இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

"தமிழ்க் கணினி" - புதுச்சேரியில் வலைப்பதிவர் பட்டறை

புதுச்சேரியில் பதிய பதிவர்களுக்கான பயிற்சிப்பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2007, 9 ஆம் நாள் இப்பயிற்சி வகுப்பு நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இப்பயிற்சி வகுப்பானது முற்றிலும் புதியவர்களுக்கானதாகும். இதில் தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, ஒருங்குறி எழுத்துறு பயன்படுத்துவது அதற்கான மென்பொருட்களை நிறுவுவது வலைத்தளங்களில் எழுதுவது உள்ளிட்டவற்றுக்கு நேரடி பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர்.
 
 இந்த பதிவர்களுக்கு ஏற்படும் தொழில் நுட்ப பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாகவே இந்த பட்டரை நடத்துவது என கருதி தொடக்கத்தில் பேசுவந்த நிலையில் பின்னர் புதியவர்களுக்குமாக சேர்த்து மொத்தமாக 100 பேர்களுக்கு இந்த பயிற்சியை இலவசமாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
காலை மாலை என இரு வேளையும் நடைபெறும். காலை கணினி பற்றி பொதுவானத் தகவல்களும், மாலை பதிவர்களுக்கு பயிற்சி அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். இந்த பதிவர் பட்டறை "தமிழ்க் கணினி"" என்ற பெயரில் நடத்துவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதன் நோக்கம் கணனி முழுமையும் தமிழ்படுத்த வேண்டும் என்பதுமாகும். இதனால், தமிழில் கிடைக்கும் மென்பொருட்களின் தொகுப்பு அடங்கிய குறுந்தகடு அளிப்பது எனவும் முடிவு செய்துள்ளோம்.
 
 அதனுடன் ஏகலப்பை, உள்ளிட்ட சென்னைப் பதிவர்கள் வழங்கிய மென்பொருட்களும், புதிய மென்பொருட்கள் பலவும் வழங்குவது எனவும் முடிவு செய்துள்ளோம். இதில் தமிழ் 99 விசைப்பலகை பயன்படுத்தி தட்டச்சு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கணனியில் தமிழ் என்பது தொடர்பான விவரங்கள் அங்கிய ஒரு கணனி மலர் ஒன்று வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம். 
 
தொடக்கமாக கணனி தொடர்பான தொழில் நுட்பம் அறிந்தவர்களை அழைத்து தொடங்கி வைப்பது எனவும் முடிவு செய்துள்ளோம். தமிழ் நாடு அரசு செய்துள்ள பல பணிகளை புதுவை அரசும் மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தும் வகையில் புதுவை முதல்வரை அழைத்து இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பொதுவாக "சென்னை வலைப்பதிவுப் பட்டறை" போலவும் அதில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பட்டறையாக இது இருக்கலாம். "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்" என்ற பெயரிலான அமைப்பு இந்த பட்டறையை நடத்துவது எனவும் முடிவு செய்து இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் ஆர்வலர்கள், கணனி ஆர்வலர்கள், இணையப் பதிவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும். 
 
 மேலும், சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. அது பற்றி பின்னர் விரிவாக தெரிவிக்கப்படும். எல்லாமே இலவசமாக இல்லாமல் குறைந்த பட்ச நுழைவுக்கட்டணம் வசூலிப்பது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முடிவு நிதி என்ற பிரச்சனையை அடிப்படையாய் கொண்டது அல்ல. இவ்வாறு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது என்பது திட்டமிட்ட 100 பேர் என எண்ணிக்கையை குறைத்து சிறப்பாக செய்ய இயலும் என்பதாலேயே இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு சலுகை உண்டு. பதிவர்களின் ஆலேசனை வரவேற்கப்படுகிறது. 
 
