slide

Slide 1
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
Slide 2
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் - தமிழ்மணம்
Slide 4
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
Slide 6
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
Slide 7
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி

திங்கள், 10 மே, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு மே, 16

நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை 
பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர், 
  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
  3. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா,  (ஒலி/ஒளிப்பதிவு உரை)
  4. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
  5. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
  6. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
  7. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
  8. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
  9. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
  10. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
  11. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
  12. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
  13. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
  14. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
  15. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
  16. திரு.விருபா. குமரேசன் சென்னை
  17. திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,
அனைவரையும் வருக என வரவேற்கும்,

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு 16, மே 2010,

தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் என புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கருதுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து  மாநாடு ஒன்றை நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே மே மாத தொடக்கத்தில் நடத்துவது என திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொருத்தமான இடம் கிடைக்காமல் போனதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  வரும் மே மாதம் 16 ஆம் நாள் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடத்தலாம் என கருதியுள்ளோம்.

இந்த நிகழ்வில் இதுவரை கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இசைவளித்துள்ளனர்.
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,
  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை,
  3. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (இணைய வழி உரை/ தொலைபேசி உரை)
  4. திரு.மணி.மு.மணிவண்ணன்,  சென்னை
  5. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி
  6. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருத்துக்களை ஒலி/ஒளி வடிவத்தில் பதிவு செய்ய இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

இந்த நிகழ்வில்  மேலும் சில தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள், மொழி அறிஞர்கள், நேரில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க இருக்கிறார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
தொடர்பு எண்: +91 94431 05825

4. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை
5. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)

தமிழ்மணம்
1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு

நாக.இளங்கோவன் அவர்களின்
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1
2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2
3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3
4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4
5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5
6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6
7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7
8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8
9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-9
10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12
11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12
12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12
திரு. செல்வா - தமிழ்வெளி
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

திங்கள், 25 ஜனவரி, 2010

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் கருத்தரங்கம் - நிறைவுற்றது

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும்" தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் நா.இளங்கோ தலைமை தாங்கினார்.


நிகழ்ச்சி தொடக்கத்தில் சீத்தா பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


இரா.சுகுமாரன்  வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறகம் அமைப்பின் நோக்கம் பற்றியும் அதன் வளர்ச்சிகள் பற்றி எடுத்துரைத்தார்.


கோ.சுகுமாரன் “தமிழில் வலைப்பதிவுகள்” தொடங்குவது பற்றி கருத்துரையாற்றினார். வலைப்பதிவு உருவாக்குதலைப் பற்றியும் தமிழ் வலைப்பதிவு திரட்டியான “தமிழ்மணம்”, “தமிழ்வெளி”, “திரட்டி” உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தால் மட்டுமே உங்கள் பதிவை அதிகமானோர் படிப்பர் என்பதையும் விளக்கினார்.
 
இரா.மோகனகிருஷ்ணன்
“தமிழில் எழுத்துருக்கள் வகைகள் பற்றி கருத்துரையாற்றுகிறார் தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தார்.

க.அருணபாரதி 
தமிழில் மென்பொருட்கள் தமிழில் மென்பொருட்கள் பற்றியும், விண்டோசு விஸ்டாவில் தமிழ், ஆபீஸ் 2007 இல் தமிழ் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ஆகியவற்றில் தமிழில் கருவிப் பட்டைகள் உள்ளதையும் தமிழர்களாகிய நாம் தமிழிலேயே இந்த மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அருணபாரதி தான் உருவாக்கிய தமிழில் தட்டச்சு செய்வதற்கான மென்பொருளை நிறுவி தமிழ் தட்டச்சு செய்து காண்பித்தார். விஸ்டா, விண்டோசு 7 ஆகியவற்றில் தட்டச்சு செய்து காண்பித்தார். முதலில் தமிழ்-99 விசைப் பலகையில் இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. சோதனையில் இருப்பதால் தேவையானோர் வாங்கி சோதித்து அறியலாம். பலர் இயக்கம் பற்றி திருப்தி தெரிவித்த பின்னர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளோம்.

