புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழ்க் கணினி' வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிவெற்றி பெற்றதாக கருதினால் அந்த வெற்றியின் பங்காளர்கள் நீங்கள் தான். ஏனெனில் இந்த வெற்றியை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் தனிப்பட்ட முயற்சியின் வெற்றி என்று கருத இயலாது.
ஏனெனில், நாங்கள் தமிழில் ஏற்கனவே பலரின் உழைப்பின் விளைவாக இலவசமாக வழங்கப்பட்ட மென்பொருள்களின் தொகுப்பைத் தான் வழங்கி இருக்கிறோம். எனவே, இந்தப் பட்டறையின் வெற்றி என்பது, தங்கள் மென்பொருட்களை இலவசமாக வழங்கினால் பலர் அதனைப் பயன்படுத்துவார்கள். இதனால் கணினியில் தமிழின் பயன்பாடு அதிகப்படும் என்று கருதி இலவசமாக மென்பொருள்களை அளித்துவரும் தமிழா முகுந்த், குறள், முரசு அஞ்சல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகத் தான் கருத முடியும்.
அதே போல தமிழில் செய்திகளைத் திரட்டித்தரும் பணிகளைப் பல்வேறு திரட்டிகள் செய்து வருகின்றன. இந்த திரட்டிகள் இலவசமாக செய்திகளைத் திரட்டி அளிக்கும் நிலையில், புதுச்சேரி பயிற்சிப் பட்டறையின் மூலம் மேலும் பலர் தளங்களில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் மேலும் பல செய்திகளை திரட்டித் தரும் வாய்ப்புகளை பெறுகின்றன. எனவே, இந்த வெற்றியானது தமிழ்மணம், தமிழ்வெளி, தமிழ்ப்பதிவுகள், திரட்டி, தமிழ்.கணிமை உள்ளிட்ட திரட்டிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றியுமாகும்.
நண்பர்கள் ஓசை செல்லா, மா.சிவக்குமார், லக்கிலுக், பாலபாரதி, நந்தக்குமார், மற்றும் வினையூக்கி அகியோர் ஏற்கனவே இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தி, பயிற்சிப் பட்டறையில் கிடைத்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் இல்லாமல் இந்தப் பயிற்சி பட்டறையின் வெற்றி இல்லை.
உபுண்டு இராமதாஸ் அவர்களின் லினக்ஸ் பற்றிய தகவல் மிகவும் பேசப்பட்டதாக சிலர் தெரிவித்தனர். எனவே அவரின் வருகையும் இந்த பட்டறையின் வெற்றிக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இவை இல்லாமல் தொலைபேசியில் எங்களுக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி எங்கள் பட்டறை செவ்வனே செயல்பட தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு ஆலோசனை வழங்கிய தமிழ்மணத்தின் முன்னாள் நிர்வாகியும் இன்னாள் ஆலோசகருமான திரு.காசி ஆறுமுகம் அவர்களின் உதவி, ஆலோசனை இல்லாமல் இந்தப் பட்டறையின் வெற்றி இல்லை.
இவை மட்டுமல்லாது தங்கள் தளங்களில் பல நண்பர்கள் பல செய்திகளை அளித்து தமிழ்ப் பதிவர்களைச் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இது போன்று பல்வேறு உதவிகளை மறைமுகமாகவும் பங்களிப்பாக அளித்த தமிழ் வலைப்பதிவர்கள் இல்லாமல் இந்தப் பட்டறையின் வெற்றி இல்லை.
இப்பட்டறை சிறப்பாக நடக்கவேண்டும் என்று பொருளுதவி அளித்த "புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு. இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள், "தமிழ்மணம், தமிழ்வெளி, ஹோப் , தமிழா" நிறுவனங்கள் மற்றும் ஒரிசாவிலிருந்து நண்பர் இராமசெயம், கடலூரிலிருந்து நண்பர் முகு (முகுந்தன்) மற்றும் வலைப்பதிவர் சிறகத்தின் பல நண்பர்கள் அளித்த நிதி இல்லாமல் இந்த பட்டறையின் வெற்றி இல்லை.
