slide
தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் - தமிழ்மணம்
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி
ஞாயிறு, 20 மார்ச், 2016
சனி, 7 பிப்ரவரி, 2015
திங்கள், 18 பிப்ரவரி, 2013
தமிழ்க் கணினி வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் தினமலர் செய்தி
பிப்ரவரி 18,2013,00:00 IST
புதுச்சேரி
வலைப்பதிவர் சிறகம், கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், கல்லூரி
மாணவர்களுக்கான தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் முதலியார்பேட்டையில்
இந்திய கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலை இலக்கியப் பெருமன்ற
மாநிலச் செயலர் முருகையன் தலைமை தாங்கினார். வலைப்பதிவர் சிறகம்
ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நோக்கவுரையாற்றினார்.
சபாநாயகர் சபாபதி
துவக்கிவைத்து பேசுகையில், " தமிழ் மொழியில் எண்ணின் எழுத்துருக்கள் கடந்த
காலங்களில் வகுப்புகளில் சொல்லித் தரப்பட்டது. ரோமன் எழுத்துகள் புகுந்த
பிறகு நமது எண்களின் எழுத்துருக்கள் முற்றிலும் மறைந்து விட்டன. தற்போது
தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தமிழின் எண்
எழுத்துருக்களை பயன்படுத்தினால் நடை முறையில் வாழும்' என்றார்.
அமைச்சர் தியாகராஜன் பேசும் போது "மாநிலத்தில் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கான பணிகளை அரசு முன்னெடுக்கும்' என்றார்.
இந்திய
கம்யூ.,மாநில செயலர் விசுவநாதன், தேசியக் குழு உறுப்பினர் நாரா கலைநாதன்,
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் சுகுமாறன் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு
அமர்வுகளில் தமிழில் இயங்குதளங்கள், தட்டச்சு மென்பொருள் நிறுவல், தமிழ்
எழுத்துகளின் குறியீட்டு முறைகள், தமிழில் மின்னஞ்சல், வலைப்பதிவு
தொடக்கம், தமிழில் மின் நூல், திரட்டி பயன்பாடுகள் குறித்து, கல்லூரி
மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, காஞ்சி
மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், மதகடிப்பட்டு காமராஜர் கலை அறிவியல்
கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
பங்கேற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் பசுபதி சான்றிதழ் வழங்கினார்.
காஞ்சி
மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய பேராசிரியர் இளங்கோ, பாரதியார் பல்கலைக்
கூட உதவி பேராசிரியர் ராஜராஜன், கலை இலக்கிய பெருமன்றம் எல்லை
சிவக்குமார், துணைத் தலைவர் பொறியாளர் தேவராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
லேபிள்கள்:
தமிழ்க் கணினி,
தினமலர்,
பயிற்சிப் பயிலரங்கு
கணிப்பொறியில் தமிழ் பயன்பாடு விழிப்புணர்வு முகாம் தினமணி செய்தி
By
புதுச்சேரி,
First Published : 18 February 2013 12:58 AM IST
புதுச்சேரியில் கணிப்பொறியில் தமிழ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன் விளக்கினார்.
முகாமுக்கு புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் வீர.முருகையன்
தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் தலைவர் வ.சபாபதி முகாமை தொடங்கி
வைத்தார்.
முகாமில் தமிழில் இயங்குதளங்கள், தட்டச்சு மென்பொருள் நிறுவல் மற்றும்
பயன்பாடு, கைப்பேசியில் தமிழ், தமிழில் இணைய உலாவிகள், தமிழ்
எழுத்துக்களின் குறியீட்டு முறைகள், தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
வலைப்பதிவுகளை தொடங்குதல், திரட்டிகளின் பயன்பாடு, சமூக வலைத்தளங்கள்,
தமிழில் மின்நூல் உருவாக்குதல், கட்டற்ற மென்பொருள்கள், தமிழில் கிடைக்கும்
பல்வேறு மென்பொருள்கள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழா என்ற தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை மின்துறை அமைச்சர் தி.தியாகராஜன் வெளியிட்டார்.
அதனை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்
நாரா.கலைநாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் ஆகியோர்
பெற்றுக் கொண்டனர்.
மென்பொருள் வல்லுநர் க.அருணபாரதி, பேராசிரியர் நாக.இளங்கோ, திரட்டி நிறுவனர் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
லேபிள்கள்:
தமிழ்க் கணினி,
தினமணி,
பயிற்சிப் பயிலரங்கு
தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் தினகரன் செய்தி
முதலியார்பேட்டையில் நடந்த தமிழ்கணினி விழிப்புணர்வு முகாமில் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை அமைச்சர் தியாகராஜன் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் பெற்றுக்கொண்டார். அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் விஸ்வநாதன்.