இந்த மென்பொருளின் உள்ளே என்ன "கோடிங்" பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும். அல்லது தேவையானோருக்கு அளிக்கப்படும். இதில் தாங்கள் விரும்பியவாறு விசைப் பலகையை அவர் மாற்றி கொள்ளும் வகையிலும் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். என அருண பாரதி தெரிவித்தார்.

எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார் தமிழில் இயங்கு தளங்கள் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கினர். நித்தியகுமார் உபுண்டு இயங்குதளத்தை கணினியில் நிறுவி அதில் தமிழ் பயன்பாடு பற்றி பேசினார்.

சீனுவாசன் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து கவனமாக இருக்க வேண்டிய விசயங்கள் பற்றியும் தெரிவித்தார்.

இதில் விழுப்புரம், கடலூர், விருத்தாசலம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ நம்பி வலைப்பதிவர் பட்டறை நடத்தப்பட்டதால் பயன் பெற்றோர்களைப் பற்றியும் தங்கள் பகுதியின் வலைப்பதிவர்கள்  பற்றியும் எடுத்துரைத்தார்.


வருகை தந்த அனைவருக்கும் தமிழ்மணம் ஏற்பாடு செய்து அளித்த துண்டறிக்கையும், தமிழ்மணம் பெயர் பதித்த எழுதுகோலும் வழங்கப்பட்டது,

 நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர்

புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் -புதுச்சேரியில் கருத்தரங்கம்

தமிழ்க் கணினியும் இணையப் பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வரும் 23-01-2010 அன்று மாலை 5.30 மணி அளவில் புதுச்சேரி வணிக அவையில் நடைபெற உள்ளது.

புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கும் முயற்சியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வகையான தகவல்களை அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.



கோ.சுகுமாரன் 
"தமிழில் வலைப்பதிவுகள்" என்ற தலைப்பில் கருத்துரையாற்றுகிறார்.

வலைப்பதிவு உருவாக்குதலை செயல் விளக்கமாக செய்து காண்பிப்பது,
தமிழ் வலைப்பதிவு திரட்டியான "தமிழ்மணம்", "தமிழ்வெளி", "திரட்டி" உள்ளிட்ட தமிழ் வலைப்பதிவு திரட்டிகளைப் பற்றியும் அவை தமிழ் வலைப்பதிவர்களுக்கு பயன்படும் விதம் பற்றியும் விளக்கப்படும்.

இரா.மோகனகிருஷ்ணன்
"தமிழில் எழுத்துருக்கள் அதன் பயன்பாடுகள்" கருத்துரையாற்றுகிறார்

தமிழில் எழுத்துருக்கள் பற்றியும், பல்வேறு வகைப்பட்ட வகைகள் பற்றியும் (யுனிகோடு, தாம், தாப் உள்ளிட்டவை) பற்றியும் தமிழ் விசைப்பலகை தமிழ் 99 பற்றியும் பொனடிக் எழுத்துக்கள் பயன்படுத்துவதில் உள்ள குறைகள் உள்ளிட்டவைகளை எடுத்துரைப்பார்.

க.அருணபாரதி
தமிழில் மென்பொருட்கள்


தமிழில் மென்பொருட்கள் பற்றியும், குறிப்பாக தமிழ் தட்டச்சு செய்வதற்கான மென் பொருட்கள் பற்றிய தகவல்கள் அளிப்பார்.
அவர் புதிதாக உருவாக்கிய தமிழ் தட்டச்சு செயலியை சோதனை செய்து விளக்குவார். ஏ-கலப்பை, என்.எச்.எம் எழுதி, குறள் மென்பொருள், உள்ளிட்ட மென்பொருட்களை பயன்படுத்தி தமிழ் உள்ளீடு செய்வது தொடர்பாக விளக்கமளிப்பார்.