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின்
நண்பர்களின் பங்களிப்புகள்
இரா. சுகுமாரன், கோ.சுகுமாரன் மற்றும் நா. இளங்கோ, மு.இளங்கோவன் ஆகியோர் மட்டுமே அங்கு வந்திருந்த சிலருக்கு தெரிந்திருந்தது.
//இரண்டு சுகுமாரன்களும் இரண்டு இளங்கோக்களும் பம்பரமாகச் சுழன்று பட்டறையை மெருகேற்றினர்.// என்று ஓசை செல்லா கூட தனது பதிவிலே எழுதியிருந்தார்.
ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் தம்மை அதிகம் வெளிபடுத்திக் கொள்ளாமல் சிறப்பானப் பணிகளைச் செய்து முடித்துள்ளவர்கள்.
அரங்கத்தின் முன் நாங்கள் தோன்றியதால் நாங்கள் தான் எல்லாவற்றையும் செய்தோம் என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாகி இருந்தது என்பதை சில பதிவுகளைப் படிக்கும் போது தெரிந்த கொண்டோம்.
ஆனால், மென்பொருட்கள் தயாரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி டிசம்பர் 2, 2007 காலை 10.00 முதல் மறுநாள் காலை 6.00 மணிவரை இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து சில மென்பொருட்களை சிறகத்தின் வெளியீடாக வெளிவர உழைத்த நண்பர் க.அருணபாரதி இல்லாமல் இந்த வெற்றி கிடைக்கவில்லை.
அவரின் பணியைப் பதிவர் பட்டறையில் முழுமையாகப் பதிவு செய்யவில்லை.
குறுந்தகடு தயாரிப்பில் நண்பர் கல்பீஸ் அவரால் இயன்றவரை சிறப்பாக செய்திருந்தார்.
தூரிகா-வெங்கடேஷ் பதிவர் பயிற்சிப் பயிலரங்குப் பற்றிய முக்கிய நிகழ்வுகளில் செயல்பட்டவர். பயிற்சிப் பட்டறை பற்றிய முடிவுகள் செய்தபோது பங்கேற்க இயலாமல் போனாலும் தனது கருத்தை தொலைபேசியிலேனும் பதிவு செய்து விடுவார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பாளர்கள் பதிவிற்காக தனது தூரிகா இணைய பக்கங்களில் இடம் ஒதுக்கி பதிவிற்கான ஏற்பாடுகளை செய்தவர். சென்னைப் பதிவர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். மேலும், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் புதிய இணைய தளத்தை வடிவமைத்துக் கொடுத்தவர்.
வீரமோகன் குறிப்பேடு, குறிப்பேடு அச்சு, குறுந்தகடு, சுவரொட்டி, அரங்க விளம்பர பலகை உள்ளிட்ட பணிகளுக்குப் பொறுப்பேற்று இவர் செவ்வனே செய்திருந்தார். இவருக்கு வழங்கிய பணியைச் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும், அக்கரையோடும் செய்து முடித்திருந்தார். தன்நலம் பாராத இவர்களைப் போன்ற சிலரின் உழைப்பு மிகவும் மதிக்கத் தக்கதாகும்.
ம.இளங்கோ. எங்களின் எல்லாப் பணிகளிலும் இவர் இல்லாமல் இல்லை என்று செல்லும் அளவுக்கு எல்லாப் பணிகளில் பங்கேற்று செயல்பட்டவர் தான் ம.இளங்கோ.
ஓவியர் இராசராசன் வலைப்பதிவர் சிறகத்தின் சின்னத்தை மிகச்சிறப்பாக வரைந்து தனது திறமையை வெளிப்படுத்தியவர். பட்டறையின் அரங்கத்தின் மையத்தில் வைக்க வேண்டிய விளம்பர தட்டியை தானே வரைந்து கொடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். அவரின் ஓவியத் திறமையை வெளியிட இயலாத நிலைமைக்கு காரணம் காலம் கருதி முடிவு செய்ய வேண்டியதாயிற்று. தமிழக அளவில் குறிப்பிடத்தகுந்த ஓவியர்களில் முகாமையானவரான இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
இரா. செயப்பிரகாஷ்
இவர் தனது பணி இடமாற்றம் காரணமாக தொடக்கத்தில் பங்காற்றிய அளவுக்கு பங்காற்ற இயலவில்லை என்றாலும், இவர் இப்பட்டறை நடப்பதற்கு முதற்கட்டமாக நடந்த மூவர் (இரா.சுகுமாரன், கோ. சுகுமாரன், செயப்பிரகாஷ்) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று முடிவு செய்தவர்களில் ஒருவர்.