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்காக, 
 இரா.சுகுமாரன், 
 தொடர்பு எண்: 94431 05825

4 கருத்துகள்:

உண்மைத்தமிழன் சொன்னது…

புதுவை சுகுமாரன் ஸாருக்கு

வலைப்பதிவுகள் பற்றிய உங்களது ஆர்வத்திற்கு எனது வாழ்த்துக்கள்..

வலைப்பதிவுகளில் தமிழில் எழுதுவதே செலவு பிடிப்பதுதான் என்பது வலைப்பதிவர்களுக்கே நன்றாகத் தெரியும்.. இப்படியிருக்கும்போது நுழைவுக் கட்டணம் வசூலித்தீர்களென்றால் இது வழக்கமான MLM கம்பெனிகள் நடத்தும் ஒரு நாள் டிரிக் என்பதைப் போலத்தான் அறிமுகமில்லாத மக்களுக்குப் புலப்படும். நமக்குத் தேவை இவர்கள்தான்.. அறிமுகமில்லாதவர்களிடம் இதைக் கொண்டு போனால்தான் இது மிக வேகமாகப் பரவும்.

சாதாரணமாக பாக்கெட்டில் பணம் வைத்திருந்தாலும் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விலை குறைவு என்பதால் வாங்குவது நமது பழக்கம். 100 ரூபாயோ அல்லது 50 ரூபாயோ எவ்வளவாக இருந்தாலும் பணம் பணம்தானே என்றெண்ணி வராமல் விடுபவர்களும் இருப்பார்கள்.

பணமே இல்லையெனில் அதான் காசே இல்லையே.. சும்மாவாச்சும் போய் பார்ப்போமே என்றெண்ணி வருகின்றவர்களில் இன்னொரு புதுவை இரா.சுகுமாரனும் இஉருவாக மாட்டார் என்று என்ன நிச்சயம்..?

நாம் இன்னும் ஆரம்பக் கட்டங்களில்தான் உள்ளோம். அறிமுகப்படுத்தும் நிலைமையில்தான் உள்ளோம். ஊடகங்களின் துணையோடு விளம்பரப்படுத்துதல் அதிகமாக மக்களைக் கவர்ந்து இந்த நிகழ்ச்சியை கட்டணமில்லாமல் நன்கொடைகள் வாயிலாக நடத்தலாம் என்பது எனது கருத்து.

என்ன உதவி என்றாலும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.

காலமும், நேரமும் ஒத்துழைத்தால் அன்று நேரிலும் வருகிறேன்..

தங்களுடைய முயற்சிகளுக்கு மீண்டும் என்று நன்றி கலந்த வாழ்த்துக்கள்..

இரா.சுகுமாரன் சொன்னது…

வணக்கம்,

உங்கள் கருத்தை பரிசீலனை செய்கிறோம்,

தங்கள் வருகைக்கு நன்றி

இந்த தளம் தமிழ் மணத்தில் இணைக்கப்படாத நிலையில் எப்படி இந்த தளத்தை கண்டுபிடித்திர்கள் அய்யா?

ஊற்று சொன்னது…

திரு இரா.சு அவர்களுக்கு வணக்கம். நம்ம ஊரில் பதிவர் சந்திப்பா, மகிழ்ச்சி. நேற்றுதான் இதுகுறித்து பதிவர் ப்ரேம் எனக்குத் தெரிவித்திருந்தார். நானும் சிறகத்தில் பங்கேற்க விரும்கிறேன், மடலிடுங்கள் பேசுவோம். oootru@gmail.com

ச.பிரேம்குமார் சொன்னது…

பணி நிமித்தமாக சென்னையில் இருப்பதால் சந்திப்புக்கு வர இயலவில்லை. இருப்பினும் பட்டறை குறித்து மிகவும் மகிழ்ச்சியோடும் ஆவலோடும் உள்ளேன். வாழ்த்துக்கள். ஏதேனும் என்னால் உதவ முடியுமெனில் மடல் எழுதுங்கள்

நன்றி