இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி

புதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் விக்கிப்பீடியா அறிமுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி ரவிசங்கர் பேசியது.

விக்கிப்பீடியா என்பது ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும், இதில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறச் செய்யவேண்டும். விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது.

விக்கிப்பீடியாவை  யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழை தட்டச்சு செய்ய தமிழ் 99 என்ற முறை எளிமையானது. அதை அனைவரும் பயன்படுத்த முயலவேண்டும் என்றார்.
பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்திகளைப் பதிவது குறித்தும், தமிழ் 99 விசைப் பலகையை எளிமையாக பயன்படுத்துவது குறித்தும் மடிகணினி கொண்டு விளக்கினார்.

வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்கு தமிழ் விக்கிப்பீடியா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//இதில் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி ரவிசங்கர் பேசியது!!!!!!!!!!!!!!!!//
You broke Wikipedia's rules. It's seems to be bad.

பெயரில்லா சொன்னது…

Yes, I agreed anonymous's point. Don't do next time.

இரா.சுகுமாரன் சொன்னது…

ரவிசங்கர் தன்னை நிர்வாகி என்று குறிப்பிட வேண்டாம் என்றும் யாரும் அவ்வாறு சொல்லிக் கொள்வதில்லை. நானும் அவ்வாறு எங்கும் குறிப்பிடுதில்லை என்றும் கூறினார். நிர்வாகி என்று செய்தி வந்ததற்கும் ரவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அறிமுகக் கூட்டத்தில் நிர்வாகி என்று குறிப்பிட்டது தொடர்பாகவும் அவர் மேலே சொன்ன விளக்கத்தை அறிமுகக் கூட்டத்திற்கு வந்தவர்களிடமும் சொன்னார்.

"விக்கிப்பீடியா நீண்டகாலமாக இருக்கிறது. அதை என்ன நீங்கள் அறிமுகப்படுத்தப் போகிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதனால் நிர்வாகி என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று கருதினேன்."

விக்கிப்பீடியாவை அறிந்தவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை, ஆனால், நிகழ்ச்சியில் வந்த பலருக்கு ஒரு அறிமுகம் என்று தான் கூற வேண்டும் அது பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. எனவே அறிமுகக் கூட்டம் என தலைப்பு வைக்கப்பட்டது.

விக்கிப்பீடியாவின் விதிகளுக்கு மீறலானது என்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எந்த விதியின் படி மீறப்பட்டுள்ளது எனவும்,
ஆதாரம் இருந்தால் காட்டினால் ஏற்றுக் கொள்ளலாம்.

கீழே உள்ள தலைப்பில் உள்ள செய்திப்படி நிர்வாகி என்று ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டோம்.

//"விக்கிப்பீடியா சமூகம்"............

அதில் தன்னார்வ நிர்வாகிகளுக்கு தொகுக்கும் கட்டுப்பாடுகளை வழங்கும் அதிகாரத்திற்கான ஒரு தெளிவான ஆற்றல் அமைப்பையும் உள்ளடக்கியிருக்கிறது.//

என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தன்னார்வ நிர்வாகிகள் என்று சிலர் உள்ளனர் எனபதை அறிந்து அதன் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளேன்.

இரா.சுகுமாரன் சொன்னது…

கீழே உள்ள இணைப்பில் விக்கிப்பீடியா
நிர்வாகிகள் யார் யார் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கவும்.
எனவே, இதில் ஏதும் விதிமீறல் இல்லை என்பதை அறியவும்.

அனானியாக எழுதாமல் பெயர் போட்டு எழுதவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:ListUsers/sysop

பயனர் அட்டவணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பயனர் அட்டவணை பின்வரும் எழுத்துடன் தொடங்கும் பயனர்களைக் காட்டு: குழு:
தொகுத்த பயனர்களை மட்டும் காட்டு உருவாக்கிய தேதி அடிப்படையில் வரிசைப்படுத்து