பேராசிரியர் நா.இளங்கோ, பேராசிரியர் மு.இளங்கோவன்
இவர்கள் பட்டறை பணிகளின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி முடிவுகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கேற்றவர்கள். கணினி மலர் சரிபார்த்தல், ஒளி அச்சு நகல் இவற்றின் பொறுப்பை இந்த இரண்டு பேராசிரிகளும் தன் பொறுப்பில் செய்து முடித்தனர்.
கோ.சுகுமாரன்
பல்வேறு அமைப்பு ரீதியான பணிகளைச் செய்து வருவதால் சில பணிகளைச் சிக்கல் இல்லாமல் முடிக்க உதவி செய்தவர் இவர். ஒருங்கிணைப்பாளாராக நான் இருந்தாலும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் இவரும் தான்.
'பட்டறை நடத்துவது ஒரு திருமணத்தை நடத்துவது போன்ற வேலைகொண்டது' என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், 'ஒரு மஞ்சள் நீர் விழா போல எளிமையாக முடித்துள்ளோம்' என்று பதிவர் பட்டறை நிகழ்வு ஏற்பாடுகளைப் பற்றி நகைச்சுவையாக கருத்து தெரிவித்திருந்தார் கோ.சுகுமாரன்.
இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்
பதிவர் பட்டறையில் அமைப்புக்குழுவில் இருந்தாலும் பல்வேறு பணிகளை நிறைவேற்றும் பணி எனக்கும் கோ.சுகுமாரன் வசமே இருந்தது. வேலைகளைப் பகிர்ந்து அளித்தபோதிலும் அந்தப் பணிகளைச் செய்வதற்கு பின் தொடர்ந்து சென்று முடிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் பல வேலைகள் இறுதியில் நாமே செய்து விடலாம் என்ற நிலையில் நாமே சுமக்க வேண்டியிருந்தது.
முதலில் அரங்கம் தேர்வு செய்வது தொடர்பாக, பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நடத்தலாம் என்று தொடங்கி புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை அரங்கத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்து, அங்குள்ள சில குறைபட்டினால் சற்குரு அரங்கம் என பின்னர் முடிவு செய்தோம். உணவு உள்பட சில காரணங்களால் தான் இந்த அரங்கம் தேர்வு செய்யப்பட்டது.
இணைய இணைப்பு BSNL நிறுவனத்திடம் இலவசமாக வழங்கும் படி கேட்டிருந்தோம். அவர்களும் அவ்வாறு வழங்குவதாக வாய்மொழியாக உறுதி அளித்திருந்தனர். நவம்பர் 20 அன்று அதற்கான முறைப்படியான கடிதம், பத்திரி்கைகளில் சிறகம் தொடர்பான வெளிவந்த செய்திகள் அடங்கிய ஒளிப்பட நகல் உள்ளிட்டவைகளையும் நாங்கள் அவர்களிடம் கொடுத்திருந்தோம். இலவசமாக வழங்கினால் BSNL நிறுவனத்திற்கு என்ன பயன் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்திருந்தோம். இணைய இணைப்பு அளிப்பதாக உறுதி அளித்திருந்தும், பின் கடைசி மூன்று நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 5 அன்று) இணைய இணைப்பு இலவசமாக அளிக்க இயலாது என்று கையை விரித்து விட்டனர்.