எ.சீனுவாசன் மற்றும் நித்தியக்குமார்
தமிழில் இயங்கு தளங்கள்

விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா, உபுண்டு உள்ளிட்டவைகளை தமிழில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்குவார்கள். மைக்ரோசாப்ட் 2003, 2007,  ஓப்பன் ஆபிஸ் ஆகியவற்றில் தமிழை உபயோகிப்பதற்கான வழிமுறைகள் கருவிப்பட்டைகள் ஆகியவற்றை தமிழில் வைத்துக்கொள்வது பற்றிய விளக்கம் ஆகியவை விளக்கப்படும்.


மேலும் பல்வேறு தகவல்களை இன்னும் பலர் வழங்க உள்ளனர் அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.

இந்த நிகச்சிக்கு

தலைமை :  பேராசிரியர் நா.இளங்கோ
வரவேற்பு : சீத்தா பிரபாகரன்
முன்னிலை: மகரந்தன், தமிழநம்பி,இராசராசன், வெங்கடேஷ்
தொடக்கவுரை: இரா.சுகுமாரன்
நன்றி: ம.இளங்கோ

அனைவரும் வருக.


மேலும் விவரங்களுக்கு :
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
+91 9443105825
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com
வலைதளம்: புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007-இல் தமிழில் பிழைத்திருத்தும் வசதி


மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007-இல் தமிழில் பிழைத்திருத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிய பெற வேண்டுமானால் Microsoft தகலவலிறக்க மையம் சென்று அங்குள்ள Update for Microsoft Office Word 2007 (KB974561) - தமிழ் - மேம்பாட்டிற்கான மென்பொருளை தகவலிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும். மேலே உள்ள இணைப்பின் வழியாக சென்றால் அதற்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்யாலாம். பதிவிறக்கம் செய்து நிறுவினால் இந்த வசதிய பெற இயலும்.




இந்த பிழைத்திருத்தி முழுமையானதாக இல்லை, இதனை முழு அளவில் அல்லது பகுதியளவில் கூட பயன்படுத்த இயலாது எனினும் முதற்கட்டமாக அதற்கான முயற்சிகளை மேற் கொள்ளப்பட்டுள்ளது. என்பது மகிழ்ச்சியான விசயம்.


மைக்ரோசாப்ட் நிறுவனம் தமிழில் பிழைத்திருத்தம் செய்வதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளது இதன் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். இது தொடக்கம் என்றாலும் காலப்போக்கில் இது விரிவடைந்து முழுமையான ஒரு வடிவமாக நமக்கு கிடைக்கும் என நம்பலாம். இப்போது இருக்கும் வசதியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

திங்கள், 5 அக்டோபர், 2009

புதுச்சேரியில் மீண்டும் வலைப்பதிவர் பயிலரங்கு

புதுச்சேரியில் மீண்டும் வலைப்பதிவர் பயிலரங்கு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று 04-10-2009 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, சாகித்திய அகாதமி உறுப்பினர் மகரந்தன், க.அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ், கு.இராம்மூர்த்தி ஓவியர் இராசராசன், சீத்தா.பிரபாகரன், ஆனந்தக்குமார், வீர.மோகன்.
தமிழநம்பி. இரா.செயப்பிரகாசு, இரா.முருகப்பன், ஏ.சீனுவாசன் (கடலூர்), முருகதாசு, ந.இரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் ஆண்டு சனவரி 10, 2010 ஞாயிறன்று நடத்துவது என திட்ட மிடப்பட்டுள்ளது. வழக்கமாக வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை என்று அழைக்கப்பட்ட இப்பயிலரங்கு BLOGGERS WORKSHOP என்ற வார்த்தையை நேரடியாக ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இது தவறானதாகும் என்று சென்றமுறை புதுச்சேரி பயிலரங்கில் கலந்து கொண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ சுட்டிக்காட்டி இருந்தார். எனவே அதன் அடிப்படையில் பயிற்சிப்பட்டறை என்று குறிப்பிடாமல் இனிமேல் “பயிலரங்கு” என்று அழைப்பது என முடிவு செய்துள்ளோம்.

