இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

செவ்வாய், 18 மே, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு - தீர்மானங்கள்!

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் 16.05.2010 அன்று புதுச்சேரி வணிக அவையில் ஒரு நாள் நடந்த தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) தமிழக அரசு சார்பில் வரும் சூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்து மாற்றம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த எழுத்து மாற்ற அறிவிப்பு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழக அரசு தன்னிச்சையாகவும், தமிழ் மொழியை சிதைக்கும் வகையிலும் தமிழ் எழுத்து மாற்றம் கொண்டு வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது. தமிழ் எழுத்து வடிவ மாற்ற முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

2)   தமிழ் எழுத்து வடிவ மாற்றத்தைக் கைவிட தமிழக அரசை வலியுறுத்திட வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், கணினி வல்லுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

3) தமிழக அரசு இதுபோன்ற தேவையற்ற, தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து தமிழே ஆட்சி மொழி, தமிழே கல்வி மொழி, தமிழே வணிக மொழி, தமிழே நீதிமன்ற மொழி என அனைத்து நிலைகளிலும் தமிழ் ஏற்றம் காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.

4) தமிழ் எழுத்து வடிவ மாற்றத்தை கைவிட வலியுறுத்தி  தம்ழர்கள் அனைவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு கோரிக்கை மடல் அனுப்ப வேண்டுமென இம்மாநாடு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.     

1 கருத்து:

இளங்கோ சொன்னது…

தமிழக அரசின் தமிழ் எழுத்து வடிவ மாற்றம் குறித்த செய்தி குறித்து தங்கள் வலைப்பதிவை பார்த்த பின்னரே தெரிந்து கொண்டேன்.பத்திரிக்கைகளிலோ மற்ற ஊடகங்களிலோ இதனைப் பற்றி ஒன்றும் இல்லை.குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இதனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.எனவே இந்த செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும்.