பி அவர்களை +91 9443440401 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்டம் வலைப்பதிவர் மன்றத்தை சேர்ந்தவர்கள் செய்தாலும் அவற்றை நடத்தி தரும்படி வலைப்பதிவர் நண்பர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
எனவே வலைப்பதிவு அன்பர்கள் இப்பயிற்சிப் பயிலரங்கு சிறப்பாக நடத்திதர ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் பயிற்சி அளிக்க சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து நண்பர்கள் வருவார்கள் எனினும் வலைப்பதிவில் நல்ல அனுபவம் உள்ள நண்பர்கள் யாரேனும் வருவதாக இருந்தாலும் அவர்களையும் பயிற்சி அளிக்க இணைத்துக் கொள்ளலாம் என கருதுகிறோம். 
 
எனவே பயிற்சி அளிக்க விரும்பும் நண்பர்கள் இது தொடர்பாக தகவல் அளிக்க வேண்டிய மின்னஞ்சல் rajasugumaran@gmail.com அல்லது இரா.சுகுமாரன் 9443105825 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
 
அன்புடன் இரா.சுகுமாரன்