* Arafath.riyath ‎(நிர்வாகி) (24 நவம்பர் 2008 தேதி 16:08 மணியில் உருவாக்கப்பட்டது)
* Kanags ‎(நிர்வாகி) (17 சனவரி 2006 தேதி 11:16 மணியில் உருவாக்கப்பட்டது)
* Karthickbala ‎(நிர்வாகி) (14 ஏப்ரல் 2008 தேதி 06:18 மணியில் உருவாக்கப்பட்டது)
* Kurumban ‎(நிர்வாகி) (12 நவம்பர் 2006 தேதி 21:23 மணியில் உருவாக்கப்பட்டது)
* Mayooranathan ‎(அதிகாரி, நிர்வாகி)
* Natkeeran ‎(அதிகாரி, நிர்வாகி)
* Ravidreams ‎(அதிகாரி, நிர்வாகி)
* Rsmn ‎(நிர்வாகி) (11 திசம்பர் 2008 தேதி 04:21 மணியில் உருவாக்கப்பட்டது)
* Santhoshguru ‎(நிர்வாகி)
* Sivakumar ‎(நிர்வாகி)
* Sodabottle ‎(நிர்வாகி) (25 நவம்பர் 2009 தேதி 16:28 மணியில் உருவாக்கப்பட்டது)
* Sundar ‎(அதிகாரி, நிர்வாகி)
* Trengarasu ‎(நிர்வாகி) (12 சூன் 2006 தேதி 07:29 மணியில் உருவாக்கப்பட்டது)
* உமாபதி ‎(நிர்வாகி)
* கலை ‎(நிர்வாகி) (1 திசம்பர் 2007 தேதி 22:54 மணியில் உருவாக்கப்பட்டது)
* கோபி ‎(நிர்வாகி)
* செல்வா ‎(நிர்வாகி) (23 மே 2006 தேதி 23:22 மணியில் உருவாக்கப்பட்டது)
* ஜெ.மயூரேசன் ‎(நிர்வாகி)
* பரிதிமதி ‎(நிர்வாகி) (17 ஏப்ரல் 2009 தேதி 02:42 மணியில் உருவாக்கப்பட்டது)

செல்வா சொன்னது…

விக்கிப்பீடியாவின் நிருவாகி என்று கூறுவதில் தவறில்லை, ஏனெனில் அவர் நிருவாகிகளில் ஒருவர்தான். ஆனால் அப்படிக் கூறுவதால், விக்கிப்பீடியாவைப் பற்றி அதிகம் அறியாதவர்கள் தவறான பொருள் (நிறுவனர்கள், அல்லது சிறப்பான அதிகாரங்கள் கொண்ட உரிமையாளர் என்று) கொள்ள நேரிடும். விக்கிப்பீடியாவில் நிருவாகி என்பது அங்கு சில பராமரிப்பு வேலைகள் செய்ய உதவியாய் சில வசதிகள் பெற்றவர்கள். விக்கிப்பீடியர்களிடையே தங்கள் ஆக்கங்களால் நன்னம்பிக்கை பெற்றவர்களுள் ஒருவர். எனவே நிருவாகி என்று குறிப்பிட்டால் தவறில்லை, எனினும் பொதுவாக அப்படி அழைக்கப்பெறுவதில்லை. ஏன் விக்கிப்பீடியாவுக்கு அறிமுகம் தேவை எனில் அது பற்றி அறியாதவர் இன்னும் மிகப்பலர் உள்ளனர். அறிந்தவர்களும் பங்களித்துப் பட்டறிவு இல்லாமல் இருக்கினறர். குறை சொல்லும் ஒவ்வொருவரும் வநது ஒரு 10 கட்டுஐ எழுதினாலும் 10,000 கட்டுரை சேர்ந்துவிடுமே :) :)

இரா.சுகுமாரன் சொன்னது…

வருக செல்வா ஐயா,
உங்கள் ஆதவுக்கு நன்றி

Mayooranathan சொன்னது…

முதலில் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து சிறப்பாக நடத்திய புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்கும், கலந்துகொண்டு விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து பேசிய ரவிக்கும், ஏனையோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

ரவியை அதிகாரி என்றோ, நிர்வாகி என்றோ குறிப்பிடுவதில் தவறோ, விதி மீறலோ இருப்பதாகத் தெரியவில்லை. விக்கிப்பீடியாவின் நடைமுறைகள் பற்றி அறிந்தவர்களுக்கு அதன் பொருள் புரியும்.

அன்புடன்,
இ. மயூரநாதன்.

இரா.சுகுமாரன் சொன்னது…

நன்றி மயூரநாதன்,

நீங்கள் அளித்தவிளக்கத்திற்கு நன்றி! "பெயரிலி" க்கு போதுமான விளக்கம் கிடைத்திருக்கும் என்றே கருதுகிறேன்.
இரா.சுகுமாரன்

Coupon Blogger Jay சொன்னது…

Im also from pondicherry. Anna salai.. i wanted to network with bloggers in pondy any contacts?



Thanks from a Goundamani fan