நிலைமை மிக மோசமானதால் BSNL நிறுவனத்திடம் என்ன திட்டம் என்றாலும் பரவாயில்லை, நாங்கள் பணம் கொடுக்கவும் தயார், இணைப்பை வழங்குங்கள் என்று கோரினோம். அதற்கு அவர்கள் தற்காலிக இணைப்பை வழங்குவதில்லை என்று கூறினர். ஆனால், ரூ.10,000/- முன்பணம் கட்டுங்கள் பின்னர் தற்காலிக இணைப்பு வழங்குவதைப் பற்றி நாங்கள் யோசிப்போம் என்று உதவிக் கோட்டப் பொறியாளராக (SUB DIVISIONAL ENGINEER) பொறுப்பு வகிக்கும் செல்வம் என்பவர் தெரிவித்தார். ஆனால், அவர்களின் இணைய தளத்தில் இவ்வாறு தற்காலிக இணைப்பு வழங்கலாம என்றும் அதற்கான கட்டணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பின்னர்தான் தெரிய வந்தது. http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm#temp http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm#temp BSNL Broadband -TEMPORARY CONNECTION (w.e.f. 01st April 2006) Particulars Tariff in Rs. Bandwidth Above 256 Kbps Installation Charges 500 Security deposit for modem 1000 Modem charges 200 Plan charges Double of the normal rental Additional usage charges As per plan applicable Note: The minimum charges shall be for a period of 15 days. ஏற்கனவே நான் இதனைப் பார்க்கவில்லை. ஆனால், புதுச்சேரி பி.எஸ். என்.எல். நிறுவனத்தின் தலைமை பொறியாளர் திரு.மார்ட்டின் ஆண்டோன் லியோ இவ்வாறு இலவச இணைப்பு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அங்கு பணிபுரிந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
பின்னர்தான் தெரிய வந்தது. http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm#temp http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm#temp BSNL Broadband -TEMPORARY CONNECTION (w.e.f. 01st April 2006) Particulars Tariff in Rs. Bandwidth Above 256 Kbps Installation Charges 500 Security deposit for modem 1000 Modem charges 200 Plan charges Double of the normal rental Additional usage charges As per plan applicable Note: The minimum charges shall be for a period of 15 days. ஏற்கனவே நான் இதனைப் பார்க்கவில்லை. ஆனால், புதுச்சேரி பி.எஸ். என்.எல். நிறுவனத்தின் தலைமை பொறியாளர் திரு.மார்ட்டின் ஆண்டோன் லியோ இவ்வாறு இலவச இணைப்பு வழங்குவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அங்கு பணிபுரிந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், இந்த நிறுவனத்தில் இருந்து கொண்டே நிறுவனத்தின் செயல்கள் பற்றி தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து பணி செய்யாத ஊழியர்களில் ஒருவராக இந்த செல்வம் இருக்கிறார். இது போன்ற பொறுப்பற்ற அதிகாரிகள் மீது BSNL நிறுவனம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (இது பற்றி மேலும் தகவல்கள் பின்னர் எழுதுவேன்).
கு.இராம்மூர்த்தி
இவ்வகையான பணிகளில் அதிக அக்கறை கொண்டவர். பயிற்சிப் பட்டறைக்கு வருகை புரிந்தவர்களின் பதிவைப் பதிவு செய்து கொடுத்தவர். சிறகக் கூட்டங்களுக்கு தவறாமல் வருகை தந்தவர்.
மு.முத்துக்கண்ணு
தொடக்கத்தில் உற்சாகமாக சிறகத்தின் பணிகளில் பங்கேற்றவர் உடல் நிலை காரணமாக சிறகத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்க இயலவில்லை.
செந்தமிழன்
மிகவும் ஆர்வமானவர். தனது சொந்த பணிகள் காரணமாக அதிகம் பங்கேற்க இயலவில்லை. எனினும் எனக்கு என ஒரு பணியை ஒதுக்குங்கள் அந்த பணியை நான் செய்து முடிக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார். காலம் கருதி அந்த பணியை அவரிம் முழுமையாக ஒப்படைக்க இயலவில்லை. இருந்தாலும் முடிந்த அளவு உதவியவர்.
பிரேம்குமார்
சென்னையில் இருப்பதால் எல்லாப் பணிகளிலும் இவரால் பங்கேற்க இயலவில்லை எனினும் கடைசி நாளில் பங்கேற்று பம்பரமாக செயல்பட்டார். சென்னை ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றவர்.