இந்த கூட்டத்தில் சென்ற முறை வழங்கியது போல ஒரு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு இலவசமாக கொடுப்பது, மலர் வெளியிடுவது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலர்க் குழு உறுப்பினர்கள்: பேராசிரியர் நா.இளங்கோ, மகரந்தன், இரா.சுகுமாரன்

குறுந்தகடு வெளியிடல்: க.அருணபாரதி, திரட்டி வெங்கடேஷ் ஆகியோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவர்கள் தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

புதுச்சேரியில்தமிழ் தயார் திட்டம் செயல்படுத்த - 28-09-2008 ஞாயிறு அன்று ஆலோசனைக் கூட்டம்

அனைவருக்கும் வணக்கம், புதுச்சேரியில் தமிழ் தயார் திட்டம் ஏற்கனவே தொடங்குவதாக திட்டமிட்டிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் இதுவரை அதற்கான பணி எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே அத்திட்டத்தை நடைமுறை செய்வது குறித்து விவாதிக்கலாம் என கருதியுள்ளோம். வரும் 28-09-2008 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு புதுச்சேரி 100 அடி சாலை நடேச நகரில் (இந்திரா காந்தி சிலை அருகில் உள்ளது) இதற்கான ஆலோசனக்கூட்டம் நடைபெற உள்ளது. இது ஒரு பதிவர் சந்திப்பாகவும் நடைபெறும், இதில் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன். கலந்து கொள்ள rajasugumaran@gmail.com அல்லது 94431 05825 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் தயார் திட்டம் என்பது " தற்போது கணினியில் தமிழ் பயன்படுத்துவதற்கான வசதிகள் அதிகமாக இருந்தாலும் அதன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இணையம் பயன்படுத்த இணைய மையங்களுக்கு வருபவர்களுக்கு உடனடியாக இந்த வசதிகள் சென்று சேர இணைய மையங்களில் தமிழ் வசதிகளை நிறுவி அந்த மையத்தில் உள்ளவர்களுக்கு இது தொடர்பான தகவல்களை அளித்து தமிழ் மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு ஒன்றும் இலவசமாக அளித்து தமிழை இணைய மையங்களில் பயன்படுத்த தயார் செய்வதையே " தமிழ் தயார்" திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கோவையில் செயல்படுத்தப்பட்டுள்ளதால் இத்திட்டத்தை ஏற்கனவே கோவையில் செயல்படுத்திய "ஓசை செல்லா" இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். http://osaichella.blogspot.com/2007/12/1000.html இது குறித்து ஓசை செல்லா ஏற்கனவே இட்ட பதிவின் காணவும். அன்புடன் இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

திங்கள், 1 செப்டம்பர், 2008

பிளாகரில் புதிய வசதிகள்

பிளாகர் தளத்தில் புதிய பல வசதிகள் செய்யப் பட உள்ளன, கீழே இணைத்துள்ள படத்தை பார்க்கவும். உங்கள் வலைத்தளத்தில் Add a gadget என்பதை கிளிக் செய்தால் பகுதிய கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்று உங்களுக்கு காட்சி தரும் இதில் BLOG LIST (NEW) என்பதில் உள்ள + குறியீட்டை கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த வசதி அளிக்கப்படும். ஏற்கனவே ( RSS) இந்த வசதி அளிக்கப்பட்டிருந்தாலும்  இது புதிய மேம்பட்ட  வசதியாகும்.

