இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

புதுச்சேரியில் வலைப்பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறை

“ தமிழ்க் கணினி ”
வலைப்பதிவர் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை கலந்தாய்வுக் கூட்டம்
------------------------------------------------------------------------------
நாள்: 09-09-2007, ஞாயிற்றுக்கிழமை, காலம்: சரியாக மாலை 5.00 மணி இடம்: பிலால் உணவகம், அண்ணா சாலை, புதுச்சேரி.1

------------------------------------------------------------------------------ 

வணக்கம்,

கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்து புதுச்சேரியில் ''தமிழ்க் கணினி'' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தலாம் என எண்ணியுள்ளோம். இப்பயிற்சியானது கணினியில் முறையாகப் பயிற்சி பெறாதவர்களை நோக்கியதாகும். 
 
முறையாக பயின்றவர்கள், பயிற்சிப் பெற்றவர்கள் கூட கணினியைத் தமிழில் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்தால் மட்டுமே தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அறிந்திருக்கிறார்கள் என்றும், அதனை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. பலருக்குத் தமிழில் கணினியில் ஏற்பட்டிருக்கும் மிகவேகமான வளர்ச்சிப் பற்றி போதிய அறிமுகம் இல்லாமலேயே உள்ளது. எனவே, தமிழ் மொழியில் கணினியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கத்தோடு இப்பயிற்சிப் பட்டறையை முதற்கட்டமாக நடத்தலாம் என எண்ணுகிறோம். 
 
இந்த பயிற்சிப் பட்டறையில் தமிழில் கிடைக்கும் மென் பொருட்களை அறிமுகம் செய்வது, அதனை கணினியில் நிறுவுவது, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, தமிழில் இணைய தளங்களில், வலைப்பூக்களில் எழுதுவது உட்பட தமிழ்க் கணினி தொடர்பான தொழிற்நுட்பங்கள் குறித்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்தலாம். 
 
இப்பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த தமிழ் ஆர்வலர்கள், கணினி ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டலின் படி செயல்பட தீர்மானித்துள்ளோம். 
 
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் மேற்கண்டவாறு நடைபெற உள்ளது. தாங்கள் இக்கூட்டத்தில் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொண்டு, தங்கள் மேலான கருத்துக்களை வழங்கி, செம்மொழிக்கு கணினித் தமிழ் மூலம் மேலும் சிறப்பு சேர்க்க ஆதரவுதர வேண்டுகிறோம். 
 
தமிழ்க் கணினிக்காக, 
 
(இரா.சுகுமாரன்)
-------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: இரா.சுகுமாரன் 94431 05825. மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com

5 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

கலந்தாலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். பட்டறையை மிக மிக சிறப்பாக நடத்துவீர்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது.

suratha yarlvanan சொன்னது…

சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் + நன்றிகள்

இயன்ற உதவியை செய்ய விருப்பம். தனிமடலில் தொடர்புகொள்கிறேன்

இரா.சுகுமாரன் சொன்னது…

வணக்கம், விக்கி

உங்கள் தொலைபேசி எண் தெரிவிக்கவும்