இரா.முருகப்பன்
ஆரம்பத்தில் ஆர்வமாக இருந்தவர், தனது பணி காரணமாக பட்டறை நடக்கும் நாளன்று கூட இவரால் கலந்து கொள்ள இயலவில்லை. ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்ப்பதால் இவரால் இதுபோன்ற எந்த பணியிலும் கலந்து கொள்ள இயலவில்லை.
ஊற்று
சிறகத்திற்குப் பல ஆலோசனைகளை வழங்கியவர். சென்னையில் இருப்பதால் அதிக பங்களிப்பை அளிக்க இயலவில்லை எனினும், சென்னைப்பதிவர் சந்திப்பின் போது நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டவர். சிறகம் தொடர்பான நேரடி பணிகளில் கலந்து கொள்ள இயலாமைக்கு இவரின் பணி ஒரு காரணமாக இருந்தது.
குணவதி மைந்தன்
இவர் ஒரு குறும்பட இயக்குநர். “குடும்ப விளக்கு” “வீராணம்” உள்ளிட்ட வேறு சில குறும்படங்களையும் இயக்கியவர். பட்டறை அன்று படப்பிடிப்புக்கு வெளிநாட்டிற்கு சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
ச.அனந்தகுமார்
புதுவையை சேர்ந்தவராக இருந்தாலும் சிறகம் தொடர்பான பணிகளில் ஏனோ அதிக ஆர்வம் காட்டவில்லை. பட்டறையில் கலந்து கொண்டு நன்றாக இருந்ததாக கூறினார்.
இந்தப் பட்டறை பலரின் உழைப்பால் தான் வெற்றி பெற்றது.
எனவே, இது தனிப்பட்ட "சுகுமாரன்களுக்கு" கிடைத்த வெற்றி என்றோ அல்லது "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் " வெற்றி என்றோ பதிவு செய்து பலரின் உழைப்பை இருட்டடிப்பு செய்ய விரும்பவில்லை.
இந்த வெற்றியில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை இந்தப் பதிவர் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
இரா.சுகுமாரன்
6 கருத்துகள்:
very nice writeup,
really a great effort is put up by u in churning out such a long writeup,
and
thanking every persons involved shows ur noble mindset.
ofcourse i missed this great event,
i came to know of this wonderful meet at 6.30p.m. on that day while chatting with vicky (vicky.in)
as for me
i am a blogger at ur neighbouring town cuddalore.
one of the writers at www.cuddaloreonline.blogspot.com
you are also welcome to my blog
www.coolsrini.blogspot.com &
www.funnyclick.blogspot.com
ofcourse i am changing over to wordpress platform in the near future.
c u
regards
srinivasan
எல்லோருக்கும் பங்கு உண்டு என்று சொன்னதற்கு நன்றி! எலோரையும் திருப்திப்படுத்தும் முயற்சி! இருப்பினும் நடத்தியவர்களுக்கு முக்கிய பங்கு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. நடத்தியவர்களுக்கு நன்றிகள்.
வணக்கம், சீனுவாசன், புதுவையில் கிராமப்புற பயிற்சிப் பற்றி திட்டமிடுகிறோம். அதில் கலந்து கொள்ளுங்கள். வரும் 20 சனவரி என திட்டமிட்டோம் ஆனால், அதற்கான அடிப்படை வேலைகள் ஏதும் செய்யவில்லை. இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தெரிவிக்கிறேன். அவசியம் கலந்து கொள்ளுங்கள். சனவரி 20 நடப்பதற்கான வாய்ப்பு இல்லை.
பட்டறை சிறப்பாக நடந்தமைக்கும், தொடர்ந்து கிராமப்புறப் பயிற்சிக்குத் திட்டமிட்டிருப்பதற்கும் பாராட்டுக்கள். பட்டறையின் வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைவரையும் அடையாளம் காட்டி நன்றி சொன்னது குற்ப்பிடத்தக்கது.
மேலும் புதிய வலைப்பதிவர்கள் உருவாகி எழுதத் தொடங்குவார்கள் என்று விரும்புகிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
thanks for the invite
interested to join at the event
hope it will b during sunday
kindly send me info regarding the event once u fix the date to my email id - srinieth@gmail.com
srinivasan
cuddalore
awaiting for any events of puducherry bloggers to come up
bye
srini
கருத்துரையிடுக