படம் -1
படம் -2

பதிவு எழுதியுள்ள இந்த தளத்தில் அந்த வசதி அளிக்கப்படவில்லை  "பிளாகர் தளம் தமிழில் வந்துவிட்டது" செய்தியை கிளிக் செய்து பார்த்தால் வலது பக்கத்தில் படிக்க சில வலைத்தளங்கள் என்ற தலைப்பிலான செய்திகளை பார்க்கவும். அதில் உள்ளவாறு நீங்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் அடிக்கடி படிக்க விரும்பும் வலைத்தளங்களை உங்கள் தளத்தில் இணைக்கலாம் ஏற்கனவே பெயர்களை மட்டுமே அல்லது தளத்தின் இணைப்பு மட்டுமே இணைக்க வசதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வலைத்தளத்தை இணைப்பதோடு அல்லாமல் அந்த வலைத்தளத்தில் கடைசியாக எப்போது செய்தி வெளியிடப்பட்டது என்ற தகவல்களை நாம் பார்த்துக்கொள்ள முடியும். அதோடு செய்தியின் முதல் சில வரிகளை படிக்க முடியும். இவ்வசதி வரைவு  பிளாகர்   அல்லாது நடைமுறையில் உள்ள தளத்திலேயே  பெற இயலும்.


கருத்து சொல்ல புதிய வழி
உங்கள் தளத்தில் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் குறிப்பிட்டபதிவு பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்ய தற்போது ஒரு வசதியை பிளாகர் தளம் வழங்க உள்ளது . இந்த வசதியை நீங்கள் பெறவேண்டுமானால் நீங்கள் உங்கள் தளத்தில் உள்ள LAYOUT  சென்று BLOG POST க்கு செல்ல வேண்டும். அங்குள்ள EDIT  க்கு சென்று இவ்வசதியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

***** ஸ்டார் ரேட்டிங் என்று படத்தில் உள்ளவாறு மதிப்பீடு வழங்க இயலும், கீழே "எதிர்வினைகள்" என்று பதிவின் கீழ் பகுதியில் தோன்றுவது தெரியும் இதில் உள்ள "நன்று", "சுமார்", "மோசம்" என்ற சொற்களை தட்டச்சு செய்துள்ளேன். இதில் நீங்கள் விரும்பியவாறு திருத்தி வெளியிடலாம். இதில் நீங்கள பல முறை நன்று என்று வாக்களித்து எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ள முடியாது. அல்லது உங்களுக்கு பிடிக்காதவர்கள் பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்க முடியாது. ஏனெனில் ஒரு முறை நீங்கள் வாக்களித்தால் உங்களது ஐ.பி முகவரி அந்த பதிவிற்காக பதிவு செய்யப்படுகிறது . அதே போல ஒன்றுக்கு மேற்பட்ட முறை உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கும் வாக்களிக்க முடியாது. மீண்டும் மீண்டும் நீங்கள் வாக்களித்தால் எண்ணிக்கை உயரும் ஆனால் அது மீண்டும் பழைய எண்ணிக்கைக்கே வந்து விடும்.

இதில் ஒரு குறை உள்ளது இதனை எல்லா தளத்திலும் இணைக்க இயலவில்லை சில தளங்களில் இணைத்தால் இவ்வசதி தெரியவில்லை. எனவே, முயற்சி செய்துவிட்டு வரவில்லை என கருதவேண்டாம். அவ்வாறு வரவில்லை எனில் வேறு தளத்தில் முயற்சியுங்கள் அப்போதும் வரவில்லையா? கவலை வேண்டாம். இது பிளாகர் டிராப்டில் உள்ள வசதிதான் விரைவில் பிளாகர் தளத்திற்கு வந்து விடும்.

மூன்றாவதாக  இணைப்பு வசதி 
ஏற்கனவே இந்த வசதி அளிக்கப் பட்டிருந்தாலும்  இதில் இணைப்பதில் மிகவும் எளிமையாக உள்ளது ஏற்கனவே இந்த வசதிகளை சிலர் உபயோகித்தும் வருகிறார்கள்.புதியவர்களுக்கு இது மிகவும் பயன்படும் என்று கருதலாம்.