புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக பல்வேறு வகையான மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த மென்பொருட்களை வலைப்பதிவர் சிறகத்தின் செயல் இளைஞரான நண்பர் க. அருணபாரதி தயாரித்துள்ளார்.
வலைப்பதிவர் சிறகத்தில் இரவு பகலாக பணியாற்றி இந்த மென்பொருட்களை அவர் தயாரித்துள்ளார்.
அவருக்கு வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக முதலில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த மென்பொருள்கள் முதல் வெளியீடாக வெளிவந்துள்ளதால் பயனாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்த பின் சரி செய்து இரண்டாவது வெளியீடாக வெளியிட உள்ளோம்.
திருவள்ளுவர் தமிழ் எழுதி
முதலில் இருப்பது திருவள்ளுவர் தமிழ் எழுதி இதில் தமிழ் 99, பாமினி எழுத்துருக்களின் விசைப்பலகையை தேர்வு செய்து நேரடியாக தட்டச்சு செய்யலாம்.
இணணய இணைப்பி
இரண்டாவது படத்தில் இருப்பது தமிழ்த் தளங்களின் இணைப்புகளை வழங்கும் இணணய இணைப்பி மென்பொருள் இதனை கணினியில் நிறுவினால் தமிழ் இணையப் பக்கங்களை எளிதில் இணைப்பு வழங்குகிறது.
எழுத்துருக்கள் நிறுவி
மூன்றாவது படத்தில் உள்ளது எழுத்துருக்கள் நிறுவி இதனை பயன்படுத்தி எழுத்துருக்களை நிறுவ முடியும்.
நமது கணினி
நான்காவது உள்ளது நமது கணினியை பற்றி அறிந்து கொள்வதற்கான மென்பொருளாகும். இதைப் பயன்படுத்தி தங்கள் கணினியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தமிழ் ஓசை
அய்ந்தாவதாக உள்ள மென்பொருள் தமிழ் ஓசை இந்த மென்பொருளை பயன்படுத்தி இசை கேட்கலாம். படங்களைப் பார்க்கலாம்.
முகவரி குறிப்பேடு
ஆறாவதாக உள்ளது முகவரி குறிப்பேடு இதனைப் பயன் படுத்தி முகவரிகளை சேமிக்கலாம்.
இந்த மென்பொருட்கள் அனைத்தும் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக அளித்துள்ளோம்.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தளத்தில் இலவசமாக விரைவில் வெளியிடப்படும்.
இந்த மென் பொருட்களில் ஒருங்குறி எழுத்துறுவை பயன்படுத்தி தயாரித்துள்ளமையால் இதற்கு WINDOWS XP யின் வரிவடிவ எழுத்துக்களுக்கான ஆதரவை நிறுவினால மட்டுமே இயங்கும். மேலதிக விவரம் தேவை எனில் arunabharthi@gmail.com அல்லது rajasugmaran@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்
4 கருத்துகள்:
வாவ்! அழகாக இருக்கு.
பாராட்டுக்கள்
ரெம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.
இதையும் தமிழ் ready திட்டத்துல சேர்த்தால் நல்லாயிருக்கும்.
வணக்கம் சிறில்
//இதையும் தமிழ் ready திட்டத்துல சேர்த்தால் நல்லாயிருக்கும்.//
இணைப்பதில் சிக்கல் ஏதுமில்லை. இந்த் மென்பொருள் யுனிகோடு எழுத்துறுக்களை கொண்டு உருவாக்கப்பட்டது.புதியவர்கள் பயன்படுத்த சிறமம் என்பதால் யுனிகோடு எழுத்துறுவை மாற்றி வேறு எழுத்துறு அமைத்து ஆங்கில இணைப்பையும் சேர்த்து வழங்கவேண்டும் என்று கருதுகிறேன். ஏற்கனவே நண்பர் அருணபாரதியிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் அதற்கான வேலை தொடங்கும் முடித்தவுடன் கொடுக்கலாம்.
கருத்துரையிடுக