புதுச்சேரி வலைப்பதிவர் பட்டறை .. பொன்னவைக்கோ பேச்சு
இந்த பதிவு ஓசை செல்லாவின் தனிப்பட்டக் கருத்து ........ பயிலரங்கம் பேச்சி குறித்துள்ளதால் இங்கே பதிவு செய்கிறோம்////...
நிறைவு விழா பார்க்காமல் சென்றவர்கள் ஒரு நல்ல நிகழ்வை இழந்துவிட்டார்கள்
என்றே தோன்றுகிறது... அதிலும் குறிப்பாக மா.சிவா, வினையூக்கி போன்றவர்கள்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை மிக மிக
அருமை. தமிழை இணையத்திற்கு கொண்டு வந்த சீன அறிஞர் சிங்கை அரசு, தமிழ் டேப்
டாம் போன்றவற்றின் வரலாறு, ஒருங்குறி (யுனிகோட்), தமிழனின் தாழ்வு
மனப்பான்மை போன்றவற்றை பற்றிய ஒரு அருமையான உரையை ஒரு மணிநேரம்
நிகழ்த்தியுள்ளார். அது தான் அன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பு என்று கூட
சொல்லலாம்! இருந்தாலும் என்னைப்போன்ற மேற்கத்திய மக்களுடன் பழகி இணையம்
அறிந்தவர்கள் அவரின் ஒரு சில கருத்துக்களுக்கு (மட்டும்!) மாற்றுக்கருத்து
கொண்டிருப்பதில் வியப்பில்லை தானே!
முதலில் அவரின் கருத்து தமிழை
ஒரே மாதிரி ஆங்கில முறையிலிருந்து மாற்றுகிறோம். அது தவறு... உதாரணம்
"பட்டறை" . அதற்குப் பதிலாக "பயிற்சிப் பயிலரங்கம்" என்பதுதான் சரியான
வார்த்தை உபயோகம்... என்று சொன்னார். என் கருத்து எல்லாம் முதலில் தமிழ்
வழக்கை இந்த தமிழறிஞர்கள் குறை சொல்லி குறை சொல்லியே தமிழ் கடுப்படிக்க
ஆரம்பித்து விட்டது இந்த இளைய தலமுறைக்கு. முதலில் இது இணையம் மூலம்
படிக்கும் காலம். நான் சென்னையில் முதன்முதலில் நடேச முதலியார் பார்க்கில்
தல பாலபாரதி குடுத்த உற்சாகத்தில் அறிவித்த விசயம் "வலைப்பதிவர் பட்டறை".
அதுவரை பார்க்கில் உட்கார்ந்துகொண்டு ... போண்டா கொறித்துக்கொண்டு ..
காதலர்களின் சில்மிசங்களையும் ஓரகண்ணால் பார்த்துக்கொண்டு .. போளி போண்டா
கதைத்துக்கொண்டிருந்த நிலையிலிருந்து மேலே வர நானும் பாலபாரதியும் எடுத்த
சிறு முயற்சிதான் "பதிவர் பட்டறை". அதுவும் யாரிடமும் ஒரு ரூபாய் கூட
நன்கொடைவாங்காமல் கூகிளின் மூலம் வந்த ஒரு சிறு தொகையை வைத்து கோவையில் ஒரே
ஒரு கணினி மூலம் சிறு எண்ணிக்கையிலான பதிவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட
ஒரு சிறுநிகழ்வு அது. அங்கு எங்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என்ற
உந்துதலில்பால் வெளிவந்த ஒன்று கோவை முதல் பட்டறை . இந்த மாதிரி அகராதி
பார்த்து தமிழறிஞர்கள் கூட்டம் கூட்டி ஆராய்ந்து எடுக்கப்பட்ட விசயமல்ல.
திரு பொன்னவைக்கோ போன்றவர்கள் எல்லாம் இவ்வளவு பேசுகிறார்களே...
ஆயிரக்கணக்கான கோடிகள், அரச பதவி, அரசாங்க உதவிகளிருந்தும் இவர்கள் எத்தனை
"பயிற்சிப் பயிலரங்கங்கள்" வலைப்பூ பற்றி நிகழ்த்தினார்கள்? சொல்ல
முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக