முனைவர் தி. நெடுஞ்செழியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.,(இதழியல்),எம்ஃபில்.,பிஎச்.டி.,பிஜிடி.இதழியல் இணைப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம் ஏவிசி கல்லூரி (தன்னாட்சி) மன்னம்பந்தல் - 609 305. மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு - இந்தியா. அலைபேசி: 94432 14142
நான் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவிலான மாநாடு அளவில் திட்ட மிடப்பட்டிருந்தது. இந்த பயிற்சிப் பட்டறையை சிறப்பாக அமைத்து தந்த நண்பர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இரா.அ.அரசெழிலன் ஆசிரியர்-நாளை விடியும் தனக்குத் தெரிந்த செய்திகளை யாருக்கும் சொல்லாமல், அவற்றால் தான் மட்டுமே பயன் அடையும் ஒரு பிற்போக்குத் தனம் நம்மிடையே மிகப்பெரும்பாலோருக்கு உண்டு. இந்தத் தன்மையிலிருந்து மிகவும் மாறுபட்டு புதுச்சேரியில் சில தோழர்கள் இணைந்து புதுச்சேரி வலைப்பதிவர் சிரகம் என்ற அமைப்பினைத் தொடங்கி, கடந்த 09.12.2007 அன்று வலைப்பதிவர் பயிற்சிப்பட்டறை ஒன்றினைப் புதுச்சேரி சற்குரு உணவகக் கூட்ட அரங்கில் மிகமிகச் சிறப்பாக நடத்தினர். தோழர்கள் கோ. சுகுமாறன், இரா.சுகுமாறன், முனைவர் நா.இளங்கோ, முனைவர் மு. இளங்கோ ஆகியோரின் முன் முயற்சியிலும் பெரு முயற்சியிலும் இக்கருத்தரங்கமும் பயிற்சிப்பட்டறையும் நடைபெற்றது.
திரு தாமரைக்கோ, ஆசிரியர். திசம்பர் 9, 2007 அன்று புதுச்சேரி - சற்குரு விடுதியில் தமிழ்க் கணிப்பொறி (கணினி) வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப் பயற்சிப் பட்டறை தமிழக அளவிலேயே கொடுக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ் மொழி எல்லாத் தளங்களிலும், எல்லாக் களங்களிலும், எல்லா வெளிப்பாட்டு ஊடகங்களிலும் தங்கு தடையின்றி வரவேண்டுமெனில், இப் பயிற்சி எல்லாருக்கும் தரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆங்கிலத்தைத் தெரிந்தவன்தான் அறிவுடையவன்; ஆங்கிலத்தைப் படித்தால் மட்டுமே அறிவு பெறமுடியும் என்ற கோணல் கருத்துகளை யெல்லாம் மாற்றவேண்டுமெனில் கணிப்பொறி மற்றும் அதைச்சார்ந்த ஊடகங்களின் வழியாக ஒரு போரையே நடத்த வேண்டியுள்ளது. இப் பயிற்சி ஒரு தொடக்க நிலையாக இருந்தாலும் தெடர்ந்து செய்யப்படவேண்டியது இன்றையச்சூழலில் மிகவும் ஏற்புடையதாகும்.
இரா.அழகிரி, தமிழர் தேசிய இயக்கம். இந்த கணினி பயிற்சி பயிலரங்கு மிகச்சிறப்பான முறையில் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. ஓரளவு கணினி பயிற்சி உடையவர்கள் தங்களை மேலும் ஒரு இணைய தளம் தொடங்கி கருத்துக்களை உலகறியச் செய்ய இந்த பயிற்சிப் பயிலரங்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பயிலரங்குகள் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் புரிகிற வகையில் வரும் காலங்களில் எளிமையாக்கி நடத்தப்படவேண்டும்
. மா.தமிழ்ப்பரிதி ஆசிரியர் தமிழகம் இணையம்http://www.thamizhagam.net/ இது போன்ற பயிற்சிகள் கிராமப்புற மக்களும் பயனுறும் வகையில் கிராமங்களில் சென்று பயிற்சி அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி நாளன்று அறிவிக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரவேண்டும். புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை தமிழ்க்கணினி உலகிற்கு நல்லதொரு தொடக்கமாகும். தமிழ்க்கணினி ஆய்வுககளுக்கும் கல்விக்கும் இப்பயிற்சிப்பயிலரங்கு வித்திட்டுள்ளது. தமிழ் இணையத்தினை ஊரக மக்களுக்கு கொண்டு சேர்க்க இச்சிறகம் பாடுபட வாழ்த்துகள்.
தமிழநம்பி, விழுப்புரம் ஐயா, வணக்கம். 9-12-2007-இல் புதுவையில் நடந்த 'வலைப்பதிவர் பயிலரங்'கில் பயிற்சி பெற்றோரில் நானும் ஒருவன். அமைப்புக்குழுவினர் அனைவரும் மேம்பட்ட - உயர்ந்த - மனவுணர்வுடன் ஈடுபட்டுப் பயிலரங்கைச் சிறப்பாக நடத்தியமை மிகமகிழ்ச்சியாகவும் ஒருவகையில் வியப்பாகவும் இருந்தது! புதுவையிலுள்ள அறிவார்ந்த தமிழிளைஞரை எண்ணி அன்று முழுவதும் இறுமாந்து பெருமித உணர்வுடன் இருந்தேன். பயிலரங்கம் பற்றி 'நற்றமிழ்' இதழில் எழுதுவேன். பயிலரங்கின் பயனாக, நானும் வலைப்பதிவர்களுடன் சேர்ந்துள்ளேன். என் வலை: http://www.thamizhanambi.blogspot.com ஆகும். இரண்டுமுறை நான் சிக்கல் தீர்த்துக்கொள்ள அணுகியபோதும் தயக்கமின்றி ஆர்வத்துடன் உதவினீர்கள். மிகவும் நன்றி. மீண்டும் தேவைப்படின் உங்களை அணுகுவேன். பொறுத்தாற்றுக!-அன்பன், தமிழநம்பி, விழுப்புரம் 9443440401