தமிழ் கணினி விழிப்புணர்வு
முகாம்: குறுந்தகடு வெளியீடு
புதுச்சேரி, பிப். 18:
புதுச்சேரி
வலைப்பதிவர் சிறகம், புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் தமிழ்க்
கணினி விழிப்புணர்வு முகாம் முதலியார்பேட்டை சுப்பையா இல்லத்தில் நேற்று
நடந்தது.
புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்ற
தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்
விஸ்வநாதன் வாழத்துரை வழங்கினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மைய
பேராசிரியர் இளங்கோ, பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் ராஜராஜன், கலை
இலக்கிய பெருமன்ற துணைத்தலைவர் தேவதாசு முன்னிலை வகித்தனர். சபாநாயகர்
சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு முகாமை துவக்கி
வைத்தார்.
�தமிழா� தமிழ் மென்பொருள் குறுந்தகடை மின்துறை அமைச்சர்
தியாகராஜன் வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலை
நாதன் பெற்றுக்கொண் டார். எல்லை.சிவக்குமார் தலைமையில் நடந்த நிறைவு
விழாவில் பேராசிரியர் பசு பதி, தமிழ்நாடு கலை இலக் கிய பெருமன்ற செயலாளர்
பரமேஸ்வரி, துணை தலைவர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லேபிள்கள்:
தமிழ்க் கணினி,
தினகரன்,
பதிவர் வட்டம்
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நிரல்
தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம். |
நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 மணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்,
66. கடலூர் சாலை, முதலியார் பேட்டை, புதுச்சேரி -605 004.
|
|
தொடக்க
விழா காலை 9.30 மணிக்கு
‘தமிழா’
தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திரு. தி. தியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
அமர்வு :1 காலை 10.30 முதல் 11.15 வரை
தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu),
தமிழில் எம்.எசு ஆபீசு, ஓப்பன் ஆபீசு,
தமிழில் இணைய உலாவிகள் (Web Browsers),
ஒருங்குகுறி, TAM, TAB, TSCII
TACE-16 தமிழ் எழுத்துக் குறியீட்டு
முறைகள், குறியீடு
மாற்றம்
திரு. இரா.சுகுமாரன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு
பயன்பாட்டாளர்கள்.
அமர்வு 2: காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள் நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திரு. க. அருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
காலை 11.30 முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3: காலை 11.45
முதல் 12.30 வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக், வேர்டு பிரசு, பிற…
பேராசிரியர் நாக. இளங்கோ
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
புதுச்சேரி
அமர்வு 4: பகல் 12.30 முதல்
1.15 வரை
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…
முனைவர். வி. கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் ஓய்வு
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
திரு.செல்வ.முரளி, கணினி பொறியாளர்
சிஇஓ, விசுவல்மீடியா
டெக்னாலஜிஸ், கிருஷ்ணகிரி
பகல் 1.16 முதல் 2.00 வரை
உணவு இடைவேளை
அமர்வு 5: பிற்பகல்
2.00 முதல் 2.30 வரை
திரட்டிகளின் பயன்பாடு:
தமிழ்மணம், தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ்
பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டு, பிற…
திரு. ஏ. வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.
அமர்வு 6: பிற்பகல் 2.30 முதல் 3.15 வரை
தமிழில் மின்னஞ்சல், அரட்டை,
சமுக வலைத்தளங்கள்: முகநூல், டிவிட்டர், கூகுல் பிளசு
திரு. கோ.சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு
அமர்வு 7: பிற்பகல் 3.15 முதல்
3.30 வரை
தமிழில் மின்னூல்
உருவாக்குதல்
பேராசிரியர் நாக.
இளங்கோ
காஞ்சிமாமுனிவர் பட்ட
மேற்படிப்பு மையம் புதுச்சேரி
அமர்வு 8: பிற்பகல் 3.30 முதல்
4.15 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source
software)
த. சீனிவாசன், - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.
அமர்வு 9: பிற்பகல்
4.15 முதல் 4.30 வரை
தமிழில் கிடைக்கும்
பல்வேறு மென் பொருட்கள், தமிழ் தொடர்பான பிற…
திரு. தமிழநம்பி , விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர்
இடைவேளை
பிற்பகல் 4.30 முதல் 4.45 வரை
நிறைவு
விழா:
மாலை 4.45 மணி
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
வலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/
லேபிள்கள்:
நிகழ்ச்சி நிரல்,
பதிவர் வட்டம்,
பயிற்சிப் பட்டறை,
புதுச்